000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a யானைக் கூட்டம் |
300 | : | _ _ |a விலங்கு உருவங்கள் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் யானைக் கூட்டம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a யானைகள் தன் குழவிகளோடு ஓடி வரும் கவின்மிகு காட்சி. தாய்க் களிற்றின் கால்களுக்குள் ஓடியோடி புகுந்து கொண்டு, தன் தாயை ஒட்டியே நடந்து கொண்டு, இங்குமங்குமாக ஓடியாடும் யானைக் குட்டிகள் உயிரோட்டமுள்ளவைகளாக இச்சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ளன. பெரிய வடிவத்திலிருக்கும் யானையின் வயிற்றுக்கடியில் மூன்று குட்டிகளும், முன்னங்காலுக்கு அருகே ஒரு குட்டியும் காட்டப்பட்டுள்ளன. ஒரு குட்டி யானை தவழ்ந்து கொண்டு நீரினைப் பருகுகிறது. இதற்கு பின்னால் ஓடி வரும் மற்றொரு யானையின் கால்களுக்கிடையே இரு யானைக்கன்றுகள் உள்ளன. அதில் ஒன்று தவழ்ந்தபடி நீரை தன் சிறிய துதிக்கையால் உறிஞ்சுகிறது. இதற்கும் பின்னால் இரண்டு யானைக் குட்டிகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தவழ்ந்த நிலையில் உள்ளது. மற்றொன்று அதன் மேல் பாய்ந்தபடி தலையை நீட்டிப் பார்க்கிறது. உயிர்க்குலம் தழைக்க நிலம் நோக்கி வந்த கங்கையின் நீரால் தாகந்தீர்ந்த பிடிகளும், அதன் பிஞ்சுகளும் கலைத் தாகத்தை நம்முள் தூண்டி விடுகின்றன. |
653 | : | _ _ |a யானைகள், யானைக்கூட்டம், யானைச் சிற்பம், அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தவம், பகீரதன் தவம், கங்கைக் கரை காட்சி, கங்கை பூமிக்கு வருதல், மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000450 |
barcode | : | TVA_SCL_000450 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |