MARC காட்சி

Back
பரிகுளம்
110 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
245 : _ _ |a பரிகுளம் -
346 : _ _ |a 2005-06
347 : _ _ |a கைக்கோடரிகள், வெட்டுக்கத்திகள், சுரண்டிகள், கிழிப்பான்கள், கூர்முனைக் கருவிகள், வட்டுகள்
500 : _ _ |a

          திருவள்ளூர் மாவட்டம், பூண்டிக்கு தென்மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்குளம். இங்கு, தென்பகுதியில் காணப்படும் செம்மண் சரளைக்கல் மேடு (Laterite Gravel Deposit), சுமார் 5,00,000 ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் காலத்தில் தோன்றியதாகும். இங்கு நான்குவிதமான படிவ அடுக்குகள் அமைந்துள்ளன. அவை – சிதைந்த சரளைக்கல் அடுக்குகள் (Detrital Laterite Deposit), சிறு கூழாங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Pebble), பெருங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Boulders), கெட்டியான களிமண் பகுதி (Sriperumbudur or Avadi Shale) இந்த நான்கு படிவங்களும், மண்ணடுக்கில் தெளிவாகக் காணப்பட்டன.

          பரிகுளம் அகழாய்வில், இரண்டுவிதமான பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. அவை - அபிவில்லியன் - அச்சூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவை. அச்சூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவை. பரிகுளம் பகுதியில் நடந்த அகழாய்வில், கற்கருவிகளை தயார் செய்கிற தொழில்கூடம் இருந்தது, கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவை, இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்துள்ளது.

          பரிகுளம் அகழாய்வில் குதிரையின் பற்கள் கிடைத்துள்ளன. இது குறிப்பிடத்தக்கது. குதிரை இங்கிருந்த விலங்கினங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டியுள்ளது. பரிகுளம் அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 2005-2006 ஆம்  ஆண்டில் நடத்தப்பட்டது. இங்கு நிலவிய பழைய கற்காலத்தை 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்கிறார் தொல்லியல் அறிஞர் சாந்திபப்பு அவர்கள்.

510 : _ _ |a
  1. B.Sasisekaran , S.Rajavel , ‘Adichanallur: A Prehistoric Mining Site’, Indian Journal of History of Science, 2010. 
  2. T.S.Subramanian, ‘Unearthing a great past’ Frontline, Vol.22, 2005. 
  3. Michel Danino, ‘Vedic Roots of Early Tamil Culture’, Saundaryashrih, Archaeological Studies in the New Millennium, 2008. 
  4. Kenneth A.R.Kennedy, ‘The physical anthropology of the megalith-builders of South India and Sri Lanka’, Australian National University Press, Canberra, 1975. 
  5. தி.ஸ்ரீ.ஸ்ரீதர், இ.ஆ.ப., ‘தமிழக அகழாய்வுகள்’, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2008. 
520 : _ _ |a

          பரிகுளம் பகுதியில் நடந்த அகழாய்வில், கற்கருவிகளை தயார் செய்கிற தொழில்கூடம் இருந்தது, கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவை, இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்துள்ளது.

          பரிகுளம் அகழாய்வில் குதிரையின் பற்கள் கிடைத்துள்ளன. இது குறிப்பிடத்தக்கது. குதிரை இங்கிருந்த விலங்கினங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டியுள்ளது.

          திருவள்ளூர் மாவட்டம், பூண்டிக்கு தென்மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்குளம். இங்கு, தென்பகுதியில் காணப்படும் செம்மண் சரளைக்கல் மேடு (Laterite Gravel Deposit), சுமார் 5,00,000 ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் காலத்தில் தோன்றியதாகும். இங்கு நான்குவிதமான படிவ அடுக்குகள் அமைந்துள்ளன. அவை – சிதைந்த சரளைக்கல் அடுக்குகள் (Detrital Laterite Deposit), சிறு கூழாங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Pebble), பெருங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Boulders), கெட்டியான களிமண் பகுதி (Sriperumbudur or Avadi Shale) இந்த நான்கு படிவங்களும், மண்ணடுக்கில் தெளிவாகக் காணப்பட்டன.

          பரிகுளம் அகழாய்வில், இரண்டுவிதமான பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. அவை - அபிவில்லியன் - அச்சூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவை. அச்சூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவை. அபிவில்லியன் கைக் கோடாரி ஆகியவையாகும். ஃபிரான்ஸ் நாட்டின் சோம பள்ளத்தாக்குப் (Somme in France) பகுதியில் உள்ள அபிவில்லி (Abbeville) (அ) அபிவில்லியன் (Abbevillean) என்ற இடத்தில் கிடைத்த கைக் கோடாரிகள், அவ்விடத்தின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. தொழில்நுட்ப அடிப்படையில் காணும்பொழுது, இவற்றில், அதிக அளவில் சில்லுகள் பெயர்க்கப்படாமல் ஆழமாகப் பெயர்க்கப்பட்டும், அதிக வேலைப்பாடும் இல்லாமல் இருக்கும். அச்சூலியன் கைக் கோடாரியும் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவற்றில், அதிக அளவில் சில்லுகள் பெயர்த்தும், வேலைப்பாடுகள் நிறைந்தும் காணப்படும். முழுமை பெற்ற அழகிய இலை வடிவ அமைப்பைக் கொண்டதாக இருக்கின்றன. ஃபிரான்ஸ் நாட்டில் சோம் பள்ளத்தாக்கில் உள்ள அச்சூல் (Acheul) பகுதியில்தான், இக்கோடாரிகளை பொ.மு. 1836-ல் பௌச்சர் (Boucher) கண்டறிந்தார்.  பரிக்குளம் அகழாய்வில் 243 கற்கருவிகள் சேகரிக்கப்பட்டன. அவை தரம்வாரியாகப் பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றின் மேல் பகுதியில், அதிக காலம் மண்படிவத்தில் தேங்கி இருந்ததால் ஏற்படும் மென்பாசிப் படலம் காணமுடிகிறது. இங்கு அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கற்கருவிகள், வரலாற்றுச் சிறப்புமிக்கவை. இவற்றை விரிவாக ஆய்வு செய்து, தொழில்நுட்ப விவரங்களோடு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கைக் கோடாரிகள் (Hand Axe), இதய வடிவிலான கைக் கோடாரிகள் (Cordate Hand Axe), முக்கோண வடிவ கைக் கோடாரிகள் (Triangular Hand Axe), வெட்டுக்கத்திகள் (Cleavers), சுரண்டிகள் (Scrappers), சிறிய வெட்டுக் கருவிகள் (Small Choppers), கூர்முனைக் கருவிகள் (அ) துளையிடும் கருவி (Points), வட்டுகள் (Ovate), கல் சுத்தி (Stone Hammer) இதுபோன்ற பல்வேறுவிதமான கற்கருவிகள் வகைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கற்கருவிகளில் அதிக அளவில் சில்லுகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி பழைய கற்காலத்தில் கற்கருவிகள் செய்யும் தொழிற்கூடமாக (Factory Site) விளங்கியிருக்க வேண்டும்.

653 : _ _ |a பரிகுளம், பரிக்குளம், இராபர்ட் புரூஸ் பூட், தொல்பழங்காலம், பழைய கற்காலம், கைக்கோடரிகள், தமிழ்நாடு, தொல்மாந்தர் வாழ்விடம், திருவள்ளூர், பூண்டி
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
752 : _ _ |a பரிகுளம் |c பரிகுளம் |d திருவள்ளூர் |f திருவள்ளூர்
914 : _ _ |a 13.2080814
915 : _ _ |a 79.881483
995 : _ _ |a TVA_EXC_00013
barcode : TVA_EXC_00013
book category : தொல்பழங்காலம்
cover images TVA_EXC_00013_பரிகுளம்_அகழாய்வுக்குழி-006.jpg :
Primary File :

TVA_EXC_00013_பரிகுளம்_கற்கோடரி-003.jpg

TVA_EXC_00013_பரிகுளம்_கற்கோடரிகள்-004.jpg

TVA_EXC_00013_பரிகுளம்_கல்லாயுதங்கள்-0001.jpg

TVA_EXC_00013_பரிகுளம்_கல்லாயுதங்கள்-002.jpg

TVA_EXC_00013_பரிகுளம்_கற்கோடரிகள்-005.jpg

TVA_EXC_00013_பரிகுளம்_அகழாய்வுக்குழி-006.jpg