MARC காட்சி

Back
அருள்மிகு சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் கோயில்
245 : _ _ |a அருள்மிகு சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் கோயில் -
246 : _ _ |a பெரிச்சிக்கோயில்
520 : _ _ |a பெரிச்சிக்கோயில் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சுகந்தவனேசுவரர் திருக்கோயில் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகும். இத்தலத்து இறைவன் ஆண்டப்பிள்ளை நாயனார் என்றழைக்கப்படுகிறார். இக்கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்குரிய தேவஸ்தானக் கோயிலாக விளங்கி வருகின்றது. இக்கோயிலில் நடைபெறும் வயிரவ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிளையாடற்புராணத்தில் வன்னிமரமும், கிணறும், இலிங்கமும் சாட்சி சொன்ன திருவிளையாடல் இத்தலத்தோடு தொடர்புடையது.
653 : _ _ |a பெரிச்சிக் கோயில், ஆண்டபிள்ளை நாயனார், சுகந்தவனேசுவரர், சாமீபவல்லி, ஆண்டபிள்ளை காலபைரவர், நவபாஷாண பைரவர், ஸ்ரீகாசி வயிரவ சுவாமி, தேவாரத்தலம், வன்னிமரம், கிணறு, இலிங்கம், சாட்சி, திருவிளையாடற்புராணம்
700 : _ _ |a செல்வமணி
710 : _ _ |a செல்வமணி
905 : _ _ |a கி.பி.7-18-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 10.0323377
915 : _ _ |a 78.6266043
916 : _ _ |a சுகந்தவனேசுவரர்
917 : _ _ |a ஆண்டபிள்ளை நாயனார்
918 : _ _ |a சாமீபவல்லி
922 : _ _ |a வன்னி
923 : _ _ |a திருக்கிணறு
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், சனிப்பெயர்ச்சி, அஷ்டமி பூஜை
927 : _ _ |a ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இக்கோயில் கருவறையில் சுகந்தவனேசுவரர் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். சாமீபவல்லி அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நால்வர் சிற்பங்கள் நின்ற நிலையில் விளங்குகின்றன. ஸ்ரீகாசி வயிரவர் எனப்படும் காலபைரவர் நவபாஷாண பைரவராக விளங்குகிறார். வன்னி மரத்து விநாயகர், திருச்சுற்றில் சண்டேசுவரர், தென்முகக்கடவுள் ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. சனீஸ்வரருக்கு தனித் திருமுன் அமைந்துள்ளது.
930 : _ _ |a மதுரையைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தன் மாமனின் விருப்பப்படி, மாமன் மகளை மணந்து கொள்வதற்காக கடற்கரைப்பட்டினத்திலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் இரவுப் பொழுது ஆகிவிட்ட படியால் பெரிச்சிக் கோயில் எனப்படும் இக்கோயிலில் தங்கினான். இரவில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது வணிகன் நச்சுப்பாம்பு ஒன்று தீண்டி இறந்தான். அவன் மணம் செய்து கொள்ளவிருந்த அவனுடைய மாமன் மகளான மணமகள் அழுது புலம்பினாள். சிவத்தலங்களைப் பாடிக்கொண்டு சைவ சமயத்தை எழுச்சி பெற தொண்டாற்றி வந்த திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தவேளையில் இப்பெண்ணின் துயர்நிலை கண்டு இத்தல இறைவன் அருளால் வணிகனை உயிர்பெற்று எழ, இறைவனை நோக்கி பதிகம் பாடினார். வணிகனும் உயிர் பிழைத்தான். பின்னர் திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள வன்னிமரம், கிணறு, இலிங்கம் இவைகளை சாட்சியாக வைத்து வணிகனுக்கும், அவன் மாமன் மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். பின்னர் வணிகன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு மதுரையம்பதியை சென்றடைந்தான். அங்கே வணிகனின் முதல் மனைவி இந்தத் திருமணத்தை ஏற்கவியலாது என்று கூறி இளைவளை ஏசினாள். இதனால் துன்புற்ற இளையாள் பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டாள். திருச்சுற்றில் வன்னி மரத்தடியில் விநாயகர் சிற்பங்கள் அமைந்துள்ளன. “நான் என் கணவரை மணம் முடித்துக் கொண்டது உண்மையானால் இப்பொழுதே என் திருமணத்தின் போது சாட்சியாக விளங்கிய வன்னிமரமும், கிணறும், இலிங்கமும் சாட்சியாகத் தோன்ற வேண்டும். இல்லையேல் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்“ என்று முறையிட்டாள். உடனே மேற்கூறிய சாட்சிகள் மூன்றும் தோன்றி இவளுக்கு இவ்வணிகனுடன் திருமணம் நடந்தது எனப்பறை சாற்றின. திருவிளையாடற்புராணத்தில் இக்கோயிலின் தலபுராணம் விளங்குகின்றது.
932 : _ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பண்டைய கட்டடக்கலை எச்சங்களைக் கூட அரிதாகவே காணவேண்டியுள்ளது. சதுரவடிவமான கருவறை, அர்த்த மண்டப அமைப்பற்ற நீண்ட மண்டபம், அதனைத் தொடர்ந்து நந்தி மண்டபம் எனப்படும் நவீன பாணி மண்டபக் கூரை என தற்போது காணப்படுகின்றது. திருச்சுற்றில் சாமீபவல்லி திருமுன், பைரவர் திருமுன் பைரவருக்கு எதிரே சனீஸ்வரர திருமுன் ஆகிய புனரமைக்கப்பட்ட புதிய கோயில்கள் காட்சியளிக்கின்றன.
933 : _ _ |a சிவகங்கை சமஸ்தானம்-தேவஸ்தானம்
934 : _ _ |a மலையரசி அம்மன் கோயில், கோனாபட்டு கொப்புடையம்மன் கோயில், கண்ட்ரமாணிக்கம் மாணிக்க நாச்சி கோயில், நாச்சியார்புரம் பெரியநாச்சி கோயில்
935 : _ _ |a கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்திலும், காரைக்குடியில் இருந்து 19 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 11.00 மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 வரை
937 : _ _ |a பெரிச்சிக்கோயில், கண்ட்ரமாணிக்கம்
938 : _ _ |a காரைக்குடி
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a காரைக்குடி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000119
barcode : TVA_TEM_000119
book category : சைவம்
cover images TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_அம்மன்-திருமுன்-0004.jpg :
Primary File :

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_கருவறை-விமானம்-0001.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_கருவறை-0002.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_ஆண்டபிள்ளை-நாயனார்-0003.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_அம்மன்-திருமுன்-0004.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_பைரவர்-திருமுன்-0005.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_நால்வர்-0006.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_சண்டிகேசுவரர்-0007.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_முருகன்-0008.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_கணபதி-0009.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_சனைஸ்வரன்-0010.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0011.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_துர்க்கை-0012.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_மண்டபம்-0013.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_கொடிமரம்-0014.jpg

TVA_TEM_000119/TVA_TEM_000119_பெரிச்சிக்கோயில்_சுகவனேசுவரர்-கோயில்_முகப்பு-0015.jpg