MARC காட்சி

Back
திருவெள்ளக்குளம் கண்ணன் நாராயணன் கோயில்
245 : _ _ |a திருவெள்ளக்குளம் கண்ணன் நாராயணன் கோயில் -
246 : _ _ |a திருவெள்ளக்குளம், அண்ணன் கோயில்
520 : _ _ |a திருமலையில் பெருமாளுக்குரிய திருநாமமான ஸ்ரீனிவாசன் என்பதும் பிராட்டியின் திருநாமமான அலர்மேல் மங்கைத் தாயார் என்பதும். அதே பெயர்களில் வழங்கும் இன்னொரு திவ்ய தேசம் 108 இல் இது ஒன்றுதான். வேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது ஐதீஹமாவதால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் பகர்வர். இந்த ஸ்வேத புஷ்கரணியில் உள்ள குமுத மலர்களைக் கொய்து செல்ல தேவகுலப் பெண்கள் இங்கு வருவது ஒரு காலத்தில் வழக்கமாயிருந்ததாம். அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுலப்பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி இங்கேயே நின்று விட்ட குமுதவல்லியைத்தான் திருமங்கையாழ்வார் திருமணம் செய்ய விழைந்தார். எனவே இத்தலம் குமுதவல்லியாரின் அவதார ஸ்தலம் என்பதோடு மட்டுமின்றி திருமங்கையாழ்வாரை இவ்வுலகிற்கு அளித்தமைக்கும் எல்லை நிலமாயிற்று. அதாவது நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாகத் திகழ்ந்த திருமங்கை குமுதவல்லியைப் பற்றிக் கேள்விப்பட்டு பெண் கேட்டு வர, குமுதவல்லியார் ஒவ்வொரு நிபந்தனையாக விதித்து நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் திருமணம் என்று சொல்ல இவரும் நிபந்தனைகளை நிறைவேற்ற ஈடுபட்டு, இறுதியில் ஆழ்வாரானார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார். திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். பிள்ளைப் பெருமாளையங்காரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார். அழகிய மணவாள தாசருக்கு (மணவாள மாமுனிகட்கு) இறைவன் இங்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம். மணவாள மாமுனி எம்பெருமானைத் தேட எம்பெருமான் மணவாள மாமுனியைத் தேட இருவரும் இங்குள்ள தடாகத்தே சந்தித்து விடாய் தீர்த்தனர் என்பர். திருமலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள் தனித்து நிற்கிறார். அந்தக் குறையைப்போக்கிக் கொள்ள இங்கு அலர் மேல் மங்கைத் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பம்சமாகும். இத்தலத்தில் குமுதவல்லியாரும் கோவில் கொண்டுள்ளார். நம்பி என்றும், எம்பெருமானே என்றும் திருமாலை அழைத்து வந்த திருமங்கையாழ்வார் அண்ணா என்ற அழகு தமிழ்ச்சொல்லால் எந்த ஆழ்வாரும் சொல்லாத ஒரு புரட்சிகரமான சொல்லை இரண்டு ஸ்தலங்களின் ஸ்ரீனிவாசன்களுக்குச் சூட்டி மகிழ்கிறார். இது மக்கட்பேறளிக்கும் ஸ்தலமாகும். திருமண காரியங்களை இங்கு வேண்டிக் கொண்டால் சீக்கிரம் நிறைவேறும். ஆயுள் விருத்தியை அளிக்கக் கூடிய ஸ்தலமாகும். ஒரு பிரார்த்தனை தலம் போல வளர்ந்து கொண்டிருக்கும் இத்தலம் மிக்க அழகான சூழ்நிலையில் அமைந்த எழிலான கிராமத்தில் ஸ்ரீனிவாச அண்ணனைப் பொலிவோடு பெற்றுத் திகழ்கிறது. திருமலையைப் போன்றே இங்கும் பிரம்மோத்ஸ்வம் புரட்டாசி மாதமே நடைபெறுகிறது. இப்பகுதி பலாசவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
653 : _ _ |a கோயில், வைணவம், திருவெள்ளக்குளம், நாகை, நாகப்பட்டினம், திருநாங்கூர், திருமங்கையாழ்வார், அலர்மேல்மங்கை, ஸ்ரீநிவாசன், 108 திருப்பதி, திவ்ய தேசம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 108- திவ்ய தேசங்களில் ஒன்று. 39-வது திருத்தலமாகும். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்.
914 : _ _ |a 11.1900824
915 : _ _ |a 79.4320715
916 : _ _ |a அண்ணன் பெருமாள்
917 : _ _ |a ஸ்ரீனிவாசப் பெருமாள்
918 : _ _ |a அலர் மேல் மங்கை, பத்மாவதித் தாயார், பூவார் திருமகள்
922 : _ _ |a வில்வம், பரசு
923 : _ _ |a ஸ்வேத புஷ்கரணி-வெள்ளக்குளம்
925 : _ _ |a ஆறுகால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a திருவெள்ளக்குள பொய்கைக் கரையில் ஆஞ்சநேயர் சிறு சந்நதி கொண்டிருக்கிறார். துவஜஸ்தம்பத்தின் கீழ் கருடாழ்வார் காட்சியளிக்கிறார். கருவறையில் ஸ்ரீதேவி-பூமிதேவி சமேதராக அண்ணன் பெருமாள் கம்பீரமாக நின்றிருக்கிறார்.
930 : _ _ |a திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று. முன்னொருகாலத்தில் சூர்யவம்சத்தைச் சார்ந்த துந்துமாரன் என்னும் மன்னனுக்கு சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு 9 வயதில் மரண கண்டமென்றும் அதிலிருந்து மீள முடியாதென்றும் சாஸ்திர வாதிகளால் தெரிந்த மன்னன் அதற்குப் பிராயசித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுகினான். அவர் இவ்விடத்திற் சென்று (ஆயுள் விருத்தி) மந்திரஞ் ஜெபித்து மரண கண்டத்தை வெல்லுமாறு கூறினார். எனவே இவ்விடம் வந்த சுவேதன், இங்கு தவம் செய்து கொண்டிருந்த மருத்த முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து மந்திரப் பயிற்சிப் பெற்று தடாகத்தின் தெற்கில் வில்வ மரத்தடியில் வடக்கு முகமாயமர்ந்து ஆயுள் விருத்தி மந்திரத்தை ஜெபித்து (ஐப்பசிமாதம் வளர்பிறை தசமி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி வரை ஒரு மாதம்) கடுந்தவமியற்ற சிறுவனின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு அவனுக்கு காட்சி கொடுத்து மரண கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல நீடித்த ஆயுளை நல்கினார். இவ்விதம் சுவேதன் பகவானின் அருள் பெற்றதால் ஸ்வேத புஷ்கரணி என்றாகி தமிழில் வெள்ளக்குளம் ஆயிற்று.
932 : _ _ |a இத்தலத்து விமானம் தத்வத் யோதக விமானம் என்ற அமைப்பைப் பெற்று விளங்குகிறது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a சீர்காழி, மயிலாடுதுறை
935 : _ _ |a இத்தலம் சீர்காழி - தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 -12.30 முதல் மாலை 4.30-9.30 வரை
937 : _ _ |a திருவெள்ளக்குளம்
938 : _ _ |a சீர்காழி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a சீர்காழி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000142
barcode : TVA_TEM_000142
book category : வைணவம்
cover images TVA_TEM_000142/TVA_TEM_000142_நாகப்பட்டினம்_திருவெள்ளக்குளம்-பெருமாள்-கோயில்-முகப்பு-0001.jpg :
Primary File :

