MARC காட்சி

Back
மாமல்லபுரம்-கடற்கரை கோயில்
110 : _ _ |a இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
245 : _ _ |a மாமல்லபுரம்-கடற்கரை கோயில் -
346 : _ _ |a 1990-91
347 : _ _ |a வராகச் சிற்பம், சிறிய உருளை வடிவக் கோயில், தீர்த்தக் கிணறு, இராசசிம்மன் கல்வெட்டுகள்
500 : _ _ |a கடற்கரைக் கோயிலை ஒட்டி வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வகழாய்வில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட தூங்கானை வடிவ அமைப்பில் கோயிலின் சுற்று வளாகப்பகுதி இருந்ததற்கான சிதைவுகளும், இதன் நடுவில் சிறிய கோயிலொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. காலத்தின் கோலத்தால் இச்சிறியகோயில் பல்வேறு பகுதிகளாகச் சிதைவுற்றும் காணப்பட்டது. இச்சிறிய கோயிலின் அதிட்டானப்பகுதி மண்மூடிக் கிடந்த இயற்கையான பாறையிலிருந்து செதுக்கப்பட்டுள்ளது. பிறபகுதிகளான பாதம், பிரஸ்தரம், கிரிவம் போன்றவை வெவ்வேறாகப் பிரிந்து காணப்பட்டமையால் இவை சிற்ப விதிப்படி ஒன்றிணைக்கப்பட்டு ஒரு சிறிய கோயிலாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலின் சிகரம் காணப்படவில்லை . இச்சிறிய கோயிலின் உயரம் 3 மீ. ஆகும். அதிட்டானப்பகுதி 0.75 மீ. உயரமுடையது. கிழக்கு நோக்கியவாறு உள்ள இக்கோயிலின் பாத பகுதியின் மேற்குச் சுவற்றின் உட்பகுதியில் புடைப்புச் சிற்பத்தாலான ரிஷாபாரூடர் சிவன் வடிவம் காணப்படுகிறது. ரிஷாபாரூடர் திரிபங்க நிலையில் தனது வாகனமான ரிஷபத்தின் மீது சற்றுச் சாய்ந்த நிலையில் நான்கு கைகளுடன் வீணை மற்றும் திரிசூலம் அகியவற்றைக் கொண்டு விளங்குகிறார். இச்சிறிய கோயிலின் கிரீவப் பகுதியில் கணபதி புடைப்புச் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. பல்லவர் கால கணபதி சிற்பத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இச்சிறிய கோயிலின் தென்பகுதியில் பன்றியின் சிற்பம் ஒன்றும் இவ்வகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழகான சிற்பத்தின் பீடப்பகுதியில் பல்லவ கிரந்தத்தில் கல்வெட்டு வரிகள் காணப்படுகின்றன. பன்றி கிழக்கு நோக்கியவாறு தனது முகத்தை பூமியைத் தொட்ட வண்ணம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. இது வராஹ அவதாரத்தைச் சித்தரிப்பதாக இருக்கலாம். பன்றி வடிவிலான இச்சிற்பம் 1.60 மீ. உயரமுடையது. இதுவும் ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்ட சிற்பமாகும். சிறிய கோயிலின் வடபகுதியில் வட்ட வடிவ அமைப்பில் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட சிறிய கிணறு ஒன்றும் இவ்வகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கிணறு 1 மீ. ஆழமுடையது. கோயிலின் பூசைப் பணிகளுக்கு இக்கிணற்றின் நீர் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இரண்டு கருங்கல் உறைகளால் அமைக்கப்பட்ட இக்கிணற்றின் உட்புற ஓர விளிம்பில் கிழக்குப்பகுதியில் பெண் தெய்வத்தின் உருவமுடன் இரண்டு பணிப்பெண்கள் சாமரம் வீசியவாறு உள்ள புடைப்புச் சிற்பத்தொகுதி காணப்படுகிறது. தூய்மையான நீரினைக் கொண்டிலங்கும் இக்கிணற்றின் விட்டம் 1.20 மீ. ஆகும். மேற்கூறிய மூன்று பகுதிகளையும் சுற்றி இலாட வடிவில் கருங்கற் படிக்கட்டுகள் போன்ற அமைப்புடைய சுற்றுச்சுவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவர்ப்பகுதியின் மையத்தில்தான் சிறிய கோயில் அமைந்துள்ளது. இப்படிக்கட்டுச் சுவரின் தென்மேற்கு மூலையில் படிக்கட்டின் உட்புற விளிம்பிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கட்டடத் தொகுதி அனைத்தும் தமிழகக் கோயிற் கட்டடக் கலை வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தினைப் பெற்றுத் திகழ்கிறது. இக்கோவில் இரண்டாம் நரசிம்மவர்மனின் (இராஜசிம்மனின்) காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம். கடற்கரைக் கோயிலின் தென்பகுதியிலும் தென்மேற்குப் பகுதியிலும் அகழாய்வுகள் மேற்கொண்ட பொழுது கட்டடப்பகுதிகள் பல இடிந்த நிலையில் காணப்பட்டன. தென்மேற்குப் பகுதியில் படிக்கட்டுகளுடன் கூடிய குளம் ஒன்றும் தென்பகுதியில் சிறிய கோயிலொன்றும் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்துள்ளன. இங்கும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய கோயிலின் சுவற்றுப் பகுதியிலும் வராஹ சிற்பத்தின் மீதும் கடப்பாறையால் இடிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. மேலும் வராஹச் சிற்பம் பல – சிதைவுகளாக இருந்து அவை இவ்வகழாய்வினைஅடுத்த பழைய நிலையில் மீண்டும் புனரமைக்கப்பட்டன. எனவே இப்பகுதியில் இருந்த கட்டடங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக சிதைக்கப்பட்டிருத்தல் வேண்டும். கடற்கரைக் கோயிலின் வெளிப்பிரகாரத்தைக் கட்டுவதற்கு முன்பே இச்சிதைவுகள் நடந்திருத்தல் வேண்டும் என்பதும் இவ்வகழாய்வில் தெரியவருகிறது. இவற்றைத்தவிர கிருஷ்ண மண்டபத்திற்கு மேற்கிலுள்ள மலையில் இராயகோபுரத்திற்கு அருகிலும் அகழாய்வுக்குழி ஒன்று அகழப்பட்டது. இங்கு செங்கற்களாலான கட்டடப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதற்கு அருகிலுள்ள சிம்ம இருக்கை என்னும் இடத்திற்கு அருகில் ஒரு மண்மேட்டினை அகாழய்வு செய்த பொழுது பாறையைக் குடைந்தமைக்கப்பட்ட செவ்வக வடிவிலான குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகழாய்வில் வராஹத்தின் பீடப்பகுதியிலும் தூங்கானை வடிவ சுவர்ப்பகுதிகளிலும் கடற்கரைக் கோயிலின் தென்பகுதியில் வட்ட வடிவ கருங்கற் பகுதியின் ஓர விளிம்பிலும் சதுரவடிவ கருங்கற் பகுதியின் ஓர விளிம்பிலும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை யாவும் பல்லவ கிரந்த எழுத்துக்களில் மிக அழகான முறையில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் யாவும் இரண்டாம் இராஜசிம்மனின் பட்டப்பெயர்கள் சிலவற்றைக் கொண்டு விளங்குகின்றன. ஸ்ரீஇராஜசிம்ம, க்ஷத்திரியசிகாமணி, சூடாமணி, க்ஷத்ரசிம்ம, ஸ்ரீபர, இரணஜெய, மஹேஸ்வர, நரேந்திரசிம்ம போன்றவை அவற்றுள் சில.மாமல்லை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டு ஆய்வுகள் நடத்தினால் பல்லவர்களின் சிறந்ததொரு துறைமுக நகரின் வரலாற்றினை மேலும் முழுமையாக அறிய இயலும்.
510 : _ _ |a தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள் [Archaelogical Excavations in Tamilnadu], சு. இராசவேலு, கோ. திருமூர்த்தி, பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
