000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அப்சரஸ் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a எழில் மிகு தோற்றத்துடன் அமர்ந்துள்ள ஏந்திழையாள் அப்சரஸ் எனப்படும் தேவ மங்கை |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயிலில் விமானத்தின் முதல் தளத்தில் உள்ள கர்ணக்கூட்டில் அமைந்துள்ள கோட்டத்தில் காட்டப்பட்டுள்ள இந்த அழகிய நங்கை மகாராஜ லீலாசனத்தில், இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை மடக்கி, வலது கையை ஆசனத்தில் ஊன்றி, இடது கையை குத்துக்காலிட்ட இடது முழங்காலில் வைத்தவாறு அமர்ந்துள்ளாள். இடது கை சிதைந்துள்ளது. தலையில் கரண்ட மகுடம் அழகு செய்கின்றது. வலது பின்புறம் சுருள் குழல்கள் தொங்குகின்றன. கழுத்தில் கண்டிகையும், சவடியும் அணிந்துள்ளார். காதுகளில் பத்ர குண்டலங்களும், கைகளில் தோள் வளை, இரட்டை முன்வளைகள் ஆகியனவும், இடையில் முகப்புடன் கூடிய தாரகைச்சும்மை என்னும் இடையணி அணிந்துள்ளார். ஆடை நூலாடையாக இருக்கலாம். கணுக்காலில் ஆடை மடிப்பு தெரிகின்றது. அமர்ந்திருக்கும் நிலைக்கு ஏற்றாற் போல் இப்பெண்ணின் இடை வளைந்து, நெகிழ்ந்து காணப்படுகின்றது. |
653 | : | _ _ |a பாண்டிய நாட்டுப் பெண் சிற்பம், அப்சரஸ், அரம்பையர்கள் தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000226 |
barcode | : | TVA_SCL_000226 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |