MARC காட்சி

Back
ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில்
245 : _ _ |a ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில் -
246 : _ _ |a கைலாசநாதர் கோயில்
520 : _ _ |a இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. பல்லவமன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பராந்தக சோழன் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இக்கோயில் இறைவன் அமரேஸ்வரப் பெருமான் என்றும், இவ்வூர் நந்திவர்ம மங்கலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர் நந்திவர்ம பல்லவன் பெயரில் குறிப்பிடப்படுவதை நோக்குகையில் இவ்வூர் சதுர்வேதி மங்கலமாக கொடையளிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. பல்லவர் காலத்தில் செங்கல் தளியாக எடுப்பிக்கப்பட்ட இக்கோயில் சோழர் காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிகிறது. காவிரிக்கரையின் இருமருங்கும் முதலாம் பராந்தக சோழன் சிவபெருமானுக்கு கற்றளிகளை எழுப்பியுள்ளான். அத்தகு கோயில்களில் இதுவும் ஒன்றாகும். எளிய அமைப்புடைய இக்கோயில் கருவறை மற்றும் பல்லவ பாணியில் அமைந்துள்ளது. அதாவது மாமல்லபுர வராகக்குடைவரை கருவறை போன்று யானை துதிக்கை கைப்பிடிகளுடன் கொண்ட படிகளைக் கொண்டுள்ளது. படிகளின் தொடக்கத்தில் அரைவட்ட சந்திரக்கல் அமைந்துள்ளது. அர்த்தமண்டபமும் மற்றும் பிற கலைப்பாணிகளும் சோழர் காலத்தவை. எனினும் சிற்பங்கள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை.
653 : _ _ |a ஆலம்பாக்கம் சிவன் கோயில், திருச்சி ஆலம்பாக்கம், ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில், புள்ளம்பாடி வட்டாரக் கோயில்கள், திருச்சி கோயில்கள், முதலாம் பராந்தகன் கோயில்கள், திருச்சி பல்லவர் கோயில்கள், அமரேஸ்வரப் பெருமான் கோயில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / பல்லவமன்னன் இரண்டாம் நந்தி வர்மன், முதலாம் பராந்தக சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 10.921166
915 : _ _ |a 78.9571069
916 : _ _ |a கைலாசநாதர்
927 : _ _ |a இக்கோயில் கருவறைச் சுற்றின் வெளிப்புறச் சுவர்களின் சுற்றுப்பிரகாரத்தில் முதலாம் பராந்தகன் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் ஆட்சி முதலாம் பராந்தகன் காலத்தில் (கி.பி.907-955) இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இக்கோயில் “அமரேஸ்வரப் பெருமான்“ கோயில் என்றும், இவ்வூர் ”நந்திவர்ம மங்கலம் ” என்றும் குறிப்பிடப்படுகிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கோயில் கருவறையில் இலிங்கம் ஆவுடையார் வடிவில் உள்ளது. வேறு சிற்பங்கள் காணப்படவில்லை.
932 : _ _ |a இக்கோயில் கருவறை பல்லவமன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தியது ஆகும். முதலாம் பராந்தகச் சோழன் இக்கோயிலை கி.பி.10-ஆம் நூற்றாண்டில் புதுப்பித்துள்ளதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோயிலில் கருவறை விமானத்தின் தளப்பகுதி காணப்படவில்லை. தாங்குதளத்திலிருந்து கூரைப்பகுதி வரை கற்றளியாக அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கோட்டங்களில் சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை. எளிய கட்டிட அமைப்பாக இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறைச் சுற்றில் உள்ள சுவர்ப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a லால்குடி கோயில், நாஞ்சிக்குடி, தஞ்சைக் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி-திருமழபாடி சாலையில் லால்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. லால்குடியிலிருந்து ஆலம்பாக்கம் செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a லால்குடி, புள்ளம்பாடி
938 : _ _ |a கல்லக்குடி, புள்ளம்பாடி, தஞ்சாவூர்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a திருச்சி, தஞ்சாவூர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000047
barcode : TVA_TEM_000047
book category : சைவம்
cover images TVA_TEM_000047/TVA_TEM_000047_கைலாசநாதர்-கோயில்_சுவர்-0005.jpg :
Primary File :

TVA_TEM_000047/TVA_TEM_000047_கைலாசநாதர்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000047/TVA_TEM_000047_கைலாசநாதர்-கோயில்_தாங்குதளம்-0002.jpg

TVA_TEM_000047/TVA_TEM_000047_கைலாசநாதர்-கோயில்_கருவறை-0003.jpg

TVA_TEM_000047/TVA_TEM_000047_கைலாசநாதர்-கோயில்_அர்த்தமண்டபம்-0004.jpg

TVA_TEM_000047/TVA_TEM_000047_கைலாசநாதர்-கோயில்_சுவர்-0005.jpg