MARC காட்சி

Back
ஏர்வாடி தர்கா
245 : _ _ |a ஏர்வாடி தர்கா -
246 : _ _ |a ஏர்வாடி தர்கா, கீழக்கரை தர்கா, சந்தனக்கூடு தர்கா
520 : _ _ |a ஏர்வாடி தர்கா குதுபுஸ் சுல்தான் சையத் இப்ராஹிம் பதுஷாவின் சன்னதிக்குத் திரும்பும் ஒரு புனித இஸ்லாமிய புனித கல்லறையாகும், மேலும் சயீத் இப்ராஹிம் உலியல்லா அல்லது சீயத் அலி எனும் பெயரிடப்பட்டுள்ளது. இது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எர்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது. செய்யத் அலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய தர்கா. இங்கு மூன்று தர்காக்கள் உள்ளன, ஷாஹித் தாயின் பாத்திமாவின் ஒன்றில், இரண்டாவதாக அவரது மனைவி சீயத் அலி பாத்திமா மற்றும் அவரது மகன் அபு தாஹிர் மூன்றாவது நபராக உள்ளார். தர்காக்களை கட்டியெழுப்பும் நிலம் ராமநாதபுரம் மற்றும் தர்காவின் மகாராஜாவிலிருந்து கிடைத்தது, ஆற்காடு நவாப் 1207 ஆம் ஆண்டு அரபு தேதியில் முக்கிய தர்காவைக் கட்டியெழுப்பினார், அது எக்டிபாக்கிற்கு பெயரிட்டது. தர்கா மனநோயாளிகளின் மனச்சோர்வைக் குணப்படுத்துவதற்கு நன்கு அறியப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இந்த கோவிலுக்கு விஜயம் செய்கின்றனர். நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் குணமாக்கல் ஒரு நாளைக்கு இரண்டு முறை தர்காவில் இருந்து புனித நீர் மட்டுமே, பிரார்த்தனைகளே தவிர. உரூஸ் எனப்படும் சந் தனக்கூடு திருவிழா இரவு தொடங்கி அதிகாலை வரை சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் விழா என்பதற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூட்டை தாங்கும் அடித்தளம் ஆசாரி சமூகத்தினரால் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகிய கூடுகளை யாதவர்களும், ஆதிதிராவிடர்களும் தர்காவில் இருந்து தூக்கி வந்து அடுக்கடுக்காக வைத்து அலங்கரிப்பார்கள். முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மனமுவந்து கொண்டு வரும் கடல் நீரை கொண்டு தர்கா சுத்தம் செய்யப்படும். சம்பிரதாயப்படி தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதி திராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி சந்தனக்கூடு வழிகாட்டியாக அமைத்து கூடு புறப்பட தயார் நிலையில் வைப்பார்கள். ஏர்வாடியில் இருந்து யானைகள், குதிரைகள் பவனி வர மேள தாளம், ஆடல்பாடல், வான வேடிக்கைகளுடன் ஊர்வலம் தர்காவை நோக்கி வரும். ஏர்வாடியில் இருந்து காட்டுப்பள்ளி தர்கா போகும் வழிவரை யாதவர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை தூக்கி வருவார்கள். அங்கிருந்து தர்கா வரை முத்தரையர் சமூகத்தினர் தூக்கிவருவார்கள். இவ்வாறு அனைத்து மதத்தினரும் ஒன்றாக இந்த விழாவை கொண்டாடுவது காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். தர்காவிற்கு கொண்டு வந்த சந்தன சொம்பை மார்க்க அறிஞர்கள் பாத்தியா ஓதிய பிறகு மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா மக்பாராவில் (சமாதி) சந்தனம் பூசுவார்கள். சந்தனக்கூடு திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அனைத்து மத பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.
653 : _ _ |a ஏர்வாடி, தர்கா, கீழக்கரை, இராமநாதபுரம், குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா, சந்தனக்கூடு, உரூஸ், முஸ்லீம் தர்கா, இஸ்லாமிய புனித கல்லறை, இசுலாமியம், செய்யது அலி
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.1176
909 : _ _ |a 8
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது.
914 : _ _ |a 9.20826966
915 : _ _ |a 78.71000062
916 : _ _ |a மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா
923 : _ _ |a கடல் நீர்
926 : _ _ |a சந்தனக்கூடு
928 : _ _ |a இல்லை
