| 245 |
: |
_ _ |a திருவாரூர் பரவையுண் மண்டளி - |
| 246 |
: |
_ _ |a ஆரூர் பரவையுண்மண்டளி |
| 520 |
: |
_ _ |a இக்கோயில் திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் தேரடிக்கு எதிரில் உள்ளது. இத்தல இறைவனின் பெயர் தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் துர்வாசர் கோவில் என்று தான் அழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது இத்தலம். இக்கோயிலின் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும், பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன. சுந்தரரின் தேவியார் பரவை நாச்சியார் வழிபட்ட தலம் ஆகும். பரவையுண் மண்டளி என்பதில் பரவை என்பது கடலைக் குறிக்கிறது. |
| 653 |
: |
_ _ |a கோயில், சைவம், சிவன், சோழர், சோழர் கலைப்பாணி, கலைக் கோயில், தொல்லியல் துறை மரபுச் சின்னம், சோழர் காலக் கோயில், ஆரூர், திருவாரூர், பரவையுண் மண்டளி, தேவாரம், ஏழாம் திருமுறை, சுந்தரர், தூவாய் நாதர், பஞ்சின் மெல்லடியம்மை |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a திரு.கடம்பூர் விஜய் |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலம். சுந்தரர் இத்தலத்தைப் பாடியுள்ளார். |
| 914 |
: |
_ _ |a 10.76765991 |
| 915 |
: |
_ _ |a 79.63872313 |
| 916 |
: |
_ _ |a தூவாய் நாதர் |
| 918 |
: |
_ _ |a பஞ்சின் மெல்லடியம்மை |
| 923 |
: |
_ _ |a அக்னி குளம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி ஆரூத்ரா தரிசனம், மாசி தெப்போத்சவம் |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் சிவலிங்க வடிவாக இறைவன் எழுந்தருளியுள்ளார். தேவகோட்டங்களில் உள்ள சிற்பங்களில் தென்முகக் கடவுள், கணபதி ஆகிய இறையுருவங்கள் உள்ளன. விமானத்தின் தளப்பகுதியில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இறைவி திருமுன்னில் நின்றநிலையில் காணப்படுகிறார். |
| 930 |
: |
_ _ |a ஊழிக்காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகைக் காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம் "இத்தலத்தின் அக்னி மூலையில் குளம் அமைத்து தன்னை வழிபட்டால் கடல் அமைதியடையும். உயிர்கள் காப்பாற்றப்படும்"' என்றார். அதன்படி துர்வாசர் தலைமையில் முனிவர்கள் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து இறைவனை வழிபட்டனர். முனிவர்களின் வழிபாட்டினை ஏற்ற சிவன் பொங்கிவந்த கடலை அக்னி மூலையில் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக் கொண்டார். கோயிலின் அக்னி மூலையில் அமைந்துள்ள இககுளம் தனி சிறப்புடையது. துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தினால் இத்தல இறைவனுக்கு துர்வாச நாயினார் என்ற பெயர் ஏற்பட்டது. |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் மூன்று நிலை இராஜகோபுரம் கொண்டுள்ளது. சிறிய கற்றளியாக விளங்கும் இக்கோயில் கருவறை விமானத்தின் தளப்பகுதி சுதையாலானது. விமானத்தின் தேவகோட்டங்களில் இறையுருவங்கள் உள்ளன. கருவறைத் திருச்சுற்றின் வெளியில் நந்தி, பலிபீடம் ஆகியன அமைந்துள்ளன. முதற்சுற்றில் சிறு சன்னதிகள் உள்ளன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a திருவாரூர் தியாகராஜர் கோயில், திருக்குவளை, திருக்கண்ணமங்கை, திருவலிவலம் |
| 935 |
: |
_ _ |a திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கிழக்கு ரதவீதியில் உள்ள தேரடிக்கு எதிரில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை - மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை |
| 937 |
: |
_ _ |a திருவாரூர் |
| 938 |
: |
_ _ |a திருவாரூர் |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a திருவாரூர் வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000251 |
| barcode |
: |
TVA_TEM_000251 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000251/TVA_TEM_000251_திருவாரூர்_பரவையுன்மண்டளி-கோயில்-0002.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000251/TVA_TEM_000251_திருவாரூர்_பரவையுன்மண்டளி-கோயில்-0001.jpg
TVA_TEM_000251/TVA_TEM_000251_திருவாரூர்_பரவையுன்மண்டளி-கோயில்-0002.jpg
TVA_TEM_000251/TVA_TEM_000251_திருவாரூர்_பரவையுன்மண்டளி-கோயில்-0003.jpg
TVA_TEM_000251/TVA_TEM_000251_திருவாரூர்_பரவையுன்மண்டளி-கோயில்-0004.jpg
TVA_TEM_000251/TVA_TEM_000251_திருவாரூர்_பரவையுன்மண்டளி-கோயில்-0005.jpg
TVA_TEM_000251/TVA_TEM_000251_திருவாரூர்_பரவையுன்மண்டளி-கோயில்-0006.jpg
TVA_TEM_000251/TVA_TEM_000251_திருவாரூர்_பரவையுன்மண்டளி-கோயில்-0007.jpg
|