MARC காட்சி

Back
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
245 : _ _ |a திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் -
246 : _ _ |a திருக்கோளூர்
520 : _ _ |a இத்திருத்தலத்தினை நம்மாழ்வார் மட்டும் 12 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீஸ்வாமி தேசிகன் தனது ப்ரபந்த ஸாரத்தில் இத்தலத்தினையும் மதுரகவியாழ்வாரின் அவதாரத்தையும் கூறுகிறார். மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார். மதுர கவியாழ்வாரின் அவதாரதினத்தையும் திருக்கோளுரையும்ஸ்ரீ மணவாள மாமுனிகள் பின்வருமாறு கூறுகிறார்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திவ்யதேசம், மங்களாசாசனம், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், திருக்கோளூர், ஸ்ரீசுவாமி தேசிகன் பிரபந்த ஸாரம், மணவாள மாமுனிகள், வைத்தமாநிதிப் பெருமாள், வைணவப் திருப்பதி, நவதிருப்பதி, பாண்டியநாட்டுத் திருத்தலம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 4639273607
905 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பாண்டியர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த பாண்டிய நாட்டுத் திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
914 : _ _ |a 8.5967365
915 : _ _ |a 77.9576248
916 : _ _ |a காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) பூமிபாலர்
918 : _ _ |a குமுதவல்லி, கோளூர் வள்ளி
923 : _ _ |a குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம், தாமிரபரணியாறு
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, பவித்ர உற்சவம்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான் இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார்.
930 : _ _ |a பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றிய தகவல்களையும் தெரிவிக்கிறது. ஒன்பது வகையான நவநிதிகளுக்கும் எண்ணிலடங்காப் பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி (காப்பாளனாக) அளகா புரியிலிருந்து அரசாண்ட குபேரன் சிறந்த சிவபக்தனாயிருந்தான் ஒரு சமயம் அவன் சிவனை வழிபடக் கைலாயம் சென்றான். அப்போது சிவன் தனது பத்தினியான உமையவளோடு அன்போடு பேசிக்கொண்டிருக்க உமையவளின் அழகில் மயங்கி ஒற்றைக் கண்ணால் பார்த்தான் குபேரன். இதைப் பார்த்து விட்ட உமையவள் மிக்க சினங்கொண்டு “நீ கெட்ட எண்ணத்துடன் பார்த்ததால் ஒரு கண்ணை இழப்பதுடன் உருவமும் விகாரமடையக் கடவது” என்று சபித்து நவநிதிகளும் உன்னை விட்டகலக் கடவதென்றார். உடனே நவநிதிகளும் குபேரனை விட்டகன்று, தாங்கள் தஞ்சமடைவதற்குத் தகுந்த தலைவன் இல்லையென்றும், தம்மைக் காத்து அபயம் அளிக்குமாறும், பொருனை நதிக்கரையில் நீராடித் திருமாலைத் துதிக்க, அப்பொருனைக் கரையிலே நவநிதிகளுக்கும் காட்சி கொடுத்து எம்பெருமான் அந்நிதிகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல அவைகளை அரவணைத்துப் பள்ளி கொண்டான். நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து, பாதுகாப்பளித்து அதன் மீது சயனங்கொண்டதால் “வைத்தமாநிதிப் பெருமாள்” என்ற திருநாமம் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று. நிதிகள் எல்லாம் இங்கு தீர்த்தமாடியதால் இந்த தீர்த்தத்திற்கும் “நிதித்தீர்த்தம்” என்றே பெயர் உண்டானது. முன்னொரு காலத்தில் தர்மத்தை (தர்ம தேவதையை) அதர்மம் தோற்கடித்தது. எங்கும் அதர்மம் பரவியது. தோற்றுப் போன தர்மம் இந்த நிதி வனத்திற்கு வந்து இப்பெருமானை அண்டி தஞ்சம் அடைந்திருந்தது. அதர்மத்தினால் உண்டான தொல்லை தாங்க முடியாத தேவர்கள், தர்மம் தஞ்சம் புக்கிருந்த இத்தலத்திற்கு வந்து சேர, அதை பின் தொடர்ந்து அதர்மமும் இங்கு வந்து சேர, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பெரும் யுத்தம் நடந்து, இறுதியில் எம்பெருமானின் அருள்பெற்ற தர்மம் வென்றது. இஃதிவ்வாறிருக்க, தன் தவறுணர்ந்த குபேரன் பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்புக் கோர, அதற்கவர் பார்வதியிடமே மன்னிப்புக் கோருமென்று கூற, குபேரன் உமையவளின் பாதம் பணிந்து மன்னிப்புக் கோரினான். குபேரனை நோக்கிப் பார்வதி கூறுகிறாள். நான் சபித்ததைப் போலவே உனக்கு இனிமேல் ஒரு கண்ணும் தெரியாது. உன் மேனியின் விகாரமும் மறையாது. ஆனால் நீ இழந்த நவநிதியங்களை மட்டும் பெற்று வாழ்தற்கு ஒரு உபாயம் உண்டு. உன்னைவிட்டுப் பிரிந்த நவநிதிகள் தாமிரபரணி நதி தென்கரையில் தர்மப் பிசுன ஷேத்திரத்தில் திருமாலைத் தஞ்சம் அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அங்கு சென்று ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே தவம் செய்து இழந்த நிதியினைப் பெறுக என்றாள். திருக்கோளூர் வந்து சேர்ந்த குபேரன், வைத்த மாநிதிப் பெருமாளைக் குறித்துப் பெருந்தவஞ் செய்து மன்றாடி நிற்க, ஒரு மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் எம்பெருமான் காட்சி கொடுத்து, “உன் தவத்தை நான் மெச்சினேன். இருப்பினும் செல்வம் யாவும் உனக்கு இப்போதே தரமுடியாது. கொஞ்சம் தருகிறேன் பெற்றுக்கொள்” என்று கொஞ்சம் செல்வத்தைத் தர அதைப் பெற்ற குபேரன் “இத்தகு நிதியாகிலும் வைத்திருக்கப் பெற்றோமே யென்று” எண்ணித் தன் இருப்பிடம் சேர்ந்தான்.
932 : _ _ |a இழந்த செல்வத்தைப் பெற இப்பெருமானை வழிபட்டால் இயலும் என்ற நம்பிக்கை உண்டு. பிரம்மாண்ட புராணத்திலேயே இதற்கொரு கதை பேசப்படுகிறது. வியாச வம்சத்தில் வந்த தர்ம குப்தன் என்பவன் 8 ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மிகுந்த தரித்திரனாக ஆகி, வறுமையினின்றும் மீள முடியாத நிலையேற்பட தமது குலகுருவாகிய நர்மதா நதிக்கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த பரத்வாஜ முனிவரைச் சரணடைய, தமது ஞானக்கண்ணால் நடந்ததையறிந்து, தர்மகுப்தனை நோக்கி, முற்பிறவியில் பெருஞ் செல்வத்திற்கு அதிபதியான ஒரு அந்தணனாகப் பிறந்த நீ, யாருக்கும் ஒரு தர்மமும் செய்யாது, பணத்தாசை பிடித்து அலைந்து திரிபவனாயிருந்தாய், உன் ஊர் அரசன் உன்னிடம் வந்து உனக்குள்ள செல்வம் எவ்வளவு யென்று கேட்க, நீ ஒன்றுமில்லை என்று பொய் கூறினாய் இதனால் உன் செல்வம் முழுவதும் கள்வர்களால் அபகரிக்கப்பட்டு, மன நோயால் பீடிக்கப்பட்டு இறந்தாய். பிராமணனாகவே இப்பிறவியில் பிறந்தாலும் உன் பழவினை உன்னைத் தொடர்கிறது. இதற்கு ஒரே மார்க்கம், நவநிதிகளும் சரணடைந்துள்ள, திருக்கோளூர் வைத்தமாநிதியைத் தொழுதால் உனது சாபந் தீருமென்று கூறினார். தர்ம குப்தனும் அவ்விதமே வந்து (தன் குடும்பத்துடன்) வெகு காலம் இப்பெருமானைச் சேவித்து எண்ணற்ற பணிவிடைகளைச் செய்து கொண்டிருக்க, ஒரு நாள் நீராடச் செல்லுங்காலை மாதனங் கண்டெடுத்து, மீளவும் பெருஞ் செல்வந்தனாகி நெடுங்காலம் சுகவாழ்வு வாழ்ந்திருந்தான். குபேரனும், தர்ம குப்தனும் இழந்த செல்வத்தைப் பெற்றதால் இழந்த பொருளை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த திருத்தலமாக இது கருதப்படுகிறது. இத்தலத்துப் பெருமாள் (வைத்தமாநிதிப் பெருமாள்) தலைக்கு மரக்கால் வைத்துப் படுத்தார் இதற்கு காரணம் இப்பெருமாள் செல்வத்தைப் பாதுகாத்துச் செல்வமளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து கையில் அஞ்சனம், மை, போன்றன தடவி நிதி எங்கிருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறுவர். மரக்கால் வைத்து எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்ய தேசமான திரு ஆதனூரில் மட்டுமே. இவ்வூரில் கல்வி கேள்விகளில் சிறந்த “விஷ்ணுசேநர்” என்ற முன்குடுமிச் சோழிய ஸ்ரீவைஷ்ணவர் வாழ்ந்து வந்தார். வைத்த மாநிதிப் பெருமாளிடம் மாறாத அன்பு பூண்டிருந்த இவருக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று அவதரித்த தவப்புதல்வரே மதுர கவியாழ்வார் ஆவார். ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன் மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும். நம்மாழ்வாரான சூரிய உதயத்திற்கு “அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்) போன்றது இவர் அவதாரம் என்று பெரியோர் கூறுவர். திருப்புளிங்குடி நிகழ்ச்சியைப் போலவே, இராமானுஜர் இவ்வூரை அணுகியதும், வைணவ இலச்சினையுடன் எதிர்ப்பட்ட ஒரு பெண்ணை வணங்கி நீயெங்கு நின்று புறப்பட்டாய் என்று கேட்க, திருக்கோளூரிலிருந்து விடை கொண்டேன் என்று அவள் சொல்லவும் அவளை நோக்கி, இராமானுஜர் “ஒருவா கூறை யெழுவருடுத்துக் காய் கிழங்கு சாப்பிட்டு, திண்ணமென்னிள மான்புகுமூர் திருக்கோளூரே என்று” எல்லோரும் புகும் ஊர் உனக்குப் புறப்படும் ஊராயிற்றா என்றார். அதற்கவள் (இவ்வூரில் பிறந்து வடதேச யாத்திரை சென்று காய், கனி, கிழங்குகளைப் புசித்து வந்த மதுரகவியாழ்வார் ஜோதி தெரிந்து மீண்டும் இவ்வூருக்கே வந்து நின்றதை மனதிற்கொண்டே இராமானுஜர் இங்ஙனம் கூறுகின்றாறெண்ணி) பல அருஞ்செயல்கள் செய்த அடியவர்களைப் போல யானேதும் அருஞ்செயல்செய்தேனோ, முதல் புழுக்கைவயலில் கிடந்தென், வரப்பிலே கிடந்தென் என்று பதிலளிக்க, இதைக்கேட்ட இராமானுஜர் இவளதறிவு கண்டு வியந்து, இவளில்லத்தில் விருந்துண்டு சென்றார்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயில், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில், ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்
935 : _ _ |a நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய ஷேத்திரம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சற்றே தென்கிழக்கில் உள்ளது. ஆழ்வார் திருநகரிலியிருந்து பேருந்து வசதி இருப்பினும் நடந்து சென்று சேவித்து வரலாம். இது ஒரு மிகச் சிறிய கிராமம்.
936 : _ _ |a காலை 6.30 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a ஆழ்வார் திருநகரி
938 : _ _ |a ஆழ்வார் திருநகரி
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a ஆழ்வார் திருநகரி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000229
barcode : TVA_TEM_000229
book category : வைணவம்
cover images TVA_TEM_000229/TVA_TEM_000229_திருக்கோளூர்_வைத்தமாநிதிப்பெருமாள்-கோயில்-0006.jpg :
Primary File :

cg103v044.mp4

TVA_TEM_000229/TVA_TEM_000229_திருக்கோளூர்_வைத்தமாநிதிப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000229/TVA_TEM_000229_திருக்கோளூர்_வைத்தமாநிதிப்பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000229/TVA_TEM_000229_திருக்கோளூர்_வைத்தமாநிதிப்பெருமாள்-கோயில்-0003.jpg

TVA_TEM_000229/TVA_TEM_000229_திருக்கோளூர்_வைத்தமாநிதிப்பெருமாள்-கோயில்-0004.jpg

TVA_TEM_000229/TVA_TEM_000229_திருக்கோளூர்_வைத்தமாநிதிப்பெருமாள்-கோயில்-0005.jpg

TVA_TEM_000229/TVA_TEM_000229_திருக்கோளூர்_வைத்தமாநிதிப்பெருமாள்-கோயில்-0006.jpg

TVA_TEM_000229/TVA_TEM_000229_திருக்கோளூர்_வைத்தமாநிதிப்பெருமாள்-கோயில்-0007.jpg

TVA_TEM_000229/TVA_TEM_000229_திருக்கோளூர்_வைத்தமாநிதிப்பெருமாள்-கோயில்-0008.jpg