930 : _ _ |a இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி தர்கா அமைந்துள்ளது இங்கு அடக்கமாகி உள்ள முஸ்லிம் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லாவின் அருளால் ஏர்வாடி தர்காவில் அன்றாடம் அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகிறது. இந்த தர்காவுக்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் பெருமளவு இந்துக்க ளும், பிற மதத்தினரும் திரண்டு வருகின்றனர். மகான் இபுராகீம் ஷகீது கி.பி.1137ம் ஆண்டு நபிகள் நாயகத்தின் 18ம் வாரிசுகளான செய்யது முகமது-செய்யது பாத்திமா தம்பதியின ரின் புதல்வராக பிறந்தார். அரபு நாட்டில் மதினாவில் மன்னராக வாழ்ந்து வந்தவர் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா. தனது 13வது வயதினிலேயே திருக்குரானை மனதில் பதியம் போட்ட இவர் இறை வனின் நாட்டப்படி கி.பி.1163ல் அரச பதவியை துறந்தார். அதன் பின்னர் அவர் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய மார்க்கத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு ஈராக், ஈரான், பாகிஸ்தான் வழியாக சுமார் 3,000 தொண்டர்களுடன் இந்தியா வந்தார். அவர் தன் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்து மார்க்க பிரசாரம் செய்தார். இந்தியாவில் முசிறி துறைமுகத்தை அடைந்த பாதுஷா நாயகம் புன்னைகாயல் சென்றார். அதனை தொடர்ந்து இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிக்கு தன் அமைச்சர்கள், பிரதானிகள் மற்றும் படை பட்டாளத்தோடு வந்தார். ஏர்வாடியில் நடந்த போரில் ஒலியுல்லா வின் மகன் செய்யது அபுதாகீர் உள்பட பலர் மரணம் அடைந்தனர். இதன்பின் மகான் சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா இன்று ஏர்வாடி என்று அழைக்கப்படும் அன்றைய பவுத்திர மாணிக்க பட்டினத்தை தலைநகராக கொண்டு 12½ ஆண்டுகள் அரசாட்சி நடத் தினார். இதன் பின்னர் நடந்த போரில் அவர் தியாக மரணம் அடைந்தார். அவர் மற்றும் உடன் வந்த பலர் தியாக மரணம் அடைந்ததால் அவர்களின் சமாதிகள் தர்கா பகுதியில் உள்ளன. இதில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லாவின் சமாதி (மக்பாரா) பிரதான தர்காவாக உள்ளது. அன்று முதல் இன்று வரை இவரின் அருளால் ஏர்வாடி தர்கா ஆன்மிக அருள்நிறைந்த புண்ணிய பூமியாக உள்ளது.
932 : _ _ |a ஏர்வாடி தர்கா வளாகத்தில் சாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கி செல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாத சேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார். மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை. சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும்.
933 : _ _ |a ஏர்வாடி தர்கா ஹக்தர்கள் பொது மகா சபை
934 : _ _ |a கீழக்கரை, திருப்புல்லாணி, திருஉத்தரகோச மங்கை, இராமேஸ்வரம், இராமநாதபுரம் அரண்மனை, தனுஷ்கோடி, சேதுபாலம், பாம்பன் பாலம்
935 : _ _ |a கீழக்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
937 : _ _ |a ஏர்வாடி, கீழக்கரை
938 : _ _ |a இராமநாதபுரம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a ஏர்வாடி, கீழக்கரை, இராமநாதபுரம் நகர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000156
barcode : TVA_TEM_000156
book category : இசுலாம்
cover images TVA_TEM_000156/TVA_TEM_000156_இராமநாதபுரம்_ஏர்வாடி_தர்கா-0005.jpg :
Primary File :

TVA_TEM_000156/TVA_TEM_000156_இராமநாதபுரம்_ஏர்வாடி_தர்கா-0005.jpg

TVA_TEM_000156/TVA_TEM_000156_இராமநாதபுரம்_ஏர்வாடி_தர்கா-0001.jpg

TVA_TEM_000156/TVA_TEM_000156_இராமநாதபுரம்_ஏர்வாடி_தர்கா-0002.jpg

TVA_TEM_000156/TVA_TEM_000156_இராமநாதபுரம்_ஏர்வாடி_தர்கா-0003.jpg

TVA_TEM_000156/TVA_TEM_000156_இராமநாதபுரம்_ஏர்வாடி_தர்கா-0004.jpg