000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சோழர் குல ஆடவன் |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கருவறை விமானத்தின் மேற்குப் புற பஞ்சரக் கோட்டத்தில் நிற்கும் சோழர் காலத்திய ஆடவன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கருவறையின் மேற்குப்புற பஞ்சரக் கோட்டத்தில் சோழர் குல ஆடவர் ஒருவர் வைஷ்ணவ நிலையில் இடது காலை நன்றாக ஊன்றி, வலது காலை சிறிதே மடக்கி உடலை வளைவோடு அமைத்து நிற்கிறார். கூந்தலை அள்ளிக் கொண்டை போட்டு, பக்கவாட்டு தலைக்கொண்டை சுருள் சுருளாக அமைந்துள்ள அளக சூடம் என்னும் மகுடத்தைக் கொண்டுள்ளார். (அல்லது மணிகளால் ஆன தலைப்பாகையாக இருக்கலாம்). நீள் காதுகளில் உருத்திராட்ச குண்டலம் போல் காணப்படுகிறது. கழுத்தில் சரப்பளி அணிந்துள்ளார். வலது கையில் தாமரை மலரை பிடித்தபடியும், இடது கையை இடது தொடையில் வைத்தவாறும் (ஊரு முத்திரையாகவும்) உள்ளார். முழங்கையில் உருத்திராட்ச கடக வளை காட்டப்பட்டுள்ளது. கை விரல்களில் வளையங்கள் காணப்படுகின்றன. அரையாடையாக மரவுரியாடை இடையில் அணிந்துள்ளார். அரைப்பட்டிகையின் நடுவிலிருந்து முடிச்சு தொங்குகிறது. நடுத்தர வயதுள்ள ஆண்மகனாய் இவர் தோற்றமளிக்கிறார். |
653 | : | _ _ |a சோழர் குல ஆடவன், சோழ நாட்டு வீரன், சோழர் கால ஆண்மகன், கும்பகோணம், குடந்தைக் கீழ்க் கோட்டம், தஞ்சாவூர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம், குடந்தைக் கீழ்க்கோட்டம் கோட்டச் சிற்பங்கள் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.95847464 |
915 | : | _ _ |a 79.37757388 |
995 | : | _ _ |a TVA_SCL_000165 |
barcode | : | TVA_SCL_000165 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |