MARC காட்சி

Back
உக்கிரன்கோட்டை
110 : _ _ |a இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
245 : _ _ |a உக்கிரன்கோட்டை -
346 : _ _ |a 2014-2015
347 : _ _ |a கோட்டைப்பகுதி, கோட்டைக் கோயிலின் அடித்தளம், இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், மணிகள்
500 : _ _ |a திருநெல்வேலி மாவட்டம் கரவந்தபுரம் என்னும் சிற்றூரில் உக்கிரன்கோட்டை அமைந்துள்ளது. கி.பி. 8,9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியக் கல்வெட்டுகளில் இக்கோட்டையைப் பற்றி குறிப்புகள் உள்ளன. இங்கு பெருங்கற்காலத்தைச் சார்ந்த மட்கலன்களும் கிடைத்துள்ளன. கோட்டை என்னும் பெயரிலே அமைந்துள்ள இவ்வூர் கோட்டையின் காலத்தை மற்றும் கோட்டையை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் (Building materials) ஆகியவற்றை அறிந்திடும் பொருட்டு இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் தெற்கு வட்டம் K.V. சௌந்திரராஜன் தலைமையில் அகழாய்வினை இங்கு மேற்கொண்டது. கோட்டைக் கொத்தளத்தின் குறுக்கே அகழாய்வுக்குழி ஒன்று தோண்டப்பட்டது. அகழாய்வில் 4 மீ. அகலமுடைய சுவர்பகுதி அகழியால் சூழப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இச்சுவர்மண்ணாலும், சுடாத செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. அகழி பாறையை வெட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு நோக்கத்தக்கது. கொத்தளத்தின் உட்பகுதி கெட்டியான மண்ணைக் கொண்டு சரிவான நிலையில் அமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இக்கோட்டையின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டது. 2014-2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் உக்கிரன் கோட்டையில் அகழாய்வு நடத்தப்பட்டது. இவ்வகழாய்வில் கோட்டைக்குள் அமைக்கப்பட்டிருந்த முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கோயில் ஒன்றின் தளப்பகுதி வெளிக் கொணரப்பட்டது. மேலும் இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், கல்மணிகள், சுடுமண் உருவங்கள் ஆகிய தொல்பொருட்களும் கிடைக்கப்பெற்றன.
510 : _ _ |a தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள் [Archaelogical Excavations in Tamilnadu], சு. இராசவேலு, கோ. திருமூர்த்தி, பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
520 : _ _ |a திருநெல்வேலி மாவட்டம் கரவந்தபுரம் என்னும் சிற்றூரில் உக்கிரன்கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டைப்பகுதிகளில் அகழாய்வுகள் மத்தியத் தொல்லியல் துறையாலும், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையாலும் நடத்தப்பட்டன. முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகக் இக்கோட்டைக் கருதப்படுகிறது. களக்குடி மரபைச் சேர்ந்த மாறன்காரி, மாறன் எயினன் என்னும் பாண்டியன் நெடுஞ்சடையனின் அதிகாரிகளாக விளங்கிய இருவரின் இருப்பிடமாக உக்கிரன்கோட்டை கருதப்பட்டமையால் வரலாற்று முக்கியத்துவம் கருதி இவ்விடத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வில் கோயில் ஒன்றின் அடித்தளம் வெளிக்கொணரப்பட்டது.
653 : _ _ |a அகழாய்வுகள், தமிழக அகழாய்வுகள், தமிழ்நாடு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, உக்கிரன்கோட்டை, கரவந்தபுரம், முற்காலப் பாண்டியர், உக்கரன் கோட்டை, வரலாற்றுக் காலம், பாண்டியர், திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றங்கரைத் தொல்லியல், தமிழ்நாட்டுத் தொல்லியல், தொல்லியல், வாழ்விடப்பகுதி, பெருங்கற்காலம், சங்க காலம், தொல்லியல் இடங்கள்
700 : _ _ |a இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
710 : _ _ |a இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
752 : _ _ |a உக்கிரன்கோட்டை |c கரவந்தபுரம் |d திருநெல்வேலி |f திருநெல்வேலலி
906 : _ _ |a பெருங்கற்காலம் முதல் மத்திய வரலாற்றுக்காலம்
914 : _ _ |a 77.598988
915 : _ _ |a 8.911121
995 : _ _ |a TVA_EXC_00045
barcode : TVA_EXC_00045
book category : வரலாற்றுக்காலம்
cover images TVA_EXC_00045/TVA_EXC_00045_திருநெல்வேலி_உக்கிரன்கோட்டை_அகழாய்வு-0001.jpg :
Primary File :

TVA_EXC_00045/TVA_EXC_00045_திருநெல்வேலி_உக்கிரன்கோட்டை_அகழாய்வு-0001.jpg

TVA_EXC_00045/TVA_EXC_00045_திருநெல்வேலி_உக்கிரன்கோட்டை_அகழாய்வு-0002.jpg

TVA_EXC_00045/TVA_EXC_00045_திருநெல்வேலி_உக்கிரன்கோட்டை_அகழாய்வு-0003.jpg

TVA_EXC_00045/TVA_EXC_00045_திருநெல்வேலி_உக்கிரன்கோட்டை_அகழாய்வு-0004.jpg

TVA_EXC_00045/TVA_EXC_00045_திருநெல்வேலி_உக்கிரன்கோட்டை_அகழாய்வு-0005.jpg

TVA_EXC_00045/TVA_EXC_00045_திருநெல்வேலி_உக்கிரன்கோட்டை_அகழாய்வு-0006.jpg