தமிழ்நாடு அரசு வனத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு அலுவலகங்களிலுள்ள நூல்கள், இதழ்கள், அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆய்வாதார வளங்களையும் மின்பதிப்பாக்கம் செய்யும் பணியைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்டுவருகிறது. இப்பணியானது வனத்துறை நூலகம், பனகல் மாளிகை, சென்னை மற்றும் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

வனத் துறையின் பல்வேறு அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டுவரும் ஆய்வாதார வளங்களை முறையாக வகைப்படுத்தி, ஏற்கனவே மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்து, மின்பதிப்பாக்கம் செய்யப்படாத ஆவணங்களுக்கு மீத்தரவு உருவாக்கி, மின்பதிப்பாக்கம் செய்யும் பணியைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் செய்துவருகிறது. முதற்கட்டமாக, தற்போதுவரை மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின் நூலக சிறப்பு இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.