MARC காட்சி

Back
அருள்மிகு கைலாசநாதர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு கைலாசநாதர் கோயில் -
246 : _ _ |a திடியன் மலை சிவன் கோயில்
520 : _ _ |a திடியன்மலை தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையின் அடிவாரத்திலுள்ள கைலாசநாதர் கோயில் தற்போது நாயக்கர் கால கலைப்பாணியில் அமைந்துள்ளது. இருப்பினும் பாண்டியர் காலத்திய கோயிலாய் இருந்து நாயக்க மன்னர்களால் புனரமைக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கோயிலில் தூண்களில் நான்கு மற்றும் ஐந்து வரி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தூண் சிற்பத்தை குறிப்பிடுவதாக இக்கல்வெட்டுகள் அமைந்துள்ளன. கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்ற கட்டுமான அமைப்பைப் பெற்று விளங்குகின்றது. அம்மன் திருமுன் (சந்நிதி) தனித்து உள்ளது. கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், துர்க்கை ஆகிய தெய்வ உருவங்கள் சிற்பங்களாக உள்ளன.
653 : _ _ |a திடியன் மலை, கைலாசநாதர் கோயில், உசிலம்பட்டி, நாயக்கர், மதுரை, சிவன் கோயில், முதலியார் கல்வெட்டுகள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a +91- 4552 – 243 235, 243 597, 94425 – 24323
905 : _ _ |a நாயக்க மன்னர்கள் / கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 1
910 : _ _ |a 400 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் கால கட்டடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.
914 : _ _ |a 9.9210427
915 : _ _ |a 77.8736901
916 : _ _ |a கைலாசநாதர்
917 : _ _ |a நடராஜர்
918 : _ _ |a பெரியநாயகி
922 : _ _ |a நெய்கொட்டா மரம்
923 : _ _ |a பொற்றாமரைக்குளம்
925 : _ _ |a இருகால பூசை
926 : _ _ |a பௌர்ணமி கிரிவலம், கார்த்திகையில் மகாதீபம், சிவராத்திரி, நவராத்திரி, தைப்பூசம், குருப்பெயர்ச்சி, மாசிமகம்
927 : _ _ |a இக்கோயிலில் தூண் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தூண் கல்வெட்டொன்று, இந்த தூண் அம்பட்டயம்பட்டியிலிருக்கும் பெரிய திம்மன் நல்லு மகன் பெரியண தேவன் மக்கள் ஆறு பேற் உபயம் இந்த உருப்படி பெரியண தேவன் என்று கூறுகிறது. அதாவது தூணில் உள்ள உருவம் பெரியண தேவன் என்பதாக உள்ளது. மற்றொரு கல்வெட்டு மேற்படி ஆறுபேரும் தூண் உபயத்தை செய்ததாகத் தெரிவிக்கிறது. மற்றொரு கல்வெட்டு அதே ஊரிலிருக்கும் பெ.பெரியகருப்பத் தேவன் மகன் நல்லு பெருமாத்தேவன் என்பவனின் பெண்சாதி கட்டகிடா மீனாட்சியின் மக்கள் நாலும் உபயம் செய்த உருவமாக நல்ல பெருமாள் தேவனைச் சுட்டுகிறது. மற்றுமொரு தூண் கல்வெட்டு உச்சப்பட்டி கருப்பத்தேவன் மகன் வெள்ளை வெங்கித் தேவன் மக்கள் ஏழு பேரும் அவன் உருவம் பொறித்த தூணை செய்வித்ததைத் தெரிவிக்கிறது. மற்றுமொரு கல்வெட்டு சிந்துபட்டி வகையறாவைச் சேர்ந்த அம்மையப்ப முதலியாரின் குமாரன் சோமசுந்தர முதலியாரைக் குறிப்பிடுகிறது. திடியன் வகையறா அஞ்சு கிராமங்கள் கணக்கு சந்திரசேகரற முதலியார் குமாரன் முத்தியப்ப முதலியார் என்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகின்றது. உருவம் பொறித்த தூணில் உள்ள மற்றொரு கல்வெட்டு சோமசுந்தர முதலியார் குமாரன் வெங்கிடாசல முதலியார் என்கிறது. மேலும் முத்தியப்ப முதலியான் குமாரரான தாண்டவராய முதலியார், பாண்டி முதலியார் குமாரன் முத்திருளப்ப முதலியார், கோவிந்த நாயக்கர், காத்த நாயக்கர் ஆகியோர் இக்கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் மற்றும் மண்டப வெளிப்புற கோட்டத்தில் துர்க்கை ஆகிய தெய்வ உருவங்கள் சிற்பங்களாக உள்ளன. கருவறையில் கைலாசநாதர் இலிங்க உருவில் காட்சியளிக்கிறார். அம்மன் தனி திருமுன்னில் (சந்நிதி) காட்டப்பட்டுள்ளார். கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் உள்ள கொடுங்கையில் காணப்படும் கூடுமுகங்களில் கண்ணப்பர், பசுபதி, உமாமகேசுவரர், இலிங்க வழிபாடு ஆகிய சிறிய வடிவ புடைப்புச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. தல விநாயகர் மிகப் பெரிய வடிவில் அமர்ந்த நிலையில் உள்ளார். கன்னிமூலை கணபதி, முருகன் ஆகிய சிற்பங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறை விமானத்தின் தளங்களில் சிவன், பெருமாள், கிருஷ்ணர், நான்முகன் மற்றும் அடியார்களின் சுதைச் சிற்பங்கள் உள்ளன.
930 : _ _ |a இராமர் பட்டாபிஷேகத்திற்கு பின் அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினார். அசுவ மேத குதிரை எங்கெல்லாம் இளைப்பாறுகிறதோ அங்கெல்லாம் ஒரு காசி இலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இராமரின் பட்டத்துக் குதிரை திடியன் மலையின் அடிவாரத்தில் நின்றது. இவ்விடத்தில் ஒரு காசி இலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கைலாசநாதர் கோயிலாய் கட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
932 : _ _ |a திடியன் மலை கைலாசநாதர் கோயில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இக்கோயில் பரந்த பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்கோயிலின் கருவறை விமானம் இரண்டு தளங்களை உடையதாக அமைந்துள்ளது. திராவிட பாணி கட்டடக் கலையைப் பெற்றுள்ளது. தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், தளங்களும், விமான மேற்பரப்பும் சுதை வண்ணமாகவும் அமைந்துள்ளது. விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களுடன் கூடிய தேவ கோட்டங்களில் இறையுருவங்கள் உள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று, அம்மன் திருமுன், சண்டேசர், விநாயகர் ஆகியோருக்கான சிறுகோயில் உள்ளிட்ட கட்டுமான அமைப்பினைப் பெற்று விளங்குகின்றது. கருவறைத் திருச்சுற்றினை ஒட்டி நாற்புறமும் பெரிய மதிற்சுவர் செல்கிறது. கோபுரம் அமைக்கப்படவில்லை. அலங்கரிக்கப்பட்ட முகப்பு அமைந்துள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயில், சிந்துபட்டி பெருமாள் கோயில், எழுமலை, தேனி-அல்லி நகரம்
935 : _ _ |a மதுரையில் இருந்து 33கி.மீ. தொலைவில் திடியன் மலை கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. உசிலம்பட்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 10.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a திடியன்மலை, சிந்துபட்டி, அம்பட்டையான்பட்டி
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000113
barcode : TVA_TEM_000113
book category : சைவம்
cover images TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கருவறை-விமானம்-தளஅமைப்பு-0004.jpg :
Primary File :

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-முழுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-முழுத்தோற்றம்-0002.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கருவறை-விமானம்-0003.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கருவறை-விமானம்-தளஅமைப்பு-0004.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கருவறை-விமானம்-தளஅமைப்பு-0005.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கருவறை-விமானம்-தாங்குதளம்-0006.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கருவறை-விமானம்-சுவர்ப்பகுதி-0007.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கருவறை-விமானம்-சுவர்ப்பகுதி-அரைத்தூண்கள்-0008.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கருவறை-விமானம்-சுவர்ப்பகுதி-பஞ்சரக்கோட்டம்-0009.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கருவறை-விமானம்-சுவர்ப்பகுதி-0010.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-மண்டபம்-வெளிப்புறச்சுவர்-0011.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-தேவகோட்டம்-அமைப்பு-0012.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கூரை-அமைப்பு-0013.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கொடுங்கை-கூடுமுகம்-0014.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கொடுங்கை-கூடுமுகம்-0015.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கொடுங்கை-கூடுமுகம்-0016.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கொடுங்கை-கூடுமுகம்-0017.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கொடுங்கை-கூடுமுகம்-0018.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-சுவர்-கல்வெட்டு-0019.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-தூண்-கல்வெட்டு-0020.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-தூண்-சிற்பம்-0021.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-தூண்-சிற்பம்-0022.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-தளத்திலுள்ள-சுதைச்சிற்பங்கள்-0023.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-முண்டபத்தூண்கள்-0024.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-அம்மன்-திருமுன்-0025.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-திருச்சுற்று-0026.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கொடிமரம்-0027.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-அம்மன்-கோயில்-0028.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கோட்டம்-அலங்காரவளைவு-0029.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-பல்லி-0030.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-கணபதி-0031.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-தென்முகக்கடவுள்-0032.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-சித்தர்கள்-0033.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-இலிங்கோத்பவர்-0034.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-அடிதேடும்-மால்-0035.jpg

TVA_TEM_000113/TVA_TEM_000113_திடியன்மலை_கைலாசநாதர்-கோயில்-துர்க்கை-0036.jpg