MARC காட்சி

Back
கோபுரப்பட்டி சிவன் கோயில்
245 : _ _ |a கோபுரப்பட்டி சிவன் கோயில் -
246 : _ _ |a பாச்சில் அவனீஸ்வரர்
520 : _ _ |a இக்கோயில் வாயில் மேற்கு நோக்கி உள்ளது. இக்கோயிலின் கருவறையில் 16 பட்டைகளுடன் கூடிய இலிங்கமும் (தாரலிங்கம்), தாமரைப்பூ வடிவில் ஆவுடையாரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறையும் அர்த்தமண்டமும் கொண்டதாக விளங்குகிறது. இக்கோயில் தற்போது விமானத்தின் தளம் இன்றி காணப்படுகிறது. சோழர்கள் காலத்தில் விமானத்தின் தளம் செங்கற்களால் கட்டப்பட்டதால் சிதைவுற்றது. இக்கோயில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. சதுரவடிவமான கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். அர்த்த மண்டபத்தில் சோழர்கால உருளைத்தூண்கள் அமைந்துள்ளன. தேவகோட்டங்களில் முறையே சிற்பங்கள் அமைந்துள்ளன. தாங்குதளத்தில் இராமாயண மற்றும் சிவ வடிவ புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கொடுங்கையின் கீழே பூதவரிகள் ஆடல் பாடலுடன் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள நடனமாதர்கள் இவ்வூரில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இவ்வூரில் நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் இக்கோயில் மிகவும் சிறப்புடையதாய் இருந்திருக்கிறது என்பதை இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். கோயிலில் தேவக்கோட்டத்தில் முறையே தெற்கில ஆலமர்செல்வனும், மேற்கே திருமாலும், வடக்கே நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் வடக்கில் மகிஷமர்த்தினியும் அமைந்துள்ளனர். தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்களும், சிவவடிவங்களும் வரிசையாகக் காட்டப்பட்டுள்ளன. கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் கொடுங்கைக்கு கீழே நாற்புறமும் செல்லும் பூதவரிகள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் ஆடல் மங்கையர் காட்டப்பட்டுள்ளனர். மேலும் ஆடல் பாடலுடன் பூதகணங்களும் வரிசையாக செல்கின்றன. கோபுரப்பட்டி சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இவ்வூரினை “பாச்சில்“ என்றும், ஊர்ப்பிரிவு “மழநாட்டு ராஜாச்ரய வளநாட்டு பாச்சில்“ என்றும் குறிக்கப்படுகிறது. இக்கோயில் கல்வெட்டினைக் கொண்டு இக்கோயில் கி.பி.975-இல் உத்தமசோழனால் கட்டப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. உத்தமசோழனின் தாயாரும் கண்டராதித்த சோழனின் பட்டத்தரசியுமான செம்பியன் மாதேவியார் இக்கோயிலுக்கு நிலை விளக்குகள் கொடையளித்துள்ளார். உத்தமசோழனின் தேவியார் நக்கன் வீரநாராயணியார் இக்கோயிலுக்கு அவனீச்சுவரர் செப்புத் திருமேனியும், உமாபரமேச்சுவரர் செப்புத் திருமேனியும் செய்தளித்துள்ளார். வைகாசி விசாகம் திருநாளுக்கு வகை செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் சதய நட்சத்திரத்தன்று இராஜராஜன் பிறந்த நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், திருவமுதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் இராஜராஜனின் முன்பிறந்த தமக்கையார் குந்தவைப் பிராட்டியார் பிறந்த அவிட்டத்தன்று சிறப்பு வழிபாட்டிற்கு வகை செய்யப்பட்டது. இக்கோயில் தஞ்சை பெரியகோயிலில் உள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
653 : _ _ |a கோபுரப்பட்டி சிவன் கோயில், பாச்சில் அவனீச்சுவரம், அவனீஸ்வரர் கோயில், பாச்சில் சிவன் கோயில், உத்தமசோழன் கோயில், செம்பியன்மாதேவி கொடை, திருச்சிக் கோயில்கள், முற்கால சோழர் கலைப்பாணி, முற்காலச் சோழர் கோயில்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / உத்தம சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 10.87494779
915 : _ _ |a 78.81626129
916 : _ _ |a பாச்சில் அவனீஸ்வரர்
927 : _ _ |a கோபுரப்பட்டி சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இவ்வூரினை “பாச்சில்“ என்றும், ஊர்ப்பிரிவு “மழநாட்டு ராஜாச்ரய வளநாட்டு பாச்சில்“ என்றும் குறிக்கப்படுகிறது. இக்கோயில் கல்வெட்டினைக் கொண்டு இக்கோயில் கி.பி.975-இல் உத்தமசோழனால் கட்டப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. உத்தமசோழனின் தாயாரும் கண்டராதித்த சோழனின் பட்டத்தரசியுமான செம்பியன் மாதேவியார் இக்கோயிலுக்கு நிலை விளக்குகள் கொடையளித்துள்ளார். உத்தமசோழனின் தேவியார் நக்கன் வீரநாராயணியார் இக்கோயிலுக்கு அவனீச்சுவரர் செப்புத் திருமேனியும், உமாபரமேச்சுவரர் செப்புத் திருமேனியும் செய்தளித்துள்ளார். வைகாசி விசாகம் திருநாளுக்கு வகை செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் சதய நட்சத்திரத்தன்று இராஜராஜன் பிறந்த நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், திருவமுதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் இராஜராஜனின் முன்பிறந்த தமக்கையார் குந்தவைப் பிராட்டியார் பிறந்த அவிட்டத்தன்று சிறப்பு வழிபாட்டிற்கு வகை செய்யப்பட்டது. இக்கோயில் தஞ்சை பெரியகோயிலில் உள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கோயிலில் தேவக்கோட்டத்தில் முறையே தெற்கில் ஆலமர்செல்வனும், மேற்கே திருமாலும், வடக்கே நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் வடக்கில் மகிஷமர்த்தினியும் அமைந்துள்ளனர். தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்களும், சிவவடிவங்களும் வரிசையாகக் காட்டப்பட்டுள்ளன. கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் கொடுங்கைக்கு கீழே நாற்புறமும் செல்லும் பூதவரிகள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் ஆடல் மங்கையர் காட்டப்பட்டுள்ளனர். மேலும் ஆடல் பாடலுடன் பூதகணங்களும் வரிசையாக செல்கின்றன.
932 : _ _ |a இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறையும் அர்த்தமண்டமும் கொண்டதாக விளங்குகிறது. இக்கோயில் தற்போது விமானத்தின் தளம் இன்றி காணப்படுகிறது. சோழர்கள் காலத்தில் விமானத்தின் தளம் செங்கற்களால் கட்டப்பட்டதால் சிதைவுற்றது. இக்கோயில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. சதுரவடிவமான கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். அர்த்த மண்டபத்தில் சோழர்கால உருளைத்தூண்கள் அமைந்துள்ளன. தேவகோட்டங்களில் முறையே சிற்பங்கள் அமைந்துள்ளன. தாங்குதளத்தில் இராமாயண மற்றும் சிவ வடிவ புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கொடுங்கையின் கீழே பூதவரிகள் ஆடல் பாடலுடன் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள நடனமாதர்கள் இவ்வூரில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இவ்வூரில் நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் இக்கோயில் மிகவும் சிறப்புடையதாய் இருந்திருக்கிறது என்பதை இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a பாச்சில் அமலேஸ்வரர் கோயில்-அழகிய மணவாளம், அகஸ்தீஸ்வரர் கோயில் பெருங்குடி
935 : _ _ |a சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி-திருப்பைஞ்ஞீலி சாலையில் மண்ணச்சநல்லூருக்கு அடுத்து கோபுரப்பட்டி என்னும சிற்றூரில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு மண்ணச்சநல்லூர் வழியாக செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a திருச்சி, மண்ணச்சநல்லூர்
938 : _ _ |a திருச்சி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a திருச்சி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000042
barcode : TVA_TEM_000042
book category : சைவம்
cover images TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தென்புறம்-0003.jpg :
Primary File :

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தென்புறம்-0003.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_கோயில்-தோற்றம்-0001.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_மேற்குப்புறம்-0002.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தாங்குதளம்-சுவர்-0004.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தூண்-0005.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தூண்-அமைப்பு-0006.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தாங்குதளம்-கல்வெட்டு-0007.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தாங்குதளம்-கல்வெட்டு-0008.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தாங்குதளம்-கல்வெட்டு-0009.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தாங்குதளம்-கல்வெட்டு-0010.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தாங்குதளம்-கல்வெட்டு-0011.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0012.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_விஷ்ணு-0013.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_பிரம்மன்-0014.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_துர்க்கை-0015.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தேவகோட்டம்-0016_.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_கூரை-0017.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_வெற்றுக்கோட்டம்-0018.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தாங்குதளம்-தூண்-0019.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_கருவறை-0020.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_கோயில்-முழுத்தோற்றம்-0021.jpg

TVA_TEM_000042/TVA_TEM_000042_சிவன்-கோயில்_தகவல்-பலகை-0022.jpg