MARC காட்சி

Back
ஆச்சாள் புரம் சிவலோகத்தியாகர் கோயில்
245 : _ _ |a ஆச்சாள் புரம் சிவலோகத்தியாகர் கோயில் -
246 : _ _ |a சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர், திருமணவை, கல்லூர்ப் பெருமணம்
520 : _ _ |a திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இக்கோயில் தேவார முதலிகளுள் ஒருவரான திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலமென்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பாடல் வரிகளால் அறியமுடிகிறது. திருஞானசம்பந்தர் “காதலாகிக் கசிந்து“ என்னும் கடைசிப் பதிகத்தை இத்தலத்தில் பாடியுள்ளார்.
653 : _ _ |a கோயில், தமிழ்நாட்டு சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், சிவன் கோயில், ஆச்சாள்புரம், திருநல்லூர்ப் பெருமணம், கல்லூர்ப் பெருமணம், காதலாகிக் கசிந்து, திருஞானசம்பந்தர் திருமணம், சீர்காழி, நாகப்பட்டினம்
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 04364-278272, 277800
905 : _ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
914 : _ _ |a 11.329274
915 : _ _ |a 79.756107
918 : _ _ |a திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி
922 : _ _ |a மாமரம்
923 : _ _ |a பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்
925 : _ _ |a ஆறுகால பூசை
926 : _ _ |a மகாசிவராத்திரி
927 : _ _ |a சோழர், பாண்டியர், மராட்டியர் ஆட்சிக் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கல்வெட்டில் இறைவன் 'திருப்பெருமண முடைய மகாதேவர்' என்று குறிக்கப்படுகின்றார். இக்கோயிலில் விளக்கெரிக்க நிலக்கொடைகளும், ஆடு, மாடு மற்றும் பொன் கொடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காணப்படுகிறார். திருநீற்று உமையம்மை நின்ற கோலத்தில் உள்ளார். திருஞானசம்பந்தர் தன் உடனுறை மங்கை நல்லாளுடன் காட்டப்பட்டுள்ளார். கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் ஆலமர்க்கடவுள், அண்ணாமலையார், நான்முகன் சிற்பங்களும், அர்த்தமண்டப வட, தென்புற கோட்டங்களில் முறையே கணபதி, துர்க்கை ஆகிய சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இறைவன் கருவறையின் நுழைவாயிலின் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது. திருச்சுற்றில் மகாகணபதி, சுப்பிரமணியர், இலிங்க வடிவில் ருணவிமோசனர், மகாலெட்சுமி ஆகிய சிற்பங்களும் வழிபாட்டில் உள்ளன. கருவறை உட்சுற்றில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இத்திருமேனிகளுள் திரிபுரசம்ஹாரர், சந்திரசேகரர், வாயிலார், சேக்கிழார், பிட்சாடனர், சம்பந்தருடன் உடன் ஐக்கியமான நீலகண்டயாழ்ப்பாணர், மதங்கசூளாமணி, நீலநக்கர், முருகநாயனார், திருமணக்கோலத்தில் 'தோத்திர பூர்ணாம்பிகை'யுடன் கூடியுள்ள திருஞானசம்பந்தர் முதலிய செப்புத்திருமேனிகள் குறிப்பிடத்தக்கவை.
930 : _ _ |a ஆச்சாள்புரம் எனப்படும் திருநல்லூர்ப் பெருமணம் என்னும் இத்திருத்தலம் முக்தித் தலமாகும். வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இத்தலத்தில் இறைவன் கயிலைக் காட்சி காட்டி அருள்புரிந்துள்ளார். பிரம்மன் சிவலோகத் தியாகரை வழிபட்டு படைப்புத் தொழிலை மீண்டும் தொடங்கினார். விஷ்ணு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். சந்திரனுக்கு அருளி அபயமளித்த தலம் இதுவே. இந்திரன் இத்தல இறைவனை வணங்கி வளம் பல பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகிறது. கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும் என்பது நம்பிக்கை. காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் திருஞானசம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் இத்தலத்தில் தன் திருமணத்தின் போது “காதலாகிக் கசிந்து“ என்னும் நமசிவாய திருப்பதிகம் பாடி தன் குழுமத்தோடு இறைசோதியில் கலந்து முக்தி பெற்றார்.
932 : _ _ |a இக்கோயில் ஐந்து நிலை கொண்ட இராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. இராஜகோபுர நுழைவாயிலைத் தொடர்ந்து கொடிமரம், நந்தி மண்டபம், அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகை என்கிற மங்கை நல்லாளுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது. இறைவி திருவெண்ணீற்று உமையம்மை திருமுன் இக்கோயிலின் மேற்குப்புற வெளிச்சுற்றில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு திருச்சுற்றுடன் அமைந்துள்ளது. கருவறையின் மேற்குச் சுற்றில் ஸ்ரீருணவிமோசனர், மகாலெட்சுமி திருமுன் அமைந்துள்ளன. வெளிப்புற சுற்றில் தென்மேற்கில் கன்னிமூலை கணபதியும், வடகிழக்கில் முருகனும் வழிபாட்டில் உள்ளனர்.
933 : _ _ |a தருமபுர ஆதினம்
934 : _ _ |a சீர்காழி தோணியப்பர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில்
935 : _ _ |a சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் புதிய பாலத்தைத் தாண்டி, கொள்ளிடம் ஊரை அடைந்து, மெயின் ரோட்டில் வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் இடதுபுறமாக சென்றால் இத்தலத்தை அடையலாம்.
936 : _ _ |a காலை 6.00 முதல் பகல் 12 மணி வரை மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரை
937 : _ _ |a ஆச்சாள்புரம்
938 : _ _ |a காட்டுமன்னார்குடி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a சீர்காழி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000328
barcode : TVA_TEM_000328
book category : சைவம்
cover images TVA_TEM_000328/TVA_TEM_000328_ஆச்சாள்புரம்_சிவலோகத்தியாகர்-கோயில்-0004.jpg :
Primary File :

TVA_TEM_000328/TVA_TEM_000328_ஆச்சாள்புரம்_சிவலோகத்தியாகர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000328/TVA_TEM_000328_ஆச்சாள்புரம்_சிவலோகத்தியாகர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000328/TVA_TEM_000328_ஆச்சாள்புரம்_சிவலோகத்தியாகர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000328/TVA_TEM_000328_ஆச்சாள்புரம்_சிவலோகத்தியாகர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000328/TVA_TEM_000328_ஆச்சாள்புரம்_சிவலோகத்தியாகர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000328/TVA_TEM_000328_ஆச்சாள்புரம்_சிவலோகத்தியாகர்-கோயில்-0006.jpg