000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a இடபாந்திக மூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a அறவெள்விடைக்கு அருளிய வடிவம் இடபாந்திக மூர்த்தி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a உலகம் அழியும் போது தானும் அழிய நேரும் என்ற பயம் தர்மதேவதைக்கு வந்தது. ஊழிக்காலத்தில் சிவபெருமான் உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார். அவ்வேளையில் மீண்டும் உயிர்கள் உய்வு பெறும். எனவே தர்மதேவதை சிவபெருமானை நோக்கி தவமிருந்து, அவரிடம் சரணடைந்தார். இறவாமல் இருக்க தர்மதேவதை சிவபெருமானின் காளை வாகனமாக இருக்க வரம் வேண்டி நின்றார். தர்மதேவதையின் வேண்டுகோளை ஏற்ற சிவனார் அதனை தன் வாகனமாக ஏற்றுக்கொண்டார். சிவபெருமானின் இத்திருக்கோலம் இடபாந்திக மூர்த்தி எனப்பெறும். இச்சிற்பத்தில் விடைக்கு வலது கரத்தால் அருளியவராய் சிவனார் நிற்கிறார். வைஷ்ணவ நிலையில் இடது காலை ஊன்றி, வலது காலை தளர்வாக மடக்கியவாறு நின்றுள்ளார். தன் இடது கரத்தை ஊரு முத்திரையாக இடது தொடையில் வைத்துள்ளார். மேலிரு கைகளில் மழு, மான் பற்றியுள்ளார். மார்பில் முப்புரிநூலும், வயிற்றில் உதரபந்தம், இடது காதில் பத்ரகுண்டலம், வலது காதில் மகர குண்டலம், கழுத்தணிகள், கைகளில் கேயூரம், முன் வளைகள் ஆகியன அணிகளாக அமைந்துள்ளன. அரையில் இடைப்பட்டிகையுடன் கூடிய குறங்கு செறி தொடையில் தொங்குகிறது. ஜடாமகுடரின் காலருகே இடபம் ஒரு காலை குத்திட்டு, ஒரு காலை மடக்கி, கைகளை முன்னூன்றியும், பின்னூன்றியும் சரணடைந்து அமர்ந்துள்ளது. கழுத்தில் சவடியும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தலைவரைப் போலவே அணிகளும் அணிந்துள்ளது. இடபத்தின் கொம்புகளைப் பிடித்து கணம் ஒன்று விளையாடுகிறது. மேலே சமபாத்தில் நின்ற நிலையில் உள்ள உருவம் தருமதேவதையாக இருக்கலாம். |
653 | : | _ _ |a அறவெள்விடைக்கு அருளிய வடிவம், இடபாந்திக மூர்த்தி, திருவாலீஸ்வரம், கைலாயமுடையார் கோயில், கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முதலாம் இராஜராஜன் கோயில், சோழர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், சோழ பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய நாட்டில் சோழர் கோயில், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவாலீஸ்வரம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
914 | : | _ _ |a 8.73252599 |
915 | : | _ _ |a 77.44489074 |
995 | : | _ _ |a TVA_SCL_000252 |
barcode | : | TVA_SCL_000252 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |