000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a மகிஷாசுரமர்த்தினி |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a வெற்றியின் தேவியான கொற்றவை சிம்ம வாகனமேறி, தன் படைகளுடன் எருமைத் தலையரக்கனோடு போரிடும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, துர்க்கை (சக்தி) சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்ய புறப்படும் போர்க் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுர மர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், தேவியின் படையில் பல கணங்களும், வீர மங்கையரும் காணப்படுகின்றனர். தேவி சிங்கத்தின் மீது அமர்ந்துள்ளாள்.சிங்கம் பாய்ந்து அசுரர்களைத் தாக்குகிறது. தேவி ஐயிரு கரங்களிலும் கருவிகளைக் கொண்டுள்ளாள். முன் கைகளால் வில்லைப் பிடித்து அம்பெய்துகிறாள். தேவியின் தலைக்கு மேல் கொற்றக்குடை அமைந்துள்ளது. சக்தியின் படைகளான கணங்கள் கைகளில் வாளும் கேடயமும் கொண்டுள்ளனர். ஒரு கணம் தன் தலைவியைப் போல் அம்பெய்துகிறது. சக்திப்படையில் உள்ள வீரமிக்க பெண்ணொருவள் தன் நீண்ட வாளால் அரக்கன் ஒருவனை வீழ்த்தியுள்ளாள். அவன் மகிடனின் காலுக்கு கீழே கிடக்கிறான். தேவியின் வாகனமோ பாய்ந்து ஒரு அரக்கனைத் தாக்க அவன் தலைகீழாகப் பாய்கிறான். மகிடன் கையில் கதாயுதத்தைப் பிடித்துள்ளான். அவன் நிலை பயந்து ஓடுவதைப் போன்றே இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. அசுரப் படைகளும் கைகளில் வாள் கேடயத்தைக் கொண்டுள்ளனர். ஆனாலும் வீரமங்கையின் முன்னால் செயலிழந்து விட்டனர் போலும். ஒருவன் வீழ்ந்து விட்டான். ஒருவன் இறந்து பட்டான். இருவர் ஓட எத்தனிக்கிற நிலை. ஒருவன் செய்வதறியாது திகைக்கிறான். மகிடன் எருமைத் தலையுடன் ஓங்கி உயர்ந்த உருவமாய் காட்டப்பட்டுள்ளான். அவன் தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது இங்கு நோக்கத்தக்கது. ஏனெனில் அவனும் தேவாதி இந்திரர்களை வென்றடக்கியவன். ஆனாலும் தேவியின் ஆற்றலானது எருமைத் தலையரக்கனை விட பத்து மடங்கு அதிகம் என்பதைக் காட்டுவதற்காகவே மகிடனைவிட அவளுக்கு அதிக கைகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன என்பதை உற்று நோக்க வேண்டும். |
653 | : | _ _ |a கொற்றவை, விஷ்ணு துர்க்கை, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, மகிஷன், எருமையரக்கன், மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், பெண் தெய்வ சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000432 |
barcode | : | TVA_SCL_000432 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |