| 245 |
: |
_ _ |a வண்டியூர் சமய கருப்பணசாமி கோயில் - |
| 246 |
: |
_ _ |a கருப்பணசாமி கோயில் |
| 520 |
: |
_ _ |a மதுரை பாண்டி முனீசுவரர் கோயிலின் உபதெய்வமாக சமய கருப்பசாமியை வழிபடுகின்றனர். ஒரு முறை, வேட்டைக்குச் செல்லும் ஆங்கிலேயர் ஒருவர் இக்கோயிலில் உள்ள சமய கருப்பசாமியிடம் வந்து, தான் இன்றைக்கு எத்தனை மிருகங்களை வேட்டையாடப் போகின்றேன் என குறி கேட்டுள்ளார். அதற்கு சமய கருப்பசாமியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லையாம். அதேபோல், அந்த ஆங்கிலேயரும் அன்று ஒரு மிருகத்தைக்கூட வேட்டையாட முடியவில்லை. அதே கோபத்தில், சாமியின் கரம் மற்றும் சிரத்தை துண்டித்தார். பின்னர் தனது இருப்பிடத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்த ஆங்கிலேயர், கிராம எல்லையைத் தாண்டும் முன்பே அவரும் அவரது குதிரையும் கல்லாயினர். இதன் காரணமாகவே சமய கருப்பசாமி இன்று வரை கரம் மற்றும் சிரமின்றி காணப்படுகின்றார். |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், வண்டியூர் சமய கருப்பணசாமி கோயில், கருப்பணசாமி கோயில், கருப்பசாமி, கருப்பணசாமி, கருப்பு, கருப்பர், கருப்பணன், வண்டியூர், காவல் தெய்வங்கள், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a எம்.மூர்த்தி, எஸ்.எஸ்.கணேஷ், சமயராஜா, தனியரசு ராஜூபிள்ளை |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a நாயக்கர் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a வண்டியூர் கருப்பசாமி அழகுமலையான் அழகர் கோயிலிருந்து சித்திரை பௌர்ணமிக்கு மதுரை வரும் பொழுது எதிர்சேவை கொள்ளும் தலங்களுள் ஒன்று. |
| 914 |
: |
_ _ |a 9.9073812 |
| 915 |
: |
_ _ |a 78.1620366 |
| 923 |
: |
_ _ |a வண்டியூர் கண்மாய் |
| 925 |
: |
_ _ |a ஒருகால பூசை |
| 926 |
: |
_ _ |a மாசி மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a வண்டியூரில் உள்ள சமய கருப்பணசாமி கோயில் கருவறையில் கருப்பசாமி நாகதேவதையாக பெண்தெய்வமும் வழிபடப்பெறுகின்றனர். மூலவர்களின் இருபுறமும் விநாயகர் மற்றும் அம்மன் சுதைச் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. கோயில் வளாகத்தின் மையத்தில் சமய கருப்பணசாமியின் மிகப்பெரிய சுதைச்சிற்பம் காணப்படுகின்றது. பாய்ந்து செல்லும் வெண்குதிரையில் கருப்பணசாமி வீராவேசமாக அமர்ந்துள்ளார். கருப்பர் முறுக்கிய மீசையுடன் கையில் அரிவாளுடன் உள்ளார். குதிரையின் முன்னங்கால்கள் இரண்டு பூதகணத்தாரின் தலையில் வைக்கப்பட்டுள்ளன. குதிரையின் பக்கவாட்டில் கருப்பரைப் போற்றும் வீரர்களும் அவரது துணைவியர்களும் காட்டப்பட்டுள்ளனர். மேலும் வீச்சரிவாள் ஏந்தி நின்ற நிலையில் உள்ள மற்றுமொரு கருப்பசாமியும் இங்கு காணப்படுகிறார். |
| 930 |
: |
_ _ |a அழகர்மலையிலிருந்து அழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் சித்திரைத் திருவிழாவின் போது வண்டியூரில் உள்ள தலங்களில் மண்டகப்படியாக தங்குகிறார். அத்தலங்களுள் இதுவும் ஒன்று. |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு பல சிற்பங்களுடன் வழிபாட்டில் உள்ளது. கருப்பணசாமியின் கருவறை முழுவதும் செங்கல் தளியாகவே காட்சியளிக்கிறது. கருவறையின் விமானம் ஒற்றைத் தளத்தைக் கொண்டு விளங்குகிறது. கருவறை நீள்சதுர வடிவில் உள்ளது. கருவறையில் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ள பீடத்தின் மீது கருப்பணசாமி, நாகம்மாள், விநாயகர், அம்மன் ஆகிய சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. கோயில் வளாகத்தில் குதிரை மேல் செல்லும் கருப்பரின் பெரிய சுதைச்சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறை |
| 934 |
: |
_ _ |a வண்டியூர் மாரியம்மன் கோயில், வண்டியூர் தெப்பக்குளம், காலபைரவர் கோயில், சிவன் கோயில் |
| 935 |
: |
_ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வண்டியூருக்கு பேருந்துகள் செல்கின்றன. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a வண்டியூர் |
| 938 |
: |
_ _ |a மதுரை |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a மதுரை நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00422 |
| barcode |
: |
TVA_TEM_00422 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00422/TVA_TEM_00422_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-சமய-கருப்பணசாமி-கோயில்-0003.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00422/TVA_TEM_00422_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-சமய-கருப்பணசாமி-கோயில்-0001.jpg
TVA_TEM_00422/TVA_TEM_00422_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-சமய-கருப்பணசாமி-கோயில்-0002.jpg
TVA_TEM_00422/TVA_TEM_00422_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-சமய-கருப்பணசாமி-கோயில்-0003.jpg
TVA_TEM_00422/TVA_TEM_00422_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-சமய-கருப்பணசாமி-கோயில்-0004.jpg
TVA_TEM_00422/TVA_TEM_00422_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-சமய-கருப்பணசாமி-கோயில்-0005.jpg
TVA_TEM_00422/TVA_TEM_00422_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-சமய-கருப்பணசாமி-கோயில்-0006.jpg
|