MARC காட்சி

Back
இராமலிங்கசுவாமி கோவில்
245 : _ _ |a இராமலிங்கசுவாமி கோவில் -
246 : _ _ |a இராமேஸ்வரம், இராமநாதர் கோயில், இராமநாதசுவாமி கோயில்
520 : _ _ |a இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி. ‘காசி - இராமேஸ்வரம்’ என்னும் பேச்சு வழக்கிலிருந்து இத்தலத்தின் மேன்மையை அறியலாம். வாழ்நாளில் ஒவ்வொருவரும் இவ்யாத்திரையைத் தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செல்வோர் முதலில் இராமேஸ்வரம் வந்து கடல் நீராடி இராமநாதரைத் தொழுது, இங்கிருந்து (கடல்) மண்ணையெடுத்துக் கொண்டு – காசி சென்று, கங்கையிற்கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரைத் தொழுது கங்கை நீருடன் திரும்பவும் இராமேஸ்வரம் வந்து இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வணங்கியே யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே முறையானது.
653 : _ _ |a கோயில், வைணவம், திவ்யதேசம், மங்களாசாசனம், 108 திருப்பதி, வைணவத்தலம், இராமேஸ்வரம், இராமநாதர், இராமலிங்கம், இராமலிங்கேஸ்வரர், ஜோதிர்லிங்கம், சைவம், சிவன் கோயில், இராமர், சேது பாலம், தனுஷ்கோடி
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.6-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், சேதுபதி
909 : _ _ |a 1
910 : _ _ |a தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். முக்தித் தலங்களில் ஒன்று. இத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
914 : _ _ |a 9.288172
915 : _ _ |a 79.3181666
916 : _ _ |a இராமநாதசுவாமி, இராமலிங்கேஸ்வரர்
918 : _ _ |a பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
922 : _ _ |a பலா, ஆலமரம்
923 : _ _ |a 22 தீர்த்தங்கள்
924 : _ _ |a சிவாகமம்
925 : _ _ |a ஆறுகால பூசை
926 : _ _ |a மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை
930 : _ _ |a ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
932 : _ _ |a தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை, தேவிப்பட்டினம், நாகநாதர் கோயில், இராமநாதபுரம் அரண்மனை, தனுஷ்கோடி, சேதுபாலம், பாம்பன்பாலம்
935 : _ _ |a மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 161 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
937 : _ _ |a இராமேஸ்வரம்
938 : _ _ |a இராமேஸ்வரம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a இராமேஸ்வரம் தேவஸ்தானம் கோயில் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000152
barcode : TVA_TEM_000152
book category : வைணவம்
cover images TVA_TEM_000152/TVA_TEM_000152_இராமேஸ்வரம்_இராமநாதர்-கோயில்-001.jpg :
Primary File :

TVA_TEM_000152/TVA_TEM_000152_இராமேஸ்வரம்_இராமநாதர்-கோயில்-001.jpg

cg102v003.mp4