000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a விஷ்ணு துர்க்கை |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a வடபுறக் கோட்டத் தலைவியாகிய தாய்த் தெய்வம் விஷ்ணு துர்க்கை |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தாமரைப் பீடத்தின் மீது அன்னை சம பாதத்தில் நின்றுள்ளாள். பத்ர பூரிம முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தரித்துள்ளார். நெற்றியில் முக்கண் விளங்குகிறது. நீள் செவிகளில் மகர குண்டலங்கள் அணி செய்கின்றன. கழுத்தில் இரண்டடுக்கிலான ஆரங்கள் திகழ்கின்றன. மார்பில் குஜபந்தமும், முப்புரி நூலும், வயிற்றில் உதரபந்தமும், கைகளில் தோள்வளைகள், மூன்றடுக்கு முன் வளைகள் கொண்டுள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் எறிநிலை சக்கரமும், சங்கும் ஏந்தியுள்ளார். வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறு ஊரு முத்திரையும் காட்டுகின்றன. இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட முழாடை மடிப்புகளுடன் கால்களுக்கு குறுக்கே அணியப்பட்டுள்ளது. இடை வார்ப்பட்டை முகப்புடன் இடையில் அணி செய்கிறது. இடைக்கட்டு எனப்படும் கடி பந்தம் முன்புறம் தொடையிலும், முழங்காலிலும் வளைந்து தொங்குகின்றது. இடைக்கட்டின் முடிச்சு வலது புறம் கட்டப்பட்டுள்ளது. தேவியின் வதனம் குறுநகையுடன் அமைந்துள்ளது. |
653 | : | _ _ |a விஷ்ணு துர்க்கை, துர்க்கை, வடவாயிற் செல்வி, பேரங்கியூர் திருமூலநாதர் கோயில், பேரங்கியூர், திருமூலநாதர் கோயில், விழுப்புரம், முதலாம் பராந்தகச் சோழன், முற்காலச் சோழர் கலைப்பாணி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a திருமூலநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பேரங்கியூர் |d விழுப்புரம் |f திருவெண்ணெய்நல்லூர் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
914 | : | _ _ |a 11.86065213 |
915 | : | _ _ |a 79.36661839 |
995 | : | _ _ |a TVA_SCL_000493 |
barcode | : | TVA_SCL_000493 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |