000 | : | nam a22 7a 4500 |
008 | : | 220829b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a பாவை விளக்கு |
300 | : | _ _ |a தூண் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a பாவை ஒருத்தி நின்ற நிலையில் இறைவனுக்கு திருவிளக்கினை இரு கைகளிலும் ஏந்தி கருவறை வாயிலின் முன்னே நிற்கும் சிற்பம் பாவை விளக்கு என்னும் சிற்பம் ஆகும். இறைவன்பால் பக்திமை கொண்ட பெண்கள், இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து, கோயிலில் சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவற்றுள் ஒன்று தான் கோயிலில் விளக்கெரித்தல். அதிலும் கருவறையின் முன்னால் நின்று கையில் விளக்கேந்தி நிற்றல் என்பது சிறப்பிற்குரியது. அத்தகையதொரு சிற்பத்தைத் தான் இங்கு காண முடிகிறது. இப்பாவை பெரிய கொண்டையுடன், நீள்செவிகளில் ஆபரணங்களுடன், பல வகையான அணிகலன்களை அணிந்துள்ளார். விளக்கேந்திய கைகளில் வளைகள் விளங்குகின்றன. |
520 | : | _ _ |a பாவை விளக்கு என்பது ஒரு பெண் தன் இரு கைகளில் விளக்கினை ஏந்தியபடி இறைவனின் திருத்தலத்தில் நின்று கொண்டிருக்கும் உருவ அமைப்பாகும். கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விசயநகர பேரரசு காலத்தில் இத்தகைய பாவை விளக்குகள் கல்லிலும், உலோகத்திலும் கோயிலுக்கு செய்தளிக்கப்பட்டன. இவை பெண் அடியார்கள் கோயிலுக்கு தங்களை அர்ப்பணிக்கும் தொண்டைக் குறிப்பிடுகிறது. |
653 | : | _ _ |a பாவை விளக்கு, விளக்கு, தூண் சிற்பம், நாயக்கர், கற்சிற்பம், கல், சிற்பம், பாண்டியர், கலை, முற்காலப் பாண்டியர், கலைப்பாணி, குற்றாலம், அகழ் வைப்பகம், தென்காசி, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
700 | : | _ _ |a திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a குற்றாலம் அகழ் வைப்பகம் |b குற்றாலம் அகழ் வைப்பகம் |c குற்றாலம் |d தென்காசி |f தென்காசி |
905 | : | _ _ |a கி.பி.16-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 8.9299168790071 |
915 | : | _ _ |a 77.2690306774245 |
995 | : | _ _ |a TVA_SCL_001590 |
barcode | : | TVA_SCL_001590 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |