MARC காட்சி

Back
திருவள்ளுவர், நந்தனார்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a திருவள்ளுவர், நந்தனார்
300 : _ _ |a புடைப்புச் சிற்பம்
520 : _ _ |a தியாகராஜர் கல்லூரியிலிருந்து திருப்பரங்குன்றம் கோயில் செல்லும் சாலையின் வளைவில் சுமார் நான்கடி உயரமும் நான்கடி அகலமும் கொண்ட பலகைக்கல் ஒன்றில் திருவள்ளுவர் மற்றும் நந்தனார் சிற்பங்கள் புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களின் கீழே திருவள்ளுவர், நந்தநார் என்று கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளைக் கொண்டு இப்பலகைக்கல்லில் உள்ள முனிவர்களைப் போன்று நீண்ட தாடி, மீசையுடன் காணப்படும் இரு ஆண் உருவங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன. இச்சிற்ப பலகை வேறு எங்கேனும் இருந்து அதாவது அருகில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புனரமைப்பின் போது இங்கு கொண்டு வரப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றதா என்பது ஆராயப்படல் வேண்டும். எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடி கையிலிருப்பதால் திருவள்ளுவரின் உருவமைதியை அக்கல்வெட்டுப் பெயர் மெய்ப்படுத்துகிறது. ஆனால் திருவள்ளுவரின் அருகில் அதுவும் ஒரே பலகைக் கல்லில் நந்தனாரின் சிற்பம் செதுக்கப்படுவதற்கான காரணம் யாதென்பது மேலும் ஆய்வுக்குரியது. அச்சிற்பம் நந்தனார் தான் என்பது கீழே உள்ள கல்வெட்டினால் உறுதிப்பட்டாலும் அக்கல்வெட்டுகளின் எழுத்தமைதியை நோக்குகையில் சிற்பத்தின் உருவமைதி காட்டும் காலத்தை விட சற்று பிற்காலத்தியதாக தோன்றுகிறது. இந்நிலையும் ஆய்வுக்குரியது.
653 : _ _ |a மதுரை, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், திருவள்ளுவர், நந்தனார், திருநாளைப்போவார், திருவள்ளுவர் சிற்பம், நந்தனார் சிற்பம், புடைப்புச் சிற்பங்கள், கல் சிற்பம், கற்சிற்பம், தமிழ்நாடு
700 : _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a மதுரை திருப்பரங்குன்றம் |c திருப்பரங்குன்றம் |d மதுரை |f மதுரை
905 : _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 9.8823402465921
915 : _ _ |a 78.078159810188
995 : _ _ |a TVA_SCL_001577
barcode : TVA_SCL_001577
book category : கற்சிற்பங்கள்
cover images TVA_SCL_001577/TVA_SCL_001577_திருப்பரங்குன்றம்_திருவள்ளுவர்-001.jpg :
Primary File :

TVA_SCL_001577/TVA_SCL_001577_திருப்பரங்குன்றம்_திருவள்ளுவர்-001.jpg

TVA_SCL_001577/TVA_SCL_001577_திருப்பரங்குன்றம்_திருவள்ளுவர்-002.jpg

TVA_SCL_001577/TVA_SCL_001577_திருப்பரங்குன்றம்_திருவள்ளுவர்-003.jpg

TVA_SCL_001577/TVA_SCL_001577_திருப்பரங்குன்றம்_நந்தனார்-001.jpg