| 245 | : | _ _ |a திருஎவ்வுள் வீரராகவப் பெருமாள் கோயில் - |
| 246 | : | _ _ |a திருஎவ்வுள், வீச்சாரண்யச் ஷேத்ரம், எவ்வுள்ளுர் |
| 520 | : | _ _ |a இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் எவ்வுள்ளில் கிடக்கிறாரென்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் உண்டு. திருமழிசையாழ்வாரால் ஒரு பாடலாலும் திருமங்கையாழ்வாரால் பத்துப் பாசுரங்களிலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். என்னுடைய இன்னமுதை, எவ்வுள் பெருமலையை என்று தமது பெரிய திருமடலில் திருமங்கை மயங்கி நிற்பார். திருவேங்கடவனுக்குள்ள சுப்ரபாதம் போன்று இப்பெருமானுக்கும் வீரராகவ சுப்ரபாதம் உண்டு. ஸ்ரீகிங்கிருஹேசஸ்துதி என்ற பெயரால் சுவாமி தேசிகன் இப்பெருமானுக்கு தனி ஸ்துதி நூல் ஒன்று யாத்துள்ளார். வடலூர் இராமலிங்க அடிகளார் இப்பெருமாள் மீது பக்திகொண்டு திருப்பஞ்சகம் என்னும் ஐந்து பாக்களைப் பாடியுள்ளார். இத்தலம் புத்திரப்பேறளிக்கும் தலமாகவும், திருமணமாகாதவர்கள் வேண்டிக்கொண்டால் திருமணம் சித்திக்கும் தலமாகவும், எத்தகைய கொடூர நோயாளியும் இப்பெருமானை மனமுருகவேண்டி இங்குள்ள ஹ்ருத்த பால நாசினியில் நீராடி நோய் நீங்கப் பெறுவதால் நோய் நீக்கும் ஸ்தலமாகவும், ஒரு பெரிய பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இப்பெருமானை வேண்டினோர்க்கு நோய் நீங்கப்பெறுவது கண்கூடு. எனவே இப்பெருமானுக்கு வைத்திய வீரராகவன் என்னும் சிறப்புத் திருநாமமுண்டு. சகல பாபங்களையும் போக்கும் பாபநாசினியாகத் திகழ்கிறது இத்தலம். அமாவாசையன்று இதில் நீராடுவது சகல பாபங்களையும் போக்குமென்பது ஐதீஹம். தை அமாவாசையன்று இங்கு பெருந்திரளாக பக்தர்கள் கூடியிருந்து நீராடுவர். ஹிருத்த, இருதயத்தில் உள்ள, பாபநாசினி-பாபங்களை நாசம் செய்யவல்லதால் இத்தீர்த்தத்திற்கு ஹ்ருத்த பாபநாசினி என்னும் பெயருண்டாயிற்று இத்தீர்த்தமும் சன்னதியும் அஹோபில மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும். |
| 653 | : | _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திவ்யதேசம், மங்களாசாசனம், திருமங்கையாழ்வார், ஸ்ரீவீரராகவப் பெருமாள், ஸ்ரீவீரராகவ வைத்தியநாதசுவாமி, திருவள்ளூர், திருஎவ்வுள், எவ்வுள்ளூர், தொண்டை நாட்டுத் தலம் |
| 700 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 | : | _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், விசயநகரர் |
| 909 | : | _ _ |a 2 |
| 910 | : | _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
| 914 | : | _ _ |a 13.1424538 |
| 915 | : | _ _ |a 79.9063642 |
| 916 | : | _ _ |a வீரராகவப் பெருமாள் |
| 917 | : | _ _ |a வீரராகவப் பெருமாள் |
| 918 | : | _ _ |a கனக வல்லி (வஸு மதி தேவி) |
| 923 | : | _ _ |a ஹ்ருத்தபாப நாசினி |
| 924 | : | _ _ |a பாஞ்சராத்திரம் |
| 925 | : | _ _ |a ஆறு கால பூசை |
| 926 | : | _ _ |a தை மாதம் பிரம்மோற்சவம், சித்திரை மாதம் பிரம்மோற்சவம், பவித்ர உற்சவம், தை அமாவாசை, வைகுண்ட ஏகாதசி |
| 927 | : | _ _ |a பிற்காலப் பல்லவ மன்னர்கள் மற்றும் விசயநகரர் காலக் கல்வெட்டுகள் இங்கு காணக்கிடைக்கின்றன. |
| 929 | : | _ _ |a வீரராகவப் பெருமாள், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். கனகவல்லித் தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலம். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் சிறப்புப் பெற்றவை. |
| 930 | : | _ _ |a இத்தலம் பற்றி மார்க்கண்டேய புராணத்தின் 100 முதல் 111 வரையிலான அத்தியாயங்களில் பேசப்பட்டுள்ளது. கிரேதாயுகத்தில் புரு புண்ணியர் எனப் பெயர் கொண்ட அந்தணர் ஒருவர் தமது மனைவியுடன் பத்ரியில் புத்திரப்பேறு வேண்டி சாலியக்ஞம் என்னும் பெயர் கொண்ட யாகம் தொடங்கி சாலி எனப்படும் நெல்மணிகளால் அந்த யாகத்தைச் செய்தார். யாகத்தின் முடிவில் யாக குண்டலியில் தோன்றின மகாவிஷ்ணு மஹாபுருஷரே உமது யாகத்தை மெச்சினோம் நீர் வேண்டின வரம் கேளுமென்ன, புத்திர பாக்கியம் கருதியே யாம் இந்த யாகம் துவங்கியதாகவும், தமக்குப் புத்திரப் பேறு வேண்டுமென்றும் கேட்க அப்படியே உமக்குப் புத்திரப் பேறு அளித்தோம், நீர் சாலியக்ஐம் செய்து புத்திரப்பேறு பெற்றபடியால் உமக்குப் பிறக்கும் புத்திரன் சாலிஹோத்ரன் என்ற பெயருடன் பிரசித்தி பெற்றுத் திகழ்வான் என்று கூறியருளினார். அவ்வாறே பிறந்து வளர்ந்த சாலி ஹோத்ரரும் தக்க பருவமும், ஞானமும் எய்திய பிறகு தீர்த்த யாத்திரை தொடங்கினார். அவ்விதம் வருங்காலையில் எண்ணற்ற ரிஷிகள் தவமியற்றும் வீட்சாரண்யம் எனப்படும் இவ்விடத்தையடைந்து இங்குள்ள ஹ்ருதத்த பாப நாசினி என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடிச் செல்வதைக் கண்டு இந்த ஆரண்யத்தில் ஒரு குடில் அமைத்து நெடுங்காலம் பெரும் பக்திபூண்டு எம் பெருமானிடம் பக்தி செலுத்திப் போது போக்கி வந்தார். இவ்வாறு தினந்தோறும் இவர் மிகுந்த ஈடுபாட்டுடன் பூஜை செய்து வருகையில் எப்போதும் போல் ஓர் நாள் அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு அமுது படைத்து யாராயினும் அதிதி வருவார்களா என்று காத்திருந்தார். இந்த விரதத்தைப் பன்னெடுங்காலம் விடாது பின்பற்றி வந்தார் சாலிஹோத்ரர். இந்நிலையில் அதிதியை எதிர்பார்த்திருந்த அந்நாளில் இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் தானே ஒரு முதியவர் ரூபத்தில் வந்து கேட்க தாம் வைத்திருந்த மாவில் பாதியைக் கொடுத்தார் சாலிஹோத்திரர். அதை உண்ட பின்பும் தமது பசியடங்கவில்லையென்று முதியவர் கேட்க தனக்கு வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார். அதனையும் உண்டு முடித்த எம்பெருமான் உண்ட மயக்கால் மிக்க களைப்பாயுள்ளது, படுக்கச் சற்று இடம் வேண்டும் எங்கு படுக்கலாமென்று கேட்க சாலி ஹோத்ரர் தமது பர்ணக சாலையைக் காட்டி இவ்வுள் தேவரிருடையதே இங்கு சயனிக்கலாம். என்று சொல்ல, தனது கிழச் சொரூபத்தை மாற்றிய எம்பெருமான் தெற்கே திருமுகம் வைத்துச் சயனித்தார். ஒன்றுமே புரியாத சாலிஹோத்தரர் தாம் செய்த பாக்கியத்தை எண்ணி எம்பெருமானைப் பணிந்து நிற்க தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை ஆசீர்வதித்து என்ன வரம் வேண்டுமென்று கேட்க, இதே திருக்கோலத்தில் எம் பெருமான் இவ்விடத்திலேயிருந்து அருள்பாலிக்க வேண்டுமென சாலிஹோத்ர முனிவர் வேண்ட எம்பெருமான் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியும் அதற்கிசைந்து அவ்வண்ணமே சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார். முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி காட்சியளித்தார். உடனே விஜயகோடி விமானத்துடன் இத்தலம் உருப்பெற்றது. எம்பெருமான் தாமே வந்து முனிவரிடம் கிங்கிருஹம் ‘படுக்க எவ்வுள்’ எங்குற்றதெனக் கேட்டதால் வடமொழியில் கிங்கிருஹரபுரமென்றும் தமிழில் எவ்வுள்ளூர் என்று மாயிற்று. எம்பெருமானுக்கும் கிங்கிருஹசன், எவ்வுட்கிடந்தான் என்னும் திருநாமமாயிற்று. தூய்மையான பக்தர்களுக்கருள்வதில் இப்பெருமானின் பாங்கு மிளிர்வதை பின்வரும் கதையால் உணரலாம். ஒரு காலத்தில் முட்டாளாயும், ஊமையாயுமிருந்த பிராமணன் ஒரு அக்ரஹாரத்திலிருந்தான். எவ்விதமான ஆசார அனுட்டானம் இல்லாதிருந்தாலும் ஒவ்வொரு அமாவாசை தோறும் திருஎவ்வுளுக்கு வந்து பெருமாளை வழிபட்டு ஹ்ருத்தபாபநாசத்தில் நீராடுவதை மட்டும் முரட்டுப் பிடிவாதமாக கொண்டிருந்தான். அவன் இறப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன் பப்புளித் துப்பட்டியுடன் பெருமாள் வந்து என்னை அழைத்துக்கொண்டு போகிறார் என்று வாய் பேசாதிருந்த ஊமை இரண்டு முறை கூச்சலிட்டு உயிர் நீத்தான். எனவே இத்தலம் மோட்ச கதி கிட்டும் ஸ்தலமாக விளங்குகிறது. ஒரு சமயம் சிவனையழைக்காது தட்சன் யாகம் செய்ய அவனுக்குப் புத்திமதிகூறி திருத்துவதற்காகச் சென்ற உமையவள் எவ்வளவு புத்திமதி கூறியும் பயனில்லாது போயிற்று. இதனால் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரும் போராட்டம் உண்டாகி பின்பு சினந்தணிந்த சிவன் தனது நெற்றியின் வியர்வைத் துளிகளிலிருந்து தோன்றிய வீரபுத்திரனை ஏவி யாக குண்டலினியையும் தட்சனையும் அழித்தான். பிரம்மவித்தான தட்சனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் சிவன்முன் வந்து நின்றது. அது அவனை விடாது பின் தொடரவே அதனின்று மீள்வதற்கு எவ்வளவோ முயன்றும் இறுதியில் இவ்விடம் வந்து சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்ற வரலாறும் உண்டு. இன்றும் தீர்த்தக் கரையின் முன்னால் இப்பெருமானைத் திரிசித்தபடி ருத்ரன் நின்றுள்ள காட்சியைக் காணலாம். மது கைடபன் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத் தொழில் ரகஸ்யத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன் திருமாலை வேண்ட பயங்கர ரூபங்கொண்ட இவ்விருவரையும் திருமால் துவம்சம் படுத்தினார். அவர்கள் தமது பராக்கிரமத்தால் சூர்ய சந்திரர்களின் ஒளியையும் மறைத்து உலகை இருளில் மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான் அவர்கள் மீது சக்ராயுதத்தை ஏவ அதன்முன் நிற்க முடியாமல் இருவரும் ஓடியொழிந்தார்கள். (இக்கதை பாண்டிநாட்டு திருப்பதிகளுள் ஒன்றான வானமாமலை என்னும் திருச்சீரிவரமங்கை ஸ்தலத்திற்கும் சொல்லப்பட்டுள்ளது) அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் உற்ருத்த பாப நாசினி என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை மறைத்துக்கொண்டனர். தாம் கிடப்பதற்கு உள் ஆதி இருந்த இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான் சினந்தணிந்து அவர்களையும் ரட்சித்தான் என்பர். பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில் தேவபாகர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் மார்க்கண்டேய முனிவரையணுகி சகல பாபங்களையும் போக்க வல்ல புண்ய தீர்த்தமும் மோட்சத்தையும் தரக் கூடிய பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்தலம் யாதென வினவ அவர் தேவபாகரைஇத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறி இங்கு ஆற்றுப்படுத்தியதாகவும் புராணங்கூறும். கௌசிகன் என்னும் அந்தணன் ஒருவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராட யாத்திரை புறப்பட்டு நெடுங்காலம் அவ்விதமே திரிந்து தண்டகாரண்யத்தின் மத்திய பிரதேசத்தை அடைந்தான். அங்கு உணவின்றி வாடி பசியால் மிக்க களைப்புற்றுச் சோர்ந்து போனபோது அவ்வழியே சென்ற சண்டாளன் ஒருவனைக் கண்டு அவனிடம் தனக்கு உணவளிக்குமாறு வேண்டினான். இப்பிராமணனின் முகத்திலிருந்த ஒளியைக் கண்ட அவன் தன் தோள் மீது ஏற்றிச் சென்ற கௌசிகனுக்கு உணவளித்தான். அயர்ந்து தூங்கிய கௌசிகனுக்குப் பணிவிடைகள் செய்யுமாறு தன் புத்திரியை அனுப்பினான். அவளது பணிவிடைகளில் தன்நிலை மறந்த கௌசிகன் பலகாலம் அவளுடனே தங்கியிருந்து இன்புற்றிருந்தான். பிறகு ஒரு நாள் தன் நிலையுணர்ந்த கௌசிகன் மீண்டும் தீர்த்த யாத்திரை தொடங்கி தனது கிழப்பருவ நிலையில் இங்குள்ள ஹ்ருத்த பாப நாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று தெய்வாதீனமாய்த் தை அமாவாசையாயிற்று. இவனை யமலோகத்திற்கு இட்டுச் சென்ற யமதூதர்கள் இவன் பாபச் செயல்களின் பொருட்டே இவனை இங்கு கொணர்ந்தோம் எனக் கூறினார். இதைக் கேட்டு நகைத்த எமன் இவன் தை அமாவாசையன்று ஹ்ருத்த பாப நாசினியிலில் நீராடியதால் இவனுக்கு பாபங்களே இல்லை. இவனை மோட்சவாயிலில் கொண்டு சென்றுவிட்டுவாருங்கள் என்று உத்திரவிட்டான். |
| 932 | : | _ _ |a இக்கோயில் கருவறை விமானம் விஜயகோடி விமானம் என்றழைக்கப்படுகிறது. கருவறையில் எம்பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் உள்ளார். கனகவல்லித் தாயாருக்கு தனி சன்னதி உண்டு. லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் சிறப்புப் பெற்றவை. |
| 933 | : | _ _ |a அகோபில மடம் |
| 934 | : | _ _ |a கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயில், கூவம் அருள்மிகு திரிபுராந்தகர் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில், தண்டலம் தடுத்தாலீசுவரர் கோயில், திருவாலாங்காடு வடவாரண்யேசுவரர் கோயில் |
| 935 | : | _ _ |a சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் பலவும் இவ்வூர் வழியாகவே செல்கின்றன. |
| 936 | : | _ _ |a காலை 6.30 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 | : | _ _ |a திருவள்ளூர் |
| 938 | : | _ _ |a திருவள்ளூர் |
| 939 | : | _ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 | : | _ _ |a திருவள்ளூர் நகர விடுதிகள் |
| 995 | : | _ _ |a TVA_TEM_000227 |
| barcode | : | TVA_TEM_000227 |
| book category | : | வைணவம் |
| cover images TVA_TEM_000227/TVA_TEM_000227_திருஎவ்வுள்_வீரராகவப்பெருமாள்-கோயில்-0018.jpg | : |
|
| Primary File | : |