MARC காட்சி

Back
திருக்கள்வனூர் ஆதிவராகப்பெருமாள் கோவில்
245 : _ _ |a திருக்கள்வனூர் ஆதிவராகப்பெருமாள் கோவில் -
246 : _ _ |a திருக்கள்வனூர்
520 : _ _ |a மிகச் சிறிய வடிவிலான மூர்த்தியாக 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டும்தான். காமாட்சியம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள நின்றான். இருந்தான். கிடந்தான் என்ற மூன்று திருக்கோலத்தைக் காட்டி மூன்றடுக்கில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களை உற்று நோக்கினால் அவைகள் பல்லவர்கள் காலத்தில்படைக்கப்பட்ட கலைப் படைப்புக்களைப் போலன்றி வேறெங்கோ இருந்து பெயர்த்தெடுத்து இவ்விடம் கொணர்ந்து வைத்ததைப் போல் உள்ளது. இத்தலம் ஆய்விற்குரியது. பல அழகு தமிழ்ப் பெயர்கள் பூண்டுள்ள நாச்சியார்களைப் போல இந்த பிராட்டிக்கும் அஞ்சிலைவல்லி நாச்சியார் என்றும் அழகுத் திருநாமம். திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம். தனியாக சன்னதி. உற்சவர் போன்றவர்கள் இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. நித்தியபடி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது. காஞ்சியில் பற்பல திவ்ய தேசங்களில் மிகமிகப் பெரிய கோவில்களில் எழுந்தருளியிருந்து அங்குவரும் பக்தர்கட்கு அருள் பாலித்து திருப்தி அடையாமல் காமாட்சியம்மன் கோவிலின் ஒரு மூலையின் நின்றுகொண்டு இங்கு வரும் பக்தர்களையும் தன் அருளுக்கு இலக்காக்க வேண்டுமென்று இப்படிக் கள்ளத் தனமாக உறைவதால் கள்வன் எனப்பட்டான் போலும் என்று ஒரு நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதும் ஈண்டு ஆழ்பொருள் சிந்தனைக்கு வித்திடுவதாகும். அஷ்ட பிரபந்தம் என்னும் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் அழகிய மணவாள தாசரான பிள்ளைப் பெருமாளையங்கார் கச்சிக் கள்வா நான் பெரிய கள்ளன், உனக்கு சொந்தமான இந்த ஆத்மாவை எனக்கே உரிமையாகச் செய்து கொண்டே வாழ்ந்து வருகிறேன். இது ஆத்மபகாரம் இதைக் காட்டிலும் பெருங்களவு வேறில்லை. அப்படிப்பட்ட என்னைக் கள்வன் என்று கூறாமல் மங்காத பண்புக் கடலாகிய உன்னைக் கள்வன் என்கிறார்களே இதுதான் விந்தை என்கிறார். பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று கொண்டேனைக் கள்வனென்று கூறாதே – மண்டலத்தோர் புள்வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக் கள்வா வென் றோதுவதென் கண்டு.
653 : _ _ |a திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயில், கோயில், பெருமாள், திவ்யதேசம், மங்களாசாசனம், வைணவம், விஷ்ணு, திருமங்கையாழ்வார், பெரிய காஞ்சி, காஞ்சிபுரம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 12.8405575
915 : _ _ |a 79.70323697
916 : _ _ |a ஆதிவராஹப் பெருமாள்
918 : _ _ |a அஞ்சிலை வல்லி நாச்சியார்
923 : _ _ |a நித்ய புஷ்கரணி
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a இல்லை
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a காமாட்சியம்மன் கர்ப்பக் கிரஹத்திற்கு முன் ஒரு மூலையில் (ஒரு கம்பத்தில் உள்ள சிலை போல்) கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் நால்தோள் எந்தாயாக எழுந்தருளியிருக்கிறார்.
930 : _ _ |a ஒரு சமயம் சிவனுக்கும் பார்வதிக்கும் தர்க்கம் உண்டாகி விவாதம் வளர அதனால் சினமுற்ற சிவன் பார்வதியை சபிக்க பார்வதி சிவனிடம் மன்னிப்பு வேண்ட சிவ கட்டளைப்படி பார்வதி ஒரு காலால் நின்று வாமனரை நோக்கித் தவம் செய்து சிவபெருமானை அடைந்ததாக ஐதீஹம். இவ்விடத்தில் ஒரு சமயம் லட்சுமி தேவியும் பார்வதியும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் மஹாவிஷ்ணு மறைந்திருந்து கேட்டதாகவும் இதையறிந்த காமாட்சி எம்பெருமானைக் கள்வன் என்று அழைத்ததால் பெருமாளுக்கு இவ்விடத்தில் கள்வன் என்று திருநாமம் ஏற்பட்டதாயும் கூறுவர். இவ்விதம் காமாட்சி கூறியதைக் கேட்ட எம்பெருமான் தன்னை சற்றே மறைத்துக்கொள்ள அந்நேரத்தில் இங்கு பலகாலமாக பதுங்கி இருந்து (தனக்கேற்பட்ட சாப விமோசனத்தால்) வெளிப்பட்ட அரக்கன் ஒருவன் - இரண்டு தேவியரையும் அச்சுறுத்த பார்வதி உடனே திருமாலைத் துதிக்க அந்த அரக்கனோடு எம்பெருமான் பொருதார். அவன் படுத்துக்கொண்டே புழுதியை வாரி இறைத்து பயங்கரமாக பொருத ஆரம்பிக்க எம்பெருமான் அவன் மீது நின்று அவன் துள்ளலை அடக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்தார் அந்நிலையில் அவன் உக்கிரமாக ஆட அவன்மீது அமர்ந்து அவன் கொட்டத்தை முற்றிலும் அடக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுத்தார். அப்போது அவன் தனது முழுபலத்தையும் பிரயோகித்து அசைந்து அசைந்து பூமிக்கு நடுக்கத்தை உண்டாக்க அவன் மீது படுத்து அவனை பாதாளத்திற்குள் அமுக்கி சயன திருக்கோலத்தில் காட்சி கொடுத்தார். இவ்விதம் இவ்விடத்து எம்பெருமான் தனது நின்ற இருந்த கிடந்த என்னும் 3 திருக்கோலங்களை காட்டியருளினார். பார்வதியின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் தனது மூன்று திருக்கோலங்களையும் இங்கே காட்டிக் கொடுத்ததாகவும் கூறுவர். பிற ஸ்தலங்கட்குச் சொல்லப்பட்ட வரலாற்றுச் சான்றுகள் அத்தலத்தோடு ஒட்ட நிற்பவை போல் தோன்றுகின்றன. ஆனால் இங்கு பேசப்படும் ஸ்தல வரலாறுக்கும் பெருமான் திருக்கோலத்திற்கும் சம்பந்தமில்லை. மேலும் பார்வதி தேவி வாமனரைக் குறித்து தவமிருந்ததாய் கூறப்படுகிறது. ஆனால் காமாட்சியம்மன் கோவிலில் இருக்கும் மூர்த்தியோ வராஹ மூர்த்தியாகும்.
932 : _ _ |a காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலின் உள்ளே இத்தலம் அமைந்துள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில்
935 : _ _ |a பெரிய காஞ்சி என அழைக்கப்படும் பகுதியில் காமாட்சியம்மன் கோவிலுக்குள்ளேயே இத்தலம் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 5.00 -12.30 முதல் மாலை 3.30-9.30 வரை
937 : _ _ |a காஞ்சிபுரம்
938 : _ _ |a காஞ்சிபுரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000135
barcode : TVA_TEM_000135
book category : வைணவம்
cover images TVA_TEM_000135/TVA_TEM_000135_காஞ்சிபுரம்_திருகள்வனூர்-ஆதிவராகப்-பெருமாள்-கோயில்-கோபுரம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000135/TVA_TEM_000135_காஞ்சிபுரம்_திருகள்வனூர்-ஆதிவராகப்-பெருமாள்-கோயில்-கோபுரம்-0001.jpg

TVA_TEM_000135/TVA_TEM_000135_காஞ்சிபுரம்_திருகள்வனூர்-ஆதிவராகப்-பெருமாள்-கோயில்-முகப்பு-0002.jpg

TVA_TEM_000135/TVA_TEM_000135_காஞ்சிபுரம்_திருகள்வனூர்-ஆதிவராகப்-பெருமாள்-கோயில்-ஓவியம்-0003.jpg