| 245 |
: |
_ _ |a கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி - |
| 246 |
: |
_ _ |a கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி அல்லது மீன் கடை பள்ளி |
| 520 |
: |
_ _ |a பழமையான ஜும்மா பள்ளிவாசல் ராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில் உள்ளது . கீழக்கரையில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் குறித்து பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. கீழக்கரை நடுத்தெருவில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், 17-ம் நூற்றாண்டில் ராமநாதபுரத்தில் ஆட்சி புரிந்த கிழவன் சேதுபதி காலத்தில் அமைச்சராக இருந்த வள்ளல் சீதக்காதியால் மத வேறுபாடுகளின்றி திராவிடக் கட்டிடக்கலை முறையில் உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன . |
| 653 |
: |
_ _ |a இசுலாம், இஸ்லாம், இசுலாமியம், மசூதி, பள்ளி, பள்ளிவாசல், ஜூம்மா மசூதி, கீழக்கரை, இராமநாதபுரம், மீன்கடை பள்ளி, இசுலாமியத் தலங்கள், பழைய ஜும்மா பள்ளி, பாதன் (பசன் இப்னு சாசன்) |
| 700 |
: |
_ _ |a க.த.காந்திராஜன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி 628-630 |
| 909 |
: |
_ _ |a 8 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. கி.பி 628-630 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மசூதி உலகின் மிகப் பழமையான மசூதிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. |
| 914 |
: |
_ _ |a 9.231635 |
| 915 |
: |
_ _ |a 78.784235 |
| 925 |
: |
_ _ |a ஐந்து காலத் தொழுகை |
| 926 |
: |
_ _ |a ரமலான், பக்ரீத், மிலாடி நபி |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது. நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறான சீறாப்புராணத்தை எழுதிய உமுறு புலவருக்கு ஆதரவாக இருந்த வள்ளல் சீதக்காதி கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மசூதிக்கு அருகில், முஸ்லீம் வர்த்தகர்-பயனாளியான சதகதுல்லா அப்பாவின் தர்கா உள்ளது. |
| 930 |
: |
_ _ |a தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் தென் பகுதியில் அமைந்துள்ளது கீழக்கரை என்ற பண்டைய துறைமுக நகரம். இங்கு பழைய ஜும்மா பள்ளி ( அல்லது) மீன் கடை பள்ளி என்ற தொன்மையான மசூதி உள்ளது. கி.பி 628-630 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மசூதி உலகின் மிகப் பழமையான மசூதிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. மேலும், இந்தியாவின் முதல் மசூதி என்றும் நம்பப்படும் கேரளாவின் கொடுங்கல்லூரில் உள்ள சேரமான் ஜுமா மஸ்ஜித் கட்டப்பட்ட காலத்தில் இம் மசூதியும் கட்டப்பட்டுள்ளது. முகம்மது நபியின் காலத்தில் யேமனின் (Yemen) ஆளுநரான பாதன் (பசன் இப்னு சாசன்) Baadhan (Bazan ibn Sasan) உத்தரவின்படி பாண்டிய மண்டலத்தில் இசுலாம் வருகைக்கு முந்தைய காலத்தில் யேமன் (Yemeni) வணிகர்கள் மற்றும் வர்த்தக குடியேற்றவாசிகளால் கி.பி 625-628-இல் இரண்டாம் கோஸ்ராவின் மகன் (பாரசீக மன்னர்) காவத் II இன் காலத்தில் அவர்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு கட்டப்பட்டது. பசன் இப்னு சாசன்,( Bazan Ibn Sasan) தமீம் இபின் சயீத் அல் அன்சாரி,( Tamim Ibn zayd al ansari) இப்னு பதூதா,( Ibnu Batutah) நாகூர் அப்துல் காதிர்,( Nagoor Abdul Cadir) ஏர்வாடி இப்ராஹிம் சாஹிப், (Ervadi Ibrahim Sahib) ஒட்டோமான் முராட்டின் சுல்தான் (Sultan of Ottoman Murad) மற்றும் பிற பிரபல இசுலாமிய அறிஞர்கள் மசூதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரபு நாட்டுப் பயணியான இப்னு பதூதா (1368-69) வின் தனது பயணக் குறிப்பில் இந்த இடத்திற்கு அவர் வருகை தந்த போது அங்கு அதிக அளவில் அரேபியர்கள் குடியேறியிருந்ததால் அது அரேபியா போல காட்சியளித்தாகக் குறிப்பிட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் சதகதுல்லாவைப் பற்றி பல வகையான பஜனை பாடல்கள் பாடுகிறார்கள். |
| 932 |
: |
_ _ |a ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இம் மசூதி 1036 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 17ம் நூற்றாண்டில் இராமநாத மன்னர்கள் மற்றும் கீழக்கரை வணிகர்களால் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த மசூதி திராவிட இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இம் மசூதி சோழர் கால கோயிலைப் போல மண்டபத்துடன் கூடிய கருவறை மற்றும் அழகிய கற்தூண்களுடன் காணப்படுகின்றது. இம் மசூதியின் தோற்றம் வெளி மற்றும் உட்புறத்தில் திராவிட கோயில் கட்டிடக்கலை பாணியில் இருப்பினும் தூண்கள் மற்றும் சுவர்களில் இறை உருவங்கள் ஏதும் காணப்படவில்லை. பிரார்த்தனையின் திசையை அடையாளம் காண அனைத்து மசூதிகளைப் போல சுவரில் மிஹ்ராப் (Mihrab) உள்ளது, இது ஒரு மசூதி என்பதற்கான ஒரே சான்று. மசூதியின் சுவர்களில் கலை நயமிக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வட்டார அழகியல் கூற்றுடன் காணப்படுகின்றது. விட்டங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சுவரில் ஒரு வளைவு வணங்குவதற்கான திசையைக் குறிக்கிறது. |
| 933 |
: |
_ _ |a கீழக்கரை பள்ளிவாசல் கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள் |
| 934 |
: |
_ _ |a ஏர்வாடி தர்கா, திருப்புல்லாணி கோயில் |
| 935 |
: |
_ _ |a இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்கு பேருந்தில் செல்லலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a கீழக்கரை |
| 938 |
: |
_ _ |a இராமநாதபுரம் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a கீழக்கரை விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000336 |
| barcode |
: |
TVA_TEM_000336 |
| book category |
: |
இசுலாம் |
| cover images TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0001.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0002.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0003.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0004.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0005.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0006.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0007.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0008.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0009.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0010.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0011.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0012.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0013.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0014.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0015.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0016.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0017.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0018.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0019.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0020.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0021.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0022.jpg
TVA_TEM_000336/TVA_TEM_000336_இராமநாதபுரம்_கீழக்கரை_ஜும்மா-பள்ளி-0023.jpg
|