MARC காட்சி

Back
அருள்மிகு ஸ்ரீகச்சி அனேகதங்காவதம்
245 : _ _ |a அருள்மிகு ஸ்ரீகச்சி அனேகதங்காவதம் -
246 : _ _ |a திருக்கச்சி அனேகதங்காபதம்
520 : _ _ |a காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கருகில் திருக்கச்சி அனேகதங்காவதம் திருத்தலம் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற பழம் பெரும் திருத்தலமாகும். சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தைப் பாடியுள்ளார். பல்லவர் காலத்தில் இக்கோயில் செங்கல் தளியாய் இருந்திருக்கவேண்டும். பின்பு பிற்கால சோழர் காலத்தில் கற்றளியாய் அமைக்கப்பட்டிருக்கக்கூடும். இங்குள்ள முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. விநாயகரும் குபேரரும் இக்கோயில் மூலவரான ஸ்ரீஅனேதங்காவதேஸ்வரரை வழிபட்டனர். “அனேகம்“ என்றால் யானை என்று பொருள். யானையை முதன்மையாகக் கொண்டதாக இத்தலம் விளங்குகிறது. யானை முகத்தையுடைய விநாயகர் “அனேகபேஸ்வரர்“ என்று தம் பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தார். அனேபேஸ்வரர் இரணியபுர அசுரனான கேசியை அழித்து கேசியின் மகளான சிவபக்தை வல்லபையை விநாயகருக்கு மணம் முடிக்க வரம் தந்த சிறந்த இடம் இதுவென்று தலபுராணம் கூறுகின்றது. யானையை உரித்த பிரானாகிய சிவபெருமானின் கஜசம்ஹார மூர்த்த வடிவத்தை இங்கு சுந்தரர் தமது திருப்பதிகத்தில் குறிப்பிடுகிறார். யானையாகிய விநாயகர் பூசித்த தலமென்று தலபுராணமும், யானையை உரித்த பிரான் இடமென்று தேவாரமும் குறிப்பிடுகின்றன. இது ஒன்றுக்கொன்று முரணாகிறது. இதனால் இது மேலும் ஆய்வுக்குரியது. யானையைக் குலச்சின்னமாகக் கொண்ட கூட்டத்தால் வாழ்ந்த பகுதியாய் இதுவிருக்கலாம். யானையை வழிபடும் அக்கூட்டத்தார் தம் யெ்வமான யானையே சிவபெருமானை வழிபடுவதால் சிவனைப் பெருங்கடவுளாக ஏற்ற நிலையும் இங்கு சமூக பின்புலமாக கருத்துரு பெறுகிறது. மேலும் இத்தலத்திற்கு “திருவனேகதங்காபதம்“ என்றும் பிரதிபேதமுண்டு என தேவார அடிக்குறிப்பு கூறுகிறது. திருச்சுற்று மதிலைக் கொண்ட வளாகத்துள் இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. எனினும் வடபுறத்திலேயே இதற்கு நுழைவாயில் உள்ளது. கருவறை விமானம் ஏகதளமுடைய திராவிடப் பாணியில் அமைந்த பிற்காலச் சோழர் கலைக்கோயிலாகும். தாங்குதளம் முதல் கூரை வரை கற்றளியாகவும், அதற்கு மேல் அமைந்த தளப்பகுதி முதல் கலசம் வரை சுதையாலும் வடிவமைக்கப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மான மற்றும் அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் நந்தி மண்டபத்தில் சிறிய நந்தி சிற்பம் ஒன்றும், திருச்சுற்றில் நால்வர் சிற்பங்களும், தென்மேற்கில் கன்னிமூலை கணபதியும், வடமேற்கில் சுப்பிரமணியரும் உள்ளனர். திருக்கச்சி அனேகதங்காவதம் திருக்கோயில் கல்வெட்டுகள் தென்னிந்திய கல்வெட்டுகளிலும், இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. (A.R.No. 22,23,24, of 1890) முதலாம் குலோத்துங்கச் சோழனின் மெய்க்கீர்த்திகளைக் கொண்டு விளங்கும் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இத்திருக்கோயில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் காஞ்சிபுரத்து ஆளுடையார் திருவனெகதங்காபதமுடைய மகாதேவர் என்று இக்கோயில் இறைவன் குறிப்பிடப்படுகிறார். முதலாம் குலோத்துங்கச் சோழனின் 34-ஆம் ஆட்சியாண்டில், இக்கோயில் மகாதேவர்க்கு நித்த நிவந்தங்களைச் செய்ய இக்கோயிலுக்கு வடக்கும், புத்தேரிக்கு தெற்கும் நடுவில் உள்ள வடதாழம்பட்டத்துடைப்புக்கு உட்பட்ட தெற்கடைய இட்ட நிலம் இருவேலியும் இறையிலி நிலக்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே இம்மன்னனின் 20-ஆம் ஆட்சியாண்டில் மூன்று வேலி நிலம் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோயில் காக்கும் நாயகன் ஆன கம்பத்தரசுபட்டனும், திருமஞ்சணமழகியான செங்கதிர் செல்லனும், வல்லநாயகன் ஆன நல்லகம்பட்டனும் சேர்ந்து ஆயிரத்து நானூறு
653 : _ _ |a திருக்கச்சி அனேகதங்காவதம், அனேகதங்காவதேஸ்வரர், ஆனையுரித்தபிரான், காஞ்சிக் கோயில்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலம், முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு, பிற்காலச் சோழர் கலைப்பாணி
700 : _ _ |a மதுரை கோ.சசிகலா
710 : _ _ |a மதுரை கோ.சசிகலா
905 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / முதலாம் குலோத்துங்க சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 800ஆண்டுகள் பழமையானது. பிற்கால சோழர் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. திருக்கச்சி அனேகதங்காபதம் என்ற பெயரில் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது.
914 : _ _ |a 12.8278661
915 : _ _ |a 79.7231612
916 : _ _ |a ஸ்ரீஅனேகபேஸ்வரர்
927 : _ _ |a திருக்கச்சி அனேகதங்காவதம் திருக்கோயில் கல்வெட்டுகள் தென்னிந்திய கல்வெட்டுகளிலும், இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. (A.R.No. 22,23,24, of 1890) முதலாம் குலோத்துங்கச் சோழனின் மெய்க்கீர்த்திகளைக் கொண்டு விளங்கும் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இத்திருக்கோயில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் காஞ்சிபுரத்து ஆளுடையார் திருவனெகதங்காபதமுடைய மகாதேவர் என்று இக்கோயில் இறைவன் குறிப்பிடப்படுகிறார். முதலாம் குலோத்துங்கச் சோழனின் 34-ஆம் ஆட்சியாண்டில், இக்கோயில் மகாதேவர்க்கு நித்த நிவந்தங்களைச் செய்ய இக்கோயிலுக்கு வடக்கும், புத்தேரிக்கு தெற்கும் நடுவில் உள்ள வடதாழம்பட்டத்துடைப்புக்கு உட்பட்ட தெற்கடைய இட்ட நிலம் இருவேலியும் இறையிலி நிலக்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே இம்மன்னனின் 20-ஆம் ஆட்சியாண்டில் மூன்று வேலி நிலம் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோயில் காக்கும் நாயகன் ஆன கம்பத்தரசுபட்டனும், திருமஞ்சணமழகியான செங்கதிர் செல்லனும், வல்லநாயகன் ஆன நல்லகம்பட்டனும் சேர்ந்து ஆயிரத்து நானூறு குழி நிலம் இக்கோயில் கைக்கோளற்கும், ஆனையுரித்த மாராயற்கும், தேவரடியார்க்கும் காணிக்கையாக விட்டுள்ளனர்.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் நந்தி மண்டபத்தில் சிறிய நந்தி சிற்பம் ஒன்றும், திருச்சுற்றில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. திருச்சுற்றின் பரிவாரத் தெய்வங்களாக தென்மேற்கில் கன்னிமூலை கணபதியும், வடமேற்கில் சுப்பிரமணியரும் உள்ளனர். கோபுரங்கள் இங்கு இல்லை. தூண்கள இடம் பெறவில்லை.
932 : _ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. சதுரவடிவமான கருவறையும் அடுத்து அர்த்த மண்டபமும் கொண்ட சிறிய எளிய கோயிலாக விளங்குகிறது. கருவறையில் சோழர்கால பெரிய இலிங்கம் இடம் பெற்றுள்ளது. நந்திக்கு சிறிய மண்டபம் ஒன்று உள்ளது. தாங்குதளத்திலிருந்து கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், விமானத்தின் மேற்பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. திருமதில் சுவர் அமைந்துள்ளது. கிணறு ஒன்று உள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லலாம். செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்தும் காஞ்சிபுரம் செல்லலாம்.
936 : _ _ |a காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை
937 : _ _ |a காஞ்சிபுரம்
938 : _ _ |a செங்கல்பட்டு
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000005
barcode : TVA_TEM_000005
book category : சைவம்
cover images TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_நுழைவாயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_நுழைவாயில்-0001.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_தோற்றம்-0002.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_விமானம்-தளம்-0003.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_விமானம்-0004.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_தூண்-0005.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_நந்தி-மண்டபம்-0006.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_சுந்தரர்-தேவாரம்-0007.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_கல்வெட்டுகள்-0008.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_கன்னிமூலை-கணபதி-0009.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_கணபதி-0010.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0011.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_பிரம்மன்-0012.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_விஷ்ணு-0013.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_துர்க்கை-0014.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_நால்வர்-0015.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_முருகன்-0016.jpg

TVA_TEM_000005/TVA_TEM_000005_கச்சி-அனேகதங்காவதம்-கோயில்_சண்டேசுவரர்-0017.jpg