தமிழ்நாடு அரசால் முதல் முறையாக நாட்டுடைமையாக்கப்பட்ட நூலாசிரியர். கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழகம் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம் அமைத்துள்ளது. சென்னையிலும், புதுச்சேரியிலும் பாரதியார் வாழ்ந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது.
| ஆசிரியர் பெயர் | மகாகவி பாரதியார் |
| இயற்பெயர் | சி. சுப்பிரமணியன் |
| புனைபெயர்கள் | மகாகவி |
| பிறந்த ஆண்டு | 1882, டிசம்பர் 11 |
| பெற்றோர் | சின்னசாமி - இலக்குமி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | செல்லம்மாள் |
| குழந்தைகள் | தங்கம்மாள், சகுந்தலா |
| பணி | பத்திரிகை ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தேசிய கீதங்கள், பாஞ்சாலி சபதம், பகவத் கீதை, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு |
| பிறந்த ஊர் | எட்டயபுரம் |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| பின்பற்றுவோர் | வ.ரா., பரலி சு. நெல்லையப்பர், பாரதிதாசன் |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | பாரதி |
| நாட்டுடைமை ஆண்டு | 1948 |
| இறப்பு | 1921, செப்டம்பர் 11 |
| இறந்த ஊர் | சென்னை |