520 : _ _ |a பல்லவர்களின் கட்டடக்கலைத் திறனை உலகெங்கிலும் பறை சாற்றும் மாமல்லபுரம் செங்கற்பட்டு மாவட்டத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் கிழக்குக் கடற்கரையில் சென்னையிலிருந்து 58 கி.மீதொலைவில் அமைந்துள்ளது. பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய மாமல்லபுரம் சங்ககாலம் முதல் விஜயநகரப் பேரரசு காலம் முடிய தனது சிறப்பை நிலை நிறுத்தி வந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் ஆஃப் எரித்ரியன்ஸீ' என்ற நூலிலும் அதற்கடுத்த நூற்றாண்டைச் சார்ந்த தாலமி எழுதிய பயண நூலிலும் மாமல்லபுரம் கடற்கரைத் துறைமுகமாக விளங்கியமை கூறப்பட்டுள்ளது. கி.பி. 7-ஆம்நூற்றாண்டினைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் பாசுரங்களில் மாமல்லை "கடல்மல்லை" என்ற பெயருடன் சிறந்ததொரு துறைமுகப்பட்டினமாக விளங்கியமையை அறிய முடிகிறது. பல்லவர் காலத்தில் இந்நகரம் சிறந்ததொரு துறைமுகநகரமாக விளங்கியதோடு அல்லாமல் தமிழகக் கோயிற் கட்டடக்கலையின் கருவூலமாகவும் விளங்கியது. இத்தகு சிறப்புமிக்க இந்நகரத்தின் பழமைச் சின்னங்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பு உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகத் தெரிவு செய்துள்ளது. தமிழகக் கோயிற் கட்டடக்கலை வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தினைப் பெற்றுத் திகழும் இந்நகரின் கடற்கரைக் கோயிலில் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை 1990-91 ஆம் ஆண்டில் பராமரிப்புப் பணியில் சுற்றுப்புறப் பகுதிகளை அழகுப்படுத்தும் முகத்தான் மேற்பரப்புகள் அகழ்வு மேற்கொண்ட பொழுது மண்ணுக்குள் மறைந்து கிடந்த கோயிற் கட்டடப் பகுதிகளைக் கண்டுபிடித்தது. கடற்கரைக் கோயிலின் வளாகத்தை ஒட்டிய பகுதியில் இருந்த மணற்மேட்டுப்பகுதியைக் கோயிலின் பராமரிப்புக்காக அகற்றிய பொழுது வடபகுதியில் தற்செயலாக சிறிது ஆழத்தில் கட்டடப் பகுதிகள் இருப்பதை இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் சென்னை வட்டத்தினர் கண்டுபிடித்தனர். எனவே இத்துறையின் கண்காணிப்பாளர் முனைவர் பி.நரசிம்மய்யா தலைமையில் முறையான அகழாய்வு, இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
653 : _ _ |a அகழாய்வு, தமிழ்நாடு, தமிழ்நாட்டுத் தொல்லியல் இடங்கள், தொல்லியல், அகழாய்வு இடங்கள், மாமல்லபுரம், செங்கல்பட்டு, மாமல்லை, மகாபலிபுரம், இந்தியத் தொல்லியல் துறை, மத்தியத் தொல்லியல் துறை, இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, கடற்கரைக் கோயில், பல்லவர், இலிங்கம், வராகம், கற்சிற்பங்கள்
700 : _ _ |a இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
710 : _ _ |a இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
752 : _ _ |a மாமல்லபுரம்-கடற்கரை கோயில் |c மாமல்லபுரம் |d செங்கல்பட்டு |f செங்கல்பட்டு
906 : _ _ |a வரலாற்றுக்காலம்
914 : _ _ |a 80.199310639561
915 : _ _ |a 12.616708000529
995 : _ _ |a TVA_EXC_00047
barcode : TVA_EXC_00047
book category : வரலாற்றுக்காலம்
cover images TVA_EXC_00047/TVA_EXC_00047_காஞ்சிபுரம்_மாமல்லபுரம்_அகழாய்வு-0002.jpg :
Primary File :

TVA_EXC_00047/TVA_EXC_00047_காஞ்சிபுரம்_மாமல்லபுரம்_அகழாய்வு-0001.jpg

TVA_EXC_00047/TVA_EXC_00047_காஞ்சிபுரம்_மாமல்லபுரம்_அகழாய்வு-0002.jpg

TVA_EXC_00047/TVA_EXC_00047_காஞ்சிபுரம்_மாமல்லபுரம்_அகழாய்வு-0003.jpg

TVA_EXC_00047/TVA_EXC_00047_காஞ்சிபுரம்_மாமல்லபுரம்_அகழாய்வு-0004.jpg

TVA_EXC_00047/TVA_EXC_00047_காஞ்சிபுரம்_மாமல்லபுரம்_அகழாய்வு-0005.jpg