| 245 |
: |
_ _ |a திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோவில் - |
| 246 |
: |
_ _ |a இடைமருது, மத்தியார்ச்சுனம், திருவிடைமருது, மருதவனம், சண்பகாரண்யம், சத்திபுரம் |
| 520 |
: |
_ _ |a சோழநாட்டு (தென்கரை)த் தலம். ‘இடைமருது’ - ‘மத்தியார்ச்சுனம்’ எனப் புகழப்படும் பதி. வடக்கே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம் (மல்லிகார்ச்சுனம்) தலைமருது என்றும்; தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ‘திருப்புடைமருதூர்’ (புடார்ச்சுனம்) கடைமருது என்றும் வழங்கப்படும். இவையிரண்டுக்கும் இடையில் இருப்பதால் இஃது இடைமருது ஆயிற்று. (அர்ச்சுனம் -மருதமரம்) மகாலிங்கத் தலம் என்று புகழப்படும் இத்தலத்தைச் சுற்றிப் பரிவாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. இத்தலத்திற்குக் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடியுள்ள தலபுராணமும் ; மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடியுள்ள ‘உலா’வும் உள்ளன. (தலபுராணம் - மருதவனப்புராணம்) இத்திருக்கோயிலில் ஆதித்தபிச்சன் என்பவனால் நிறுவப்பட்ட அறக்கட்டளைகள் ‘பிச்சைக் கட்டளை’ என்றழைக்கப்படுகின்றன. இக்கட்டளை தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் இருந்து வருகின்றது. |
| 653 |
: |
_ _ |a கோயில், சைவம், சிவன், சோழ நாட்டுத்தலம், திருவிடைமருதூர், இடைமருது, மகாலிங்கசுவாமி கோயில், சோழநாடு, தஞ்சாவூர், அர்ச்சுனம், மருதமரம் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
| 914 |
: |
_ _ |a 10.99508966 |
| 915 |
: |
_ _ |a 79.45183634 |
| 916 |
: |
_ _ |a மகாலிங்கேஸ்வரர், மருதவனேஸ்வரர், மருதவாணர் |
| 918 |
: |
_ _ |a பிருகத்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை |
| 922 |
: |
_ _ |a மருது (அர்ஜு னம்) |
| 923 |
: |
_ _ |a காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a தேர்த்திருவிழா |
| 927 |
: |
_ _ |a இக்கோயிலில் 149 கல்வெட்டுக்கள் உள. இவற்றுள் ஒரு கல்வெட்டிலிருந்து அந்நாளில் சுவாமி திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டுவர மண்குடங்களே பயன்படுத்தப்பட்டன என்னும் செய்தியை அறிகிறோம். கல்வெட்டில் இத்தலம் ‘உய்யக்கொண்ட சோழவளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடை மருதூர்’ என்று குறிக்கப் பெறுகின்றது. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a உமாதேவியார், விநாயகர், முருகன், திருமால், காளி, இலக்குமி, சரஸ்வதி, வேதம், வசிட்டர், உரோமேச முனிவர், ஐராவணம், சிவவாக்கியர், கபிலர், அகத்தியர், வரகுண பாண்டியன் முதலியோர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். மருதமரத்தின் கீழே கட்டுண்ட கண்ணனின் உருவம் உள்ளது. பக்கத்தில் காவிரி ஓடுகிறது. மூலவர் மகாலிங்கேஸ்வரர் - அழகான மூர்த்தி. நிறைவான தரிசனம். அம்பாள் அழகிய கோலத்துடன் தரிசனம். அம்பிகை மௌனமாக இருந்து தவஞ்செய்த மூகாம்பிகை சந்நிதியும், மேரு பிரதிஷ்டையும் தரிசிக்கத் தக்கவை. கோயில் நன்கு பராமரிக்கப்பட்டுப் பொலிவுடன் திகழ்கிறது. தைப்பூசத்தில் சுவாமி காவிரிக்கு எழுந்தருளி ஐராவணத்துறையில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பாக நடைபெறுகிறது. |
| 930 |
: |
_ _ |a திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். |
| 932 |
: |
_ _ |a பெரிய கோயில். நான்கு பிராகாரங்கள். வீதியையும் சேர்த்தால் பிராகாரம் ஐந்தாகும். வெளிப்பிராகாரம் பெரிய பிராகாரம் “அஸ்வமேத பிராகாரம்” எனப்படும். இதன் மூலம் சுவாமி அம்பாள் கோயிலை வலம் வரலாம். இப்பிராகாரத்தை வலம் வந்தால் பேய், பைத்தியம் முதலியன நீங்கும். இன்றும் இவற்றால் பீடிக்கப்பட்டோர் வந்து வலம் செய்து குணமடைவதைப் பார்க்கலாம். அடுத்துள்ள பிராகாரம் “கொடுமுடிப் பிராகாரம்” - இதன் மூலம் சுவாமியை மட்டும் வலம் வரலாம். அடுத்து பிரணவப் பிராகாரத்தினால் சுவாமியை வலம் வரலாம். இப்பிராகாரத்தில் தலமரம் உள்ளது. அம்பாள் கோயில் உள்ளது உள் பிராகாரம். (இதனுள்ளும் ஒரு பிராகாரமுள்ளது.) தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க; இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கின்றார். எனவே இத்தலத்தை “பஞ்ச லிங்கத் தலம்” என்றும் சொல்வர். வடக்குக் கோபுர வாயிலில் அகோர வீரபத்திரர் கோயிலும், மேற்குக் கோபுர வாயிலில் குமரன் கோயிலும் உள்ளன. கிழக்கு வாயிலில் படித்துறை விநாயகரும் பட்டினத்தாரும் ; மேல் வாயிலில் பர்த்ருஹரியாரும் தரிசனம் தருகின்றனர். சொக்கநாதர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மேகராகக் குறிஞ்சி பண்பாடினால் மழைபெய்யும் என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். சுவாமி அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியன. கோயிலின் உள்ளே உள்ள பாண்டியன் கோபுரத்தையும் சேர்த்து ஐந்து ராஜகோபுரங்கள் உள்ளன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a திருவலஞ்சுழி, சுவாமி மலை, தில்லை, சூரியனார் கோயில், ஆலங்குடி, சீர்காழி, திருவாவடுதுறை, திருவாரூர், திருவாய்ப்பாடி |
| 935 |
: |
_ _ |a மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம். மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a திருவிடைமருதூர் |
| 938 |
: |
_ _ |a திருவிடைமருதூர் |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a திருவிடைமருதூர் வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000207 |
| barcode |
: |
TVA_TEM_000207 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000207/TVA_TEM_000207_திருவிடைமருதூர்_மகாலிங்கசுவாமி-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
cg102v021.mp4
TVA_TEM_000207/TVA_TEM_000207_திருவிடைமருதூர்_மகாலிங்கசுவாமி-கோயில்-0001.jpg
TVA_TEM_000207/TVA_TEM_000207_திருவிடைமருதூர்_மகாலிங்கசுவாமி-கோயில்-0002.jpg
TVA_TEM_000207/TVA_TEM_000207_திருவிடைமருதூர்_மகாலிங்கசுவாமி-கோயில்-0003.jpg
TVA_TEM_000207/TVA_TEM_000207_திருவிடைமருதூர்_மகாலிங்கசுவாமி-கோயில்-0004.jpg
TVA_TEM_000207/TVA_TEM_000207_திருவிடைமருதூர்_மகாலிங்கசுவாமி-கோயில்-0005.jpg
TVA_TEM_000207/TVA_TEM_000207_திருவிடைமருதூர்_மகாலிங்கசுவாமி-கோயில்-0006.jpg
TVA_TEM_000207/TVA_TEM_000207_திருவிடைமருதூர்_மகாலிங்கசுவாமி-கோயில்-0007.jpg
TVA_TEM_000207/TVA_TEM_000207_திருவிடைமருதூர்_மகாலிங்கசுவாமி-கோயில்-0008.jpg
|