| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180802b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a மைத்ரேயர் |
| 300 | : | _ _ |a பௌத்தம் |b உயரம் 76 செ.மீ. |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a சோழர்கள் காலத்தில் செய்யப்பட்ட வைதிகக் கடவுளரின் உருவதிமையைக் கொண்டவாறு புத்தரின் மற்றொரு இளமையான அழகு பொருந்திய வடிவான மைத்ரேயர் உருவத் திருமேனி செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மைத்ரேயர் திரிபங்க நிலையில் தாமரைப்பீடத்தின் மீது நான்கு திருக்கைகளுடன் நின்றுள்ளார். மேலிரு கைகளில் அக்கமாலையும், மலரும் கொண்டுள்ளார். கீழிரு கைகள் வரதம் மற்றும் கடக முத்திரைகளைக் காட்டுகின்றன. தலை அலங்காரம் ஜடாமகுடம் தீசுவாலையாகக் காட்டப்பட்டுள்ளது. தலையின் உச்சியில் சிரஸ்சக்கரம் அமைந்துள்ளது. நெற்றியில் தொங்கலுடன் கூடிய நெற்றிப்பட்டமும், காதுகளில் குண்டலங்களும், தோள்களில் வாகுமாலையும், கழுத்தில் மூன்று வகையான ஆரங்களும், மார்பில் தவழும் முப்புரிநூலும், வயிற்றில் உதரபந்தமும், இடையில் முகப்புடன் கூடிய இடைவாரும், குறங்கணியும், கைகளில் வளைகளும், கடகமும், கால்களில் பாதசரமும் அணி செய்ய அரையாடையுடன், புன்னகை தவழும் எழிலார்ந்த முகத்துடன் மைத்ரேயர் நிற்கிறார். |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a மகாயான பௌத்தத்தில் மைத்ரேயர் எனப்படும் புத்தரின் வடிவம் முதன்மை தெய்வம் ஆகும். மைத்தேரயர் வடிவம் புத்தரின் இளமை மற்றும் அழகு பொருந்திய வடிவம் ஆகும். |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், பௌத்தம், புத்தர், மைத்ரேயர், சித்தார்த்தர், நாகப்பட்டினம், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c நாகப்பட்டினம் |d நாகப்பட்டினம் |f நாகப்பட்டினம் |
| 850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| 905 | : | _ _ |a கி.பி.13-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001256 |
| barcode | : | TVA_SCL_0001256 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| cover images Plate No-29_2.jpg | : |
|
| Primary File | : |