MARC காட்சி

Back
பனஞ்சாடி திருநீலகண்டர் கோயில்
245 : _ _ |a பனஞ்சாடி திருநீலகண்டர் கோயில் -
246 : _ _ |a திருநீலகண்டர் கோயில்
520 : _ _ |a பனஞ்சாடி என்னும் ஊரின் மொட்டையாண்டவர் குளத்தின் கிழக்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் “மொட்டையாண்டவர் கோயில்“ என்றும், “திருநீலகண்டர் கோயில்“ என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இது முற்காலப் பாண்டியர் கட்டடடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோயிலின் அடிப்பகுதி முதல் கூரைப்பகுதி வரை கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையாலான விமானம் அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டும் கொண்டதாக தற்போது விளங்குகிறது. எளிய அமைப்புடைய இக்கோயில் கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை. கோட்டங்களில் தெய்வங்களை அமைக்காதிருப்பது பாண்டியர்களின் கலைப்பாணியாகும். கருவறை சதுர வடிவமுடையது. தாங்குதளத்தில் யானைவரி செல்கிறது. எனவே பிரதிபந்த அதிட்டானமாக திகழ்கிறது. கருவறை விமானம் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. முழுவதும் சிதிலமடைந்த இக்கோயில் பழமைத் தன்மையாக அதன் எச்சங்களைக் காட்டி நிற்கிறது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள யானைவரியும், பூமிதேசத்தில் உள்ள யாளிவரியும் குறிப்பிடத்தக்கவை. விமானத்தின் கழுத்துப்பகுதியில் நான்முகன், யோக நரசிம்மன், ஆலமர்ச்செல்வன் போன்ற கற்சிலைகள் இருந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக பல கல் நந்திகள் உள்ளன.
653 : _ _ |a பனஞ்சாடி கோயில், பனஞ்சாடி திருநீலகண்டர் கோயில், மொட்டையாண்டவர் கோயில், திருநெல்வேலிக் கோயில்கள், முற்காலப் பாண்டியர் கோயில்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது.
914 : _ _ |a 8.73719193
915 : _ _ |a 77.46874094
916 : _ _ |a திருநீலகண்டர்
927 : _ _ |a கல்வெட்டுகள் இல்லை.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள யானைவரியும், பூமிதேசத்தில் உள்ள யாளிவரியும் குறிப்பிடத்தக்கவை. விமானத்தின் கழுத்துப்பகுதியில் நான்முகன், யோக நரசிம்மன், ஆலமர்ச்செல்வன் போன்ற கற்சிலைகள் இருந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக பல கல் நந்திகள் உள்ளன.
932 : _ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டும் கொண்டதாக தற்போது விளங்குகிறது. எளிய அமைப்புடைய இக்கோயில் கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை. கோட்டங்களில் தெய்வங்களை அமைக்காதிருப்பது பாண்டியர்களின் கலைப்பாணியாகும். கருவறை சதுர வடிவமுடையது. தாங்குதளத்தில் யானைவரி செல்கிறது. எனவே பிரதிபந்த அதிட்டானமாக திகழ்கிறது. கருவறை விமானம் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. முழுவதும் சிதிலமடைந்த இக்கோயில் பழமைத் தன்மையாக அதன் எச்சங்களைக் காட்டி நிற்கிறது.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a அம்பாசமுத்திரம் கோயில்கள், தென்காசி சிவன் கோயில்
935 : _ _ |a அம்பாசமுத்திரம்- தென்காசி சாலையில் பனஞ்சாடி என்னும் ஊர் அமைந்துள்ளது. தென்காசியிலிருந்தும், அம்பாசமுத்திரத்திலிருந்தும் பனஞ்சாடி செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a தென்காசி, அம்பாசமுத்திரம்
938 : _ _ |a தென்காசி
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a தென்காசி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000040
barcode : TVA_TEM_000040
book category : சைவம்
cover images TVA_TEM_000040/TVA_TEM_000040_திருநீலகண்டர்-கோயில்_பாதை-0001.jpg :
Primary File :

TVA_TEM_000040/TVA_TEM_000040_திருநீலகண்டர்-கோயில்_பாதை-0001.jpg

TVA_TEM_000040/TVA_TEM_000040_திருநீலகண்டர்-கோயில்_முழுத்தோற்றம்-0002.jpg

TVA_TEM_000040/TVA_TEM_000040_திருநீலகண்டர்-கோயில்_நுழைவாயில்-0003.jpg

TVA_TEM_000040/TVA_TEM_000040_திருநீலகண்டர்-கோயில்_விமானம்-0004.jpg

TVA_TEM_000040/TVA_TEM_000040_திருநீலகண்டர்-கோயில்_விமானம்-சிகரம்-0005.jpg

TVA_TEM_000040/TVA_TEM_000040_திருநீலகண்டர்-கோயில்_கூரை-0006.jpg

TVA_TEM_000040/TVA_TEM_000040_திருநீலகண்டர்-கோயில்_தூண்-0007.jpg