110 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
245 | : | _ _ |a வசவசமுத்திரம் - |
346 | : | _ _ |a 1969-70 |
347 | : | _ _ |a கூம்பு வடிவ ஜாடி, ரோமானிய ஆம்போரா ஜாடியின் கழுத்துப் பகுதி, இரண்டு வட்ட உறை கிணறுகள், செங்கல் தொட்டி, ரௌலட்டட் பானையோடுகள், ஆம்போரா பானையோடுகள், சிவப்பு பானையோடுகள், சிவப்பு பூச்சு பானையோடுகள், கருப்ப |
500 | : | _ _ |a வசவசமுத்திரம் மாமல்லபுரத்தின் அருகேயுள்ள மற்றொரு கடற்கரை ஊராகும். சங்க கால ஊரான வசவசமுத்திரம் தொண்டை மண்டலத்தின் குறிப்பிடத்தக்க துறைமுகங்களில் ஒன்றாகும். சங்க காலத்தில் மிகுந்த வணிகச் செழிப்புடன் இப்பகுதி விளங்கியுள்ளது. ரோமானியர்களுடனான கடற்வணிகம் சிறப்புற நடைபெற்றுள்ளது. இவ்வகழாய்வில் இரண்டு வட்ட உறைகிணறுகள் அடுத்தடுத்து இருப்பது வெளிப்படுத்தப்பட்டது. இவை செங்கற்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட தொட்டிகள் சாயம் போடுவதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. காஞ்சிபுரத்தின் பட்டு நூல்கள் சாயம் போடப்பட்டு இங்கிருந்து ரோமாபுரிக்கு அனுப்பப் பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வகழாய்வில் கிடைத்துள்ள ரௌலட்டட் பானையோடுகள், ஆம்போரா ஓடுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இங்கு கிடைத்துள்ள சிவப்பு பானையோடுகள், கருப்புப் பூச்சு பானையோடுகள் ஆகியவற்றின் தொழில்நுட்பத்தை நோக்குகையில் அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்துள்ள இதே போன்ற பானையோடுகளை ஒத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குவார்ட்ஸ் மணிகள், அகேட் மணிகள், பச்சைக் கண்ணாடிக் கல் மணிகள், சுடுமண்ணாலான மணிகள் ஆகியவை இவ்வகழாய்வில் கிடைத்துள்ளன. இவையும் வணிக ஏற்றுமதிக்கு பயன்பட்டிருக்கலாம் என்பது அறியப்படுகிறது. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a மாமல்லபுரத்திலிருந்து தெற்கே 11 கி.மீ. தொலைவிலும், வயலூருக்கு வடக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வசவசமுத்திரம் முக்கியமான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சங்க கால துறைமுகப் பட்டினமாகும். இங்கு மேற்கொண்ட கள ஆய்வின் போது கூம்பு வடிவில் ஜாடி மற்றும் ரோமானிய ஆம்போராவின் கழுத்துப் பகுதி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதனால் இப்பகுதி கி.பி.100-200-ஆம் நூற்றாண்டுகளில் ரோமானியர்களுடன் வாணிகத் தொடர்பில் இருந்ததை அறிய முடிகின்றது. அதனால் இவ்விடத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு அதனை உறுதிப்படுத்தும் தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. |
653 | : | _ _ |a வசவசமுத்திரம், காஞ்சிபுரம், அகழாய்வு, தொல்லியல், தமிழக அகழாய்வுகள், துறைமுகப் பட்டினம், ரௌலட்டட், ஆம்போரா, சிவப்பு நிற பானையோடுகள், சாயத் தொட்டி, செங்கல் தொட்டி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a வசவசமுத்திரம் |c வசவசமுத்திரம் |d காஞ்சிபுரம் |
906 | : | _ _ |a கி.பி.1-2 -ஆம்- நூற்றாண்டு |
914 | : | _ _ |a 12.4768347 |
915 | : | _ _ |a 80.1121493 |
995 | : | _ _ |a TVA_EXC_00004 |
barcode | : | TVA_EXC_00004 |
book category | : | வரலாற்றுக்காலம் |
cover images Vasavasamudram_Page_51-2.jpg | : |
![]() |
Primary File | : |