MARC காட்சி

Back
திருத்தங்கல்
110 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
245 : _ _ |a திருத்தங்கல் -
346 : _ _ |a 1994-1995
347 : _ _ |a கண்ணாடி மணிகள், இரும்புத் துண்டு, சிறிய கத்தி, கண்ணாடி வளையல் துண்டுகள், தூபக்கலசம், சுடுமண் பொருள், சுடுமண்ணாலான ஸ்ரீவத்ஸம், கருப்பு, கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்பு மட்பாண்டங்கள், கிண்ணங்கள், தட்டுகள், பானைகள், மூடிகள், சுடுமண் காதணி, கூரை ஓடுகள், வட்டுகள்
500 : _ _ |a

          திருத்தங்கல் அகழாய்வில் நுண்கற்காலம் மற்றும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பண்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டன. சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதஇனம் வாழ்ந்ததற்கான பண்பாட்டுக்கூறுகள் இவ்வகழாய்வின் மூலம் தெரிகின்றன. இவ்வகழாய்வில் நான்கு அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன. நுண்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன.

          இக்கருவிகள் குவார்ட்ஸ், ஜாஸ்பர், செர்ட் ஆகியவற்றால் ஆனவை. கருப்பு, கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்பு மட்பாண்டங்கள், சுடுமண் காதணி, சுடுமண் ஸ்ரீவத்ஸம், கண்ணாடி வளையல்கள், கூரை ஓடுகள், வட்டுகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன.

510 : _ _ |a
  1. B.Sasisekaran , S.Rajavel , ‘Adichanallur: A Prehistoric Mining Site’, Indian Journal of History of Science, 2010. 
  2. T.S.Subramanian, ‘Unearthing a great past’ Frontline, Vol.22, 2005. 
  3. Michel Danino, ‘Vedic Roots of Early Tamil Culture’, Saundaryashrih, Archaeological Studies in the New Millennium, 2008. 
  4. Kenneth A.R.Kennedy, ‘The physical anthropology of the megalith-builders of South India and Sri Lanka’, Australian National University Press, Canberra, 1975. 
  5. தி.ஸ்ரீ.ஸ்ரீதர், இ.ஆ.ப., ‘தமிழக அகழாய்வுகள்’, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2008. 
520 : _ _ |a

          திருத்தங்கல் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். சங்க இலக்கியங்களான நற்றிணை(313, 386), குறுந்தொகை (217) பாடல்களில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது.  சிலப்பதிகாரத்தில் திருத்தங்கல் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், கட்டுரைக்காதையில் இவ்வூர் பிராமணர்களின் குடியிருப்பாகவும் குறிப்பிடப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள திருநின்ற நாராயணப் பெருமாள் கோயில், திருகருநெல்லிநாதசுவாமி கோயில், ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் ஆகியன குறிப்பிடத்தக்கன.

          “ஸ்ரீபாண்டி நாட்டு மதுரோதய வளநாட்டு கருநிலக்குடி நாட்டுத் தேவதான பிரம்மதேயம் திருத்தங்கால்“ என்று 12-ஆம் நூற்றாண்டு ஸ்ரீவல்லபபாண்டியனின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவ்வூரில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1994-95-ஆம் ஆண்டில் அகழாய்வு மேற்கொண்டது. நுண்கற்கால கருவிகள் இங்கு கிடைத்துள்ளன. மேலும் செர்ட், ஜாஸ்பர் போன்ற கற்கருவிகளின் மூலப்பொருட்கள் கிடைத்துள்ளன.

          இவ்வகழாய்வில் நான்கு அகழாய்வுக் குழிகள் போடப்பட்டன. இவற்றுள் ஒன்றில் சுடுமண்ணாலான ஸ்ரீவத்ஸம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இவ்வூர் திருத்தங்கல் என்று அழைக்கப்படுவதற்கான பெயர்க் காரணத்தை இந்த தொல்பொருள் நமக்கு விளக்குகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் திரு நடன.காசிநாதன் அவர்கள் தலைமையில் இந்த அகழாய்வு நடத்தப்பட்டது.

653 : _ _ |a திருத்தங்கல், விருதுநகர், அகழாய்வு, சுடுமண் பொருட்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு, தமிழகம், தொல்பொருட்கள், தொல் பொருள் ஆய்வு
700 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
752 : _ _ |a திருத்தங்கல் |c திருத்தங்கல் |d விருதுநகர் |f சிவகாசி
914 : _ _ |a 9.4807463
915 : _ _ |a 77.8081363
995 : _ _ |a TVA_EXC_00021
barcode : TVA_EXC_00021
book category : வரலாற்றுக்காலம்
cover images TVA_EXC_00021_திருத்தங்கல்_தொல்பொருட்கள்-0014.jpg :
Primary File :

TVA_EXC_00021_திருத்தங்கல்_அகழாய்வுக்குழி-0012.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_தொல்பொருட்கள்-0013.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_தொல்பொருட்கள்-0014.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_தொல்பொருள்-0015.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0001.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0002.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0003.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0004.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0005.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0006.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0007.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0008.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0009.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0010.jpg

TVA_EXC_00021_திருத்தங்கல்_பானைகள்-0011.jpg