TVA_TEM_000142/TVA_TEM_000142_நாகப்பட்டினம்_திருவெள்ளக்குளம்-பெருமாள்-கோயில்-முகப்பு-0001.jpg

TVA_TEM_000142/TVA_TEM_000142_நாகப்பட்டினம்_திருவெள்ளக்குளம்-பெருமாள்-கோயில்-முகப்பு-0002.jpg

TVA_TEM_000142/TVA_TEM_000142_நாகப்பட்டினம்_திருவெள்ளக்குளம்-பெருமாள்-கோயில்-திருச்சுற்று-0003.jpg

TVA_TEM_000142/TVA_TEM_000142_நாகப்பட்டினம்_திருவெள்ளக்குளம்-பெருமாள்-கோயில்-திருச்சுற்று-0004.jpg

TVA_TEM_000142/TVA_TEM_000142_நாகப்பட்டினம்_திருவெள்ளக்குளம்-பெருமாள்-கோயில்-உற்சவர்-0005.jpg

TVA_TEM_000142/TVA_TEM_000142_நாகப்பட்டினம்_திருவெள்ளக்குளம்-பெருமாள்-கோயில்-கஜலெட்சுமி-0006.jpg

TVA_TEM_000142/TVA_TEM_000142_நாகப்பட்டினம்_திருவெள்ளக்குளம்-பெருமாள்-கோயில்-பொய்கை-0007.jpg

cg102v060.mp4