000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கணபதி |
300 | : | _ _ |a கணாதிபத்யம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கணங்களின் தலைவனும், சிவ செல்வனும், உமை மைந்தனுமாகிய கணபதி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தாமரைப் பீடத்தின் மீது கணபதி லளிதாசனத்தில் அமர்ந்துள்ளார். அன்னாரின் அமர்வுக்கு மேலே கற்பக்தருவும், குடையும், இருபுறங்களிலும் சாமரமும் காட்டப்பட்டுள்ளன. கணபதியின் பின்புறம் நீள் வட்ட வடிவில் அமைந்த எரிசுடர் அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இவ்வமைப்பு இக்கோயிலில் மட்டுமே பெரும்பாலும் காணப்படுகிறது. பத்ர பூரிம முகப்புடன் கரண்ட மகுடராய் விளங்கும் கணபதி நெற்றியில் முத்துத் தாமங்களுடன் கூடிய நெற்றிப்பட்டையும் அணிந்துள்ளார். முறச்செவியர் தன் பானை வயிற்றில் உதர பந்தமும், அகல் மார்பில் முப்புரி நூலும், கையணிகள், கழுத்தணிகள் பிறவும் அணிந்து, முன் வலது கையில் ஒடிந்த கொம்பினையும், இடது கையில் மோதகத்தினையும் கொண்டுள்ளார். துதிக்கையில் மோதம் உள்ளது. கணபதியின் பின்னிரு கைகளில் இடது சிதைந்து விட்டது. வலது பின் கையில் உள்ளது யாதென்று அறியக்கூடவில்லை. கணபதியின் இருபுறமும் உள்ள கோட்டப் பகுப்புகளில் பக்கத்திற்கு மூவராக ஆறு கணங்கள் காட்டப்பட்டுள்ளனர். மேலே நிற்கும் கணத்தில் ஒன்று காவலாகவும், ஒன்று இசை முழக்கிக் கொண்டும் நிற்கிறது. மற்ற நான்கு கணங்களும் தங்கள் தலைவருக்குத் தேவையான படையல்களை தலையில் சுமந்துள்ளன. இக்கணங்களின் தோற்றங்களை மிகவும் இரசிக்கத்தக்கவையாக, அவற்றின் செயல்களை மனம் இலயித்து காணக்கூடியவையாக சோழச் சிற்பிகள் வடித்திருப்பது சிற்பக் கலையின் நுணுக்கமாகும். |
653 | : | _ _ |a கணபதி, விநாயகர், பிள்ளையார், கணேசன், தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.7831901 |
915 | : | _ _ |a 79.13123578 |
995 | : | _ _ |a TVA_SCL_000367 |
barcode | : | TVA_SCL_000367 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |