MARC காட்சி

Back
ஸ்ரீபாண்டி முனிசுவரர் கோயில்
245 : _ _ |a ஸ்ரீபாண்டி முனிசுவரர் கோயில் -
246 : _ _ |a பாண்டி கோயில்
520 : _ _ |a பாண்டிய மன்னரே இங்கு முனீசுவரராக வழிபடப்படுவதாக தொன் நம்பிக்கை. கோயிலுக்கு வருபவர்கள், முதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் பாண்டி முனீசுவரரை வழிபடுகின்றனர். இங்குள்ள பாண்டி முனீசுவரர் புலால் உண்ணாதவர். ஆகையால், அவருக்கு வெண்ணாடை சார்த்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், சவ்வாது, சர்க்கரையில்லா பொங்கல், பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவைகளைக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். மேலும் இங்குள்ள சமய கருப்பசாமிக்கு, ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவைகளை படைத்தும் வழிபடுகின்றனர்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், காவல் தெய்வங்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், பாண்டி கோயில், ஸ்ரீபாண்டி முனீசுவரர், பாண்டி முனீஸ்வரர், மதுரை நகரம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a கிருஷ்ணா சத்யநாராயணன், கோபி நல்லையன், ஜெயபால், மோகன்ராஜ், பரிசெல்வம், பிரேம்நாத்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a மதுரை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள முனீசுவரர் கோயில்களில் மிகவும் முதன்மையானது. மதுரையை ஆண்டு பாண்டிய மன்னனே இங்கு முனீசுவரராக அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது.
914 : _ _ |a 9.9345053
915 : _ _ |a 78.1685678
923 : _ _ |a மேலமடை கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a பாண்டி முனீசுவரர் கோயிலில் பாண்டி முனீசுவரர் கருவறையில் தியான கோலத்தில் அமர்ந்துள்ளார். சமய கருப்புசாமி என்ற கருப்பசாமி காவல் தெய்வமாக இங்கு வழிபடப்படுகின்றது. மேலும் விநாயகர், சுப்பிரமணியர், ஆண்டிச்சாமி ஆகிய தெய்வங்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன.
930 : _ _ |a பாண்டி கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மேலமடையில் அமைந்துள்ள தொன்மையான கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவராக பாண்டி முனீசுவரர் வழிபடப்படுகிறார். பாண்டி முனீசுவரர் என்பவர், பாண்டிய மன்னர்களுள் ஒருவரான பாண்டியன் நெடுஞ்செழியன் மன்னரே இங்கு குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள் - பெரியசாமி என்ற தம்பதியர் கரூரிலிருந்து மதுரைக்கு குடிபெயர்ந்து வந்தனர். மதுரைக்கு வரும் வழியில் இருட்டிவிட்டதால், தற்போதைய மாட்டுத்தாவணிக்கு அருகேயுள்ள மேலமடையில் தங்க முடிவெடுத்து அங்கேயே உறங்கினர். இரவு, வள்ளியம்மாளின் கனவில் நீண்ட தாடியுடைய முனிவர் ஒருவர் வந்து, தான் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் எனவும், கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்திற்காக மறுபிறப்பெடுத்து, பாவத்தின் நிவர்த்தியாக இதே இடத்தில் ஈசனை நோக்கி எட்டடி மண்ணுக்குள் தியானம் செய்வதாகவும், தன்னை மீட்டெடுத்து வழிபட்டால் அவர்கள் குடும்பத்தை வாழவைப்பதாகவும் கூறியுள்ளார். திடுக்கிட்டெழுந்த வள்ளியம்மாள் நடந்தவற்றை கணவனிடம் கூற, எட்டடி மண்ணுக்குள் புதையுண்ட சிலையை எடுத்தனர். அதன்பின், பாண்டி முனீசுவரராக வழிபடத்தொடங்கி இங்கேயே ஒரு கோயிலையும் எழுப்பினர். வள்ளியம்மாளின் சமூகமே இக்கோயிலை இன்று வரை பூசை செய்தும், பராமரித்தும் வருகின்றனர்.
932 : _ _ |a பாண்டி முனீசுவரர் கோயில் வளாகம் பரந்த பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மக்கள் திருவிழா கூட்டம் போன்று கூடுவர். பொங்கல் படைத்தல், பலியிடுதல் போன்றவை நடைபெறுவதற்காக இப்பரந்த பரப்பு இன்றியமையாததாகிறது. தோரணவாயிலில் சிற்பங்களுடன் கூடிய முகப்பைப் பெற்று இக்கோயில் விளங்குகிறது. கருவறை விமானம் முழுவதும் செங்கல் சுதைப் பணியாகவே உள்ளது. விமானம் இரண்டு தளங்களைக் கொண்டதாக விளங்குகிறது. கருவறையின் மையப்பகுதியில் பாண்டி முனீசுவரர் விளங்குகிறார். கோயில் திருச்சுற்றில் கருப்பசாமியும், ஆண்டிச்சாமியும், விநாயகரும், சுப்பிரமணியரும் சிறு சிறு சந்நிதிகளில் வழிபாட்டில் உள்ளனர்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a யானைமலை தமிழ்-பிராமிக் கல்வெட்டு குகைத்தளம், இலாடன் கோயில், நரசிம்மர் குடைவரை
935 : _ _ |a மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து இராமேசுவரம், சிவகங்கை, மானாமதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராஜபாளையம் நோக்கி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகளும், பாண்டி கோயில் வாசலில் நின்று செல்லும்.
936 : _ _ |a காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
937 : _ _ |a பாண்டி கோவில்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00398
barcode : TVA_TEM_00398
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00398/TVA_TEM_00398_மதுரை_ஸ்ரீபாண்டி_முனிசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00398/TVA_TEM_00398_மதுரை_ஸ்ரீபாண்டி_முனிசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_00398/TVA_TEM_00398_மதுரை_ஸ்ரீபாண்டி_முனிசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_00398/TVA_TEM_00398_மதுரை_ஸ்ரீபாண்டி_முனிசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_00398/TVA_TEM_00398_மதுரை_ஸ்ரீபாண்டி_முனிசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_00398/TVA_TEM_00398_மதுரை_ஸ்ரீபாண்டி_முனிசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_00398/TVA_TEM_00398_மதுரை_ஸ்ரீபாண்டி_முனிசுவரர்-கோயில்-0006.jpg