110 |
: |
_ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
245 |
: |
_ _ |a கொற்கை - |
346 |
: |
_ _ |a 1968-69 |
347 |
: |
_ _ |a ஒன்பது அடுக்கு செங்கற் கட்டடப் பகுதி, மூன்று சுடுமண் வளையங்கள், தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள், அடுப்பு கரி துண்டுகள் |
500 |
: |
_ _ |a தாமிரபரணி ஆற்றின் வடக்கே சுமார் 3கி.மீ. தொலைவில் இவ்வூர் அமையப் பெற்றுள்ளது. பண்டைய காலத்தில் தாமிரபரணி ஆறு இப்பகுதி வழியாக சென்றுள்ளது என்பது ஆதாரங்கள் மூலம் அறியப்படுகிறது. சங்க காலத்தில் பாண்டியர்களின் மிகச் சிறந்த கடற்கரைத் துறைமுகப் பட்டினமாக கொற்கை விளங்கியது. கொற்கைப் பாண்டியர்கள் என்போர் ஐந்து பாண்டியருள் ஒருவராவர். கபாடபுரத்தையடுத்து கொற்கையே பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. சங்க காலத்தில் கொற்கை ஒரு முக்கிய முத்துக் குளிக்கும் துறைமுகப் பட்டினமாக திகழ்ந்துள்ளதை சங்க இலக்கியங்களும், வெளிநாட்டவர் பயணக்குறிப்புகளும் குறிப்பிடுகின்றன. கிரேக்க, ரோமானிய வணிகர்கள் இப்பகுதிக்கு வந்து முத்துக்களை வாங்கிச் சென்றதை அந்நாட்டவரின் பயணக்குறிப்புகளிலிருந்து அறியமுடிகிறது. கொற்கையில் நடைபெற்ற அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் ஒன்பது அடுக்குடன் கூடிய செங்கற் கட்டடப் பகுதி, ஆறு வரிசையில் இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச்செங்கற் கட்டடப் பகுதிக்கு கீழே மூன்று பெரிய சுடுமண் வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. கி.பி.200-300 நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும், அடுப்பு கரித் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. முன்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இவ்வடுப்பு கரித்துண்டுகள் காலத்தை அறியும் பொருட்டு அனுப்பப்பட்டன. இவற்றின் காலம் கி.மு.785 என்று கணக்கிடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. |
510 |
: |
_ _ |a
- B.Sasisekaran , S.Rajavel , ‘Adichanallur: A Prehistoric Mining Site’, Indian Journal of History of Science, 2010.
- T.S.Subramanian, ‘Unearthing a great past’ Frontline, Vol.22, 2005.
- Michel Danino, ‘Vedic Roots of Early Tamil Culture’, Saundaryashrih, Archaeological Studies in the New Millennium, 2008.
- Kenneth A.R.Kennedy, ‘The physical anthropology of the megalith-builders of South India and Sri Lanka’, Australian National University Press, Canberra, 1975.
- தி.ஸ்ரீ.ஸ்ரீதர், இ.ஆ.ப., ‘தமிழக அகழாய்வுகள்’, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2008.
|
520 |
: |
_ _ |a கொற்கை மதுரைக்கு முன்பாக பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கிய ஊராகும். சங்க காலத்திய ஊரான கொற்கை ஒரு கடற்கரைத் துறைமுகப் பட்டினமாகும். இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்ற தொழிலாகும். பாண்டியர்களின் முத்துக்கள் கிரேக்கத்தில் பெரும் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியதாகவும், அதிக பொருட்செலவு செய்து முத்துக்களை வாங்கி பெண்கள் அணிவதாகவும் அந்நாட்டறிஞர்களின் தொன்மைக் குறிப்புகள் கூறுகின்றன. இத்தகைய பழம் பெருமை வாய்ந்த ஊரான கொற்கையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வினை மேற்கொண்டு, அங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களைக் கொண்டு அதன் தொல் வரலாற்றினை உறுதிப்படுத்தியுள்ளது. |
653 |
: |
_ _ |a கொற்கை, பாண்டியர், தூத்துக்குடி, துறைமுகப் பட்டினம், பாண்டியர் தலைநகர், அகழாய்வு, தொல்லியல், தமிழக அகழாய்வுகள், நகரம், வணிகம், சங்க கால ஊர், தாமிரபரணி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
700 |
: |
_ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 |
: |
_ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 |
: |
_ _ |a கொற்கை |c கொற்கை |d தூத்துக்குடி |f ஸ்ரீவைகுண்டம் |
906 |
: |
_ _ |a கி.மு.2 முதல் கி.பி.3-ஆம் நூற்றாண்டு |
914 |
: |
_ _ |a 8.6345989 |
915 |
: |
_ _ |a 78.0623403 |
995 |
: |
_ _ |a TVA_EXC_00003 |
barcode |
: |
TVA_EXC_00003 |
book category |
: |
வரலாற்றுக்காலம் |
cover images TVA_EXC_00003_கொற்கை_கெண்டி-மூக்கு-0001.jpg |
: |
|
Primary File |
: |
TVA_EXC_00003_கொற்கை_கெண்டி-மூக்கு-0001.jpg
TVA_EXC_00003_கொற்கை_தக்கிலிகள்-0002.jpg
TVA_EXC_00003_கொற்கை_பொருட்கள்-0003.jpg
TVA_EXC_00003_கொற்கை_சங்கு-வளையல்-துண்டுகள்-0004.jpg
TVA_EXC_00003_கொற்கை_சேமிப்பு-மட்கலன்கள்-0005.jpg
TVA_EXC_00003_கொற்கை_குழியின்-உட்புறத்-தோற்றம்-0006.jpg
TVA_EXC_00003_கொற்கை_பிராமி-எழுத்து-பானையோடு-0007.jpg
TVA_EXC_00003_கொற்கை_மட்கலன்கள்-வாய்பகுதி-0008.jpg
TVA_EXC_00003_கொற்கை_கறுப்புநிற-மட்கலன்-0009.jpg
TVA_EXC_00003_கொற்கை_பானை-ஓடுகள்-0010.jpg
TVA_EXC_00003_கொற்கை_சேமிப்புத்-தாழிகள்-0011.jpg
TVA_EXC_00003_கொற்கை_பிராமி-எழுத்து-பானையோடு-0012.jpg
TVA_EXC_00003_கொற்கை_பிராமி-எழுத்து-பானையோடு-0013.jpg
TVA_EXC_00003_கொற்கை_பானையோட்டு-குறியீடு-0014.jpg
TVA_EXC_00003_கொற்கை_பெரிய-மட்கலன்கள்-0015.jpg
TVA_EXC_00003_கொற்கை_மூன்று-ஆகழாய்வுக்குழிகள்-0016.jpg
TVA_EXC_00003_கொற்கை_செங்கல்-சுவர்-0017.jpg
|