000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a அண்டமுற நிமிர்ந்தாடும் ஊர்த்துவ தாண்டவம் (ஒற்றைக்காலை உயரேத் தூக்கி ஆடும் நடனம்) |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a ஒற்றைக் காலை உயரேத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடும் சிவபெருமானார் வலது காலை உயர்த்தியுள்ளார். எட்டு திருக்கைகள் கொண்டுள்ளார். முன் வலது கை தூக்கிய காலை வளைத்து அணைத்தபடி அபய முத்திரை காட்டுகிறது. இடது முன் கை அருகில் ஆடும் நந்தியின் மேல் வைக்கப்பட்டுள்ளது. ஜடாமகுடம் அணிந்துள்ள ஊர்த்துவரின் முகம் புன்னகையுடன் இடதுபுறம் திரும்பியுள்ளது. ஆடலுக்கேற்றவாறு உடலின் நெகிழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. மார்பில் கண்டிகை, சவடி அணிந்துள்ளார். கைகளில் தோள்வளை, முன்வளை, கடகவளை அணிந்து, வயிற்றில் பட்டையான உதரபந்தம் அணிந்து, அரையாடை உடுத்தி, இடையாடையின் முடிச்சுகள் இடதுபுறம் பறந்த நிலையில் ஆடுகின்றார். முன் வலது கையிலிருந்து இடது மார்பின் வழி முப்புரிநூல் செல்கிறது. பிரம்மமுடிச்சு இடமார்பில் காட்டப்பட்டுள்ளது. ஆடல்வல்லானின் தூக்கிய வலது காலின் கீழே கணம் ஒன்று மகிழ்ச்சியுடன் ஆடுகிறது. ஆடும் நந்தியின் கீழே உள்ள மற்றொரு கணம் குத்துக்காலிட்டு அமர்ந்து புல்லாங்குழல் வாசிக்கிறது. ஆடல்வல்லானுக்கு இருபுறமும் அமைந்த சிறு கோட்டங்களில் வலதுபுறம் நான்முகனும், இடதுபுறம் திருமாலும் நின்றநிலையில் ஆடலைக் காண்கின்றனர். இருவரின் கைகளும் போற்றும் முத்திரையைக் காட்டுகின்றன. இருவரின் பின்னேயும் ஒருவர் நிற்கின்றனர். |
653 | : | _ _ |a ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, ஊர்த்துவ நடனம், ஒற்றைக்காலைத் தூக்கி ஆடும் நடம், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி, கைலாசநாதர் கோயில் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000054 |
barcode | : | TVA_SCL_000054 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |