| 245 |
: |
_ _ |a திருச்சென்னம்பூண்டி சடையார் கோயில் - |
| 246 |
: |
_ _ |a சடையார் கோயில், திருக்கடைமுடி நாதர், திருச்சடைமுடி நாதர் |
| 520 |
: |
_ _ |a கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இக்கோயில் வழிபாட்டில் இருந்துள்ளது. பல்லவர் காலத்தில் இக்கோயில் மண் தளியாக இருந்திருக்க வேண்டும். பல்லவர் காலக் கல்வெட்டுகள் கற்றூண்களிலே காணப்படுகின்றன. திருஞானசம்பந்தர் இத்தலத்தை திருக்கடைமுடி என்று பாடியுள்ளார். காவிரியின் வடகரைத் தலமாகவும், கொள்ளிடத்திற்கு தென்கரைத் தலமாகவும் சடையார் கோயில் அமைந்துள்ளது. காவிரியின் வளத்தினாலே அதன் கரையில் கட்டப்பட்டுள்ள இக்கற்றளி அதிகமான கொடைகளைப் பெற்றுள்ளது. பல்லவர் காலத்தில் மண்டளியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும். முதலாம் பராந்தகன் காலத்தில் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற பல காவிரிக் கரைத் தலங்களுள் இதுவும் ஒன்றாகும். தற்போது இக்கோயில் பிடாரி அம்மனுக்கு உரிய கோயிலாக ஊர்மக்களால் வழிபடப்படுகிறது. பல்லவர்கால தூண் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. நிருபதுங்க வர்மனின் அரசியார் அளித்த மாசிமக விழாவிற்கான கொடைகள் குறிப்பிடத்தக்கவை. பொன்கழஞ்சுகள் அதிகமாக கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விளக்குக் கொடைகள் சோழர்கள் காலத்தில் அளிக்கப்பட்டுள்ளன. கருவறை ஏகதள விமானத்தைப் பெற்றுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் இராமாயணப் புடைப்புச் சிற்பங்களும், வேதிகையில் சிவவடிவங்களும், தாய்த் தெய்வங்களும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. கோயில் தற்போது தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. |
| 653 |
: |
_ _ |a சடையார் கோயில், திருச்சென்னம்பூண்டி, திருச்சின்னம் பூண்டி, திருச்சடைமுடிநாதர், திருக்கடைமுடி நாதர், திருச்சிக் கோயில்கள், முதலாம் பராந்தகன் கோயில்கள், முற்காலச் சோழர்கலைப்பாணி, முற்காலச் சோழர் கலைக்கோயில்கள், பல்லவர் கல்வெட்டுகள், மாசிமகம் விழா, கோயிலடி |
| 700 |
: |
_ _ |a மதுரை கோ.சசிகலா |
| 710 |
: |
_ _ |a மதுரை கோ.சசிகலா |
| 905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. |
| 914 |
: |
_ _ |a 10.85822907 |
| 915 |
: |
_ _ |a 78.94657508 |
| 916 |
: |
_ _ |a திருச்சடைமுடியுடைய மகாதேவர், சடையார், திருக்கடைமுடிநாதர் |
| 918 |
: |
_ _ |a திரிபுரசுந்தரி |
| 927 |
: |
_ _ |a இக்கோயில் நுழைவாயில் முன்புறமுள்ள தூண்களில் பல்லவ மன்னர்களான மூன்றாம் நந்திவர்மன் மற்றும் நிருபதுங்கனின் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் மாசிமகம் விழா எடுக்கப்படுவதைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கல்வெட்டுகளில் பெரும்பாலும் பொன்கழஞ்சு வழங்கப்படுவதைக் காணலாம். இது வளமான பொருளாதார நிலையைக் குறிக்கிறது. சோழர்கள் காலத்தில் அதிகமான விளக்குக் கொடைகள் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. கல்வெட்டுஅறிக்கை ARE 1901 No. 283 முதல்(SII, VII) 303 முடிய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறை விமானம் தாங்குதளத்தில் இராமாயணக் காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. வேதிகை எனப்படும் தாங்குதள உறுப்பில் சிவவடிவங்களும், பிடாரி, யானைத்திருமகள், காளி, மகிசாசுரமர்த்தினி போன்ற தாய்த்தெய்வ வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக்கடவுளும், வடக்கில் நான்முகனும் உள்ளனர். மேற்குக் கோட்டத்தில் சிற்பம் இடம் பெறவில்லை. |
| 932 |
: |
_ _ |a சடையார் கோயில் கருவறையும், அர்த்தமண்டமும் கொண்ட எளிமையான கோயிலாகும். முழுவதும் கற்றளியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ளது. முகமண்டபம் சிதிலமடைந்துள்ளது. முகமண்டபத்திற்கு தாங்குதளம் மட்டுமே காணப்படுகின்றது. பராந்தகனின் பிறக் கோயில்களைப் போன்றே அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயில் விமானத்தின் தாங்குதளத்தில் இராமாயணப் புடைப்புச்சிற்பங்கள் அமைந்துள்ளன. சிவ வடிவங்களும், தாய்த்தெய்வங்களும் புடைப்புச்சிற்பங்களாக காணப்படுகின்றன. தற்போது தளப்பகுதி புனரமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கருவறைச் சுவரில் தேவக்கோட்டங்கள் அமைந்துள்ளன. கோட்டச் சிற்பங்களில் சில அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. |
| 933 |
: |
_ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a திருமழபாடி, கோயிலடி விஷ்ணு கோயில் |
| 935 |
: |
_ _ |a சென்னையிலிருந்து 342 கி.மீ. தொலைவில் உள்ள தஞ்சாவூரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் திருச்சென்னம்பூண்டி அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளி வழி கல்லணை செல்லும் வழியில் கோவிலடி பஸ் நிறுத்தம் சுமார் 12 கி.மீ.தொலைவில் உள்ளது. இக்கோயில் கோவிலடியிலிருந்து 3கி.மீ.தொலைவில் வடக்காக திருச்சென்னம்பூண்டி உள்ளது. இத்தலம் தற்போது சடையார்கோவில் என்றுஅழைக்கப்படுகின்றது. |
| 936 |
: |
_ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
| 937 |
: |
_ _ |a கல்லணை, திருமழபாடி, கோயிலடி |
| 938 |
: |
_ _ |a தஞ்சாவூர், திருச்சி |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a திருச்சி, தஞ்சாவூர் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000034 |
| barcode |
: |
TVA_TEM_000034 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_முகப்பு-0002.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_இலிங்கம்-0003.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_நந்தி-0004.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_சுவர்-0005.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_தேவகோட்டம்-0006.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_வீணாதரர்-0007.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_பின்புறம்-0008.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_நுழைவாயில்-0009.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_தூண்-0010.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_பிரம்மன்-0011.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_தாங்குதளம்-0012.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_தேவகோட்டம்-0013.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_தூண்-0014.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_கூடுமுகம்-0015.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_கல்வெட்டு-0016.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_கல்வெட்டுகள்-0017.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_முருகன்-0018.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_யாளிவரிசை-0019.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_அம்மன்-திருமுன்-0020.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_அம்மன்-0021.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_காலசம்காரமூர்த்தி-0022.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_தகவல்-பலகை-0023.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_பிட்சாடனர்-0024.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_திருமகள்-0025.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_காளி-0026.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_கஜசம்காரமூர்த்தி-0027.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_காளி-0028.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_மகிசாசுரமர்த்தினி-0029.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_சுக்ரீவன்-0030.jpg
TVA_TEM_000034/TVA_TEM_000034_சடையார்-கோயில்_ராமர்-0031.jpg
|