110 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
245 | : | _ _ |a தேரிருவேலி - |
346 | : | _ _ |a 1999-2000 |
347 | : | _ _ |a பளபளப்பான கருப்பு-சிவப்பு நிற ஓடுகள், சொரசொரப்பான கருப்பு-சிவப்பு நிற ஓடுகள், பளபளப்பான சிவப்பு நிற ஓடுகள், சொரசொரப்பான சிவப்பு நிற ஓடுகள், செம்பழுப்பு பூச்சுடைய ஓடுகள், வழுவழுப்பான கருப்பு நிற ஓடுகள், ரோமானிய அரிட்டைன் பானையோடுகள், ரௌலட்டடட் பானையோடுகள், ஆம்போரா பானையோடுகள், தமிழ் எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள், கத்தி, ஆணி போன்ற இரும்புப் பொருட்கள், மான் கொம்புகள், சங்கு வளையல்கள், மணிகள், சுடுமண்ணாலான கெண்டி, மூடி, தக்களி, கைப்பிடி, தாங்கி, துளையுள்ள ஓடுகள், சுடுமண் கால் பகுதி, சில்லுகள், எலும்புகள், பறவை, நுண்கற்காலக் கருவிகள் |
500 | : | _ _ |a தேரிருவேலி அகழாய்வில் அகழ்வு செய்யப்பட்ட ஏழு அகழாய்வுக் குழிகளின் மூலம் இரண்டு காலகட்ட பண்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டன. இவ்வகழாய்வில் நுண்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அகழாய்வில் மான்கொம்புகள் மற்றும் எலும்புத் துண்டுகள் கிடைப்பதைக் கொண்டு, பல விலங்குகளின் மாமிசத்தை உணவாக உண்டு இருக்கலாம் என்றும், பல பானைக் குறியீடுகளில் மீனின் தலையும், உடற்பகுதியும் மற்றும் ஆமை உருவங்கள் இருப்பதைக் கொண்டு இவைகளையும் இப்பகுதி மக்கள் உணவாக பயன்படுத்தியுள்ளனர் என அறிய முடிகிறது. இங்கு கிடைத்துள்ள பானைக் குறியீடுகளில் சூரியன், கடி மரம், திரிசூலம் மற்றும் ஸ்வஸ்திகம் கிடைப்பதைக் கொண்டு இப்பகுதி மக்களின் வழிபாட்டை அறிய முடிகிறது. ஒரு பானைக் குறியீட்டில் ஒரு சிறிய படகு துடுப்புடன் காணப்படுகிறது. கடற்வணிகம் சிறந்திருந்ததை இது குறிப்பிடலாம். இங்கு கிடைத்துள்ள சூதுபவள மணிகள், வழுவழுப்பான வடஇந்திய கருப்பு பானை ஓடுகளும் வடஇந்திய நகரங்களுடனான தொடர்பைக் காட்டுகின்றன. இவ்வகழாய்வில் பண்டையத் தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் “ல்லன்“, “கொற்றன்“, “நெடுங்கிளி“, “சாதன்”, “தரையி”, “குற”, ”ம ன அ” ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன. ரௌலட்டட், ஆம்போரா ஆகிய ரோமானியப் பானை ஓடுகள் கிடைப்பதைக் கொண்டு வணிகத் தொடர்புகளை அறியலாம். |
510 | : | _ _ |a தேரிருவேலி அகழாய்வு, முனைவர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர்,இ.ஆ.ப. ப(பதிப்.ஆ), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
520 | : | _ _ |a இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேரிருவேலி சிற்றூரில் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு ஆய்வின் போது கிடைத்த நுண்கற்காலக் கருவிகளின் சில்லுகள், கற்கள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், மணிகள் போன்றவை தேரிருவேலியில் அகழாய்வினை மேற்கொள்ள அடிப்படையாக அமைந்தன. தேரிருவேலி அகழாய்வு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் அ.அப்துல் மஜீத் அவர்களின் தலைமையில், தொல்லியல் ஆய்வாளர்கள், திருமதி.நா.மார்க்சீயகாந்தி, திரு.ஆர் செல்வராஜ், திரு.சொ.சாந்தலிங்கம், திரு.சொ.சந்திரவாணன் ஆகியோரின் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டது. |
653 | : | _ _ |a தேரிருவேலி, இராமநாதபுரம், முதுகுளத்தூர், அகழாய்வு, அகழ்வாராய்ச்சி, சுடுமண் பொருட்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு, தமிழகம், தொல்பொருட்கள், தொல் பொருள் ஆய்வு, பானைக் குறியீடு, தமிழ்-பிராமி, தமிழ் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
752 | : | _ _ |a தேரிருவேலி |c தேரிருவேலி |d இராமநாதபுரம் |f முதுகுளத்தூர் |
914 | : | _ _ |a 9.3228703 |
915 | : | _ _ |a 78.6285252 |
995 | : | _ _ |a TVA_EXC_00032 |
barcode | : | TVA_EXC_00032 |
book category | : | வரலாற்றுக்காலம் |
cover images TVA_EXC_00032_தேரிருவேலி_எழுத்துப்பொறிப்பு-0004.jpg | : |
![]() |
Primary File